நீர் இன்றி நிலையாது உலகு

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

நீரின் முக்­கி­யத்துவத்தை காலம் தோறும் தமிழ் இலக்கியங்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

திருக்குறளின் முதல் 10 குறள்­கள் கட­வுள் சிறப்பு பற்­றி­யவை. 11ஆம் குற­ளில் வான் சிறப்பைப் பாடு­கிறது. 'நீர்­இன்றி அமை­யாது உல­கெ­னின் யார்­யார்க்­கும் வான்­இன்று அமை­யாது' என்று எழு­தி­னார் திரு­வள்­ளு­வர்.

தண்­ணீர்த் தட்­டுப்­பாடு இல்­லாத செழிப்­பான காலத்­தி­லேயே அதன் சிறப்பு பற்றி வள்­ளு­வர் எழு­தி­யதை வைத்து, தண்­ணீ­ரின் முக்­கி­யத்­து­வத்தை நாம் உணர வேண்­டும் என கூறி­னார் விரு­து­பெற்ற தமிழ் எழுத்­தா­ளர் திரு சோ. தர்­மன்.

தேசிய நூலக வாரி­யத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெ­றும் வாசிப்பு விழா 2021இல் சிறப்பு எழுத்­தா­ள­ராக அழைக்­கப்­பட்ட திரு சோ. தர்­மன், நீரின் முக்­கி­ய­வத்­து­வம் பற்றி பேச பொருத்­த­மா­ன­வர்.

நீர் மேலாண்மை, நீர்­வ­ளங்­கள் குறை­வது ஆகி­ய­வற்­றைக் கரு­வா­கக் கொண்டு அவர் எழு­திய 'சூல்' நாவல், 2019இல் இந்­தி­யா­வின் உய­ரிய சாகித்­திய அகா­டமி விரு­தைப் பெற்­றது.

நூலக வாரி­யம் ஏற்­பாடு செய்த நிகழ்­வில், பழ­மை­யான வேளாண்­தொ­ழி­லால் ஏற்­பட்ட நன்­மை­கள், நீர் நிலை மற்­றும் சுற்­றுப்­பு­றப் பாது­காப்பு, நவீ­ன­ம­ய­மாக்­கல் கார­ண­மாக வேளாண் தொழி­லின் சீர­ழிவு, வன­வி­லங்­கு­கள் அழிந்து போகும் அச்­சு­றுத்­தல், இயற்­கை­யில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள் ஆகி­யவை குறித்து அவர் உரையாற்­றி­னார்.

27 ஜூன் மாலை 6 மணி அள­வில் தமிழ் நூல­கச் சேவை­கள் பேஸ்­புக் பக்­கத்­தில் இந்த நிகழ்ச்சி நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

1980களி­லி­ருந்து எழுதிவரும் திரு தர்­மன் தூர்வை, கூகை உள்­ளிட்ட 4 நாவல்­களும் 76 சிறு கதை­களும் எழு­தி­யுள்­ளார். ஒவ்­வொரு நாவ­லுக்கு இடையே கிட்­ட­தட்ட 10 ஆண்­டு­கள் இடை­வேளை எடுத்து, கலா­சா­ரம் மற்­றும் பண்­பாடு சார்ந்த தக­வல்­க­ளைச் சேக­ரிப்­பதை இவர் வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்.

கடந்த ஆண்டு இவ­ரது 'பதி­மூ­னா­வது மைய­வாடி' நாவல் வெளி­யா­னது. கிருஸ்­துவ கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளைப் பற்­றிய இந்த நாவலை எழுத கன்­னி­யாஸ்­திரி மடத்­தில் 10 ஆண்­டு­கள் வசித்­தார்.

"சூல் நாவ­லின் பெயர் கார­ணம் குறித்து பேசிய திரு தர்­மன், "10 மாத கர்ப்­பி­ணிப் பெண்ணை நிறை சூலி என்­போம்.

"உல­கத்­திற்கு ஓர் உயிரை புதி­தாக கொடுக்­கக் கூடிய தாயை சூலி என்று சொல்­கின்­ற­போது, பற­வை­கள், மனி­தர்­கள், விலங்­கு­கள், நீர்­வாழ் உயி­ரி­னங்­கள், பூச்­சி­கள் போன்ற பல்­வ­கை ­உ­யி­ரி­னங்­க­ளுக்கு நீர்­நி­லை­களும் கம்­மாய்­களும் தாயாக விளங்­கு­வதை நான் உணர்த்த விரும்­பி­னேன். ஆத­லால் ஒவ்­வொரு நீர்­நி­லை­யை­யும் சூலி என்­றேன்" என்று விளக்­கி­னார்.

"இந்­தி­யா­வில் 60-70% மக்­க­ளுக்கு விவ­சா­யமே தொழில். ஆனால், இதை மையப்­ப­டுத்தி வரும் படைப்­பு­கள் மிகக் குறைவு. இதைப் பற்றி பதிவு செய்ய வேண்­டிய விஷ­யங்­கள் இன்­னும் நிறைய உள்­ள­தால், விவ­சா­யம் சார்ந்த எழுத்­துக்­க­ளைத் தேடி படிப்­பேன்," என்­றார் திரு தர்­மன்.

ஓரிரு மாதங்­களில் 'வெளவ்­வால் தேசம்' என்ற புதிய நாவலை வெளி­யிட இருக்­கி­றார் திரு தர்­மன். பிரிட்­டிஷ் ஆட்சி, ஜமீன்­தார்­க­ளின் வாழ்க்கை, சுதந்­தி­ரக் காலம் ஆகி­ய­வற்­றைப் பற்றி இந்த நாவல் ஆராய்ந்­துள்­ளது.

'சோ. தர்­ம­னு­டன் ஒரு சந்­திப்பு', வாசிப்பு விழா 2021ன் தொடர்­பில் இன்று மாலை 6 மணிக்கு நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!