சுமுக பயணத்திற்கு வழிவகுக்கும் சீதா

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னம் இயங்கும் எல்லா சிங்­கப்­பூர் விமான நிலைய முனை­யங்­களிலும் சேட்ஸ் நிறு­வன பயணிச் சேவை அதி­கா­ரி­யான 47 வயது திரு­மதி அ.சீதா­லட்சுமி பணி செய்துள்ளார்.

கிட்­டத்­தட்ட 26 ஆண்­டு­க­ளாக இப்­ப­ணி­யில் ஈடுபட்டுவரும் திரு­மதி சீதா சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­நாட்­டுக்கு திரும்­பும் பய­ணி­க­ளின் தேவை­களை பூர்த்தி செய்­ப­வர்.

சக்­கர நாற்­காலி தேவைப்­படும் பய­ணி­க­ளுக்கு அதற்­கு­ரிய ஏற்­பா­டு­கள் செய்­வது, பய­ணி­க­ளுக்கு 'செக் இன்' சேவை வழங்­கு­வது உள்ளிட்டவை இவரது பணிகள்.

கிருமிப் பரவலுக்கு முன் பர ­ப­ரப்­பான வேலைச் சூழ­லி­லி­ருந்த அவருக்கு தற்­போது குறைந்த எண்­ணிக்­கை­யில் பய­ணி­கள் வரு­வது சங்­க­டத்தைத் தரு­கிறது.

இச்சூழலில் அதிக கவ­ன­த்து டன் 'செக் இன்'­ மு­றையை இவர் கையாள வேண்­டும். ஏனெ­னில் வெவ்­வேறு நாடு­களில் கொவிட்-19 பயணக் கட்­டுப்­பா­டு­களும் விதி­மு­றை­க­ளும் இருப்பதால், உ­ரிய படி­வங்­கள் (உதா­ர­ணத்­திற்கு கொவிட்-19 பரி­சோ­தனை முடிவு) அவர்­களிடத்தில் இருப்பதை இவர் உறு­தி­செய்ய உத­வு­கி­றார்.

பய­ணி­கள் போகும் நாட்­டுக்குள் நுழைய அனு­மதி கிடைக்­கா­மல் அவர்கள் மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பப்­படுவதை அது தடுக்­கும்.

டெல்டா ரக கிரு­மித்­தொற்று தீவி­ர­ம­டைந்துள்ள நிலை­யில், அதற்­கு­ரிய பாது­காப்பு சாத­னங்­க­ளை­யும் அணிந்து திரு­மதி சீதா முனை­யம் மூன்­றில் பணி­களை மேற்கொள்கிறார்.

சில குறிப்பிட்ட இடங்­களில் 'என்95' ரக முகக்கவ­சத்­தை­ அணிய வேண்­டும்.

பய­ணி­க­ளு­டன் நேரடி தொடர்­பில் இருப்­ப­தால் கிரு­மித்­தொற்று அவ­ரை­யும் தாக்க வாய்ப்­புண்டு. ஆனால் அஞ்­சிட அவ­சி­ய­மில்லை என்­றார் திரு­மதி சீதா.

"தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாலும் தொடர்ந்து எங்­க­ளி­டம் தெரி­விக்­கப்­படும் பாது­காப்பு வழி­மு­றை­களை சரியாக பின்­பற்­று­வ­தாலும் தைரி­யத்­து­டன் பணி­யில் ஈடு­ப­டு­கி­றோம்," என்றார் அவர்.

"விமான நிலை­யத்­தில் பயணிச் சேவை அதி­கா­ரி­கள் இல்­லாத பட்­சத்­தில் தற்­போது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை உட­னே சந்திக்க விரும்­பும் பய­ணி­கள் மன­உ­ளைச்­ச­லுக்கு ஆளா­க­லாம். செக்-இன் அனு­ப­வத்தை சுமுக­மாக முடித்­துத் தந்து, தாங்­கள் பய­ணம் செல்­லும் நாடு­களில் அவர்­க­ளுக்கு அனு­மதி கிடைக்­கும் என்­ப­தை­யும் உறு­திப்ப­டுத்தி அவர்­கள் விரை­வில் குடும்­பத்­தி­ன­ரோடு இணைய கடப்­பாடு கொண்­டுள்­ளோம்," என்றார் அவர்.

கட்­டுப்­பா­டு­கள் படி­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு நண்­பர்­களுடனான சந்திப்புகளை மீண்டும் தொட­ங்கவும் அன்­பு­கு­ரி­ய­வர்­க­ளு­டன் சேர்ந்து வெளிநாடு செல்­ல­வும் இவர் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!