பெருங்கைகளுக்கு பிஞ்சுக்கரங்களின் உதவி

ஐம்பது தங்குவிடுதிகளில் வசிக்கும் 6,800க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு 'கப்கேக்'குகளையும் 'குக்கீஸ்'களையும் பொட்டலம் கட்ட உதவிய சிறுவர்கள்.

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

பள்ளி விடு­மு­றை­யில் பிள்­ளை­கள் விளை­யாட்­டில் அதிகம் ஈடுபடுவது வழக்கம். ஆனால் 10 வயது சிறுமி ராகா­வும் அவ­ரது தம்பியான ஆறு வயது ஓம்­மும் ஓர் அர்த்­த­முள்ள வகையில் நேரத்தைச் செலவிட்டுள்ள னர். சில வார ­இ­றுதி நாட்­களில் அவர்கள் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக வீட்­டில் 'சாக்­லெட் குக்­கீஸ்' பொட்டலங்களைக் கட்டி உத­வி­ய தோடு அவர்­க­ளுக்கு வாழ்த்து அட்­டை­க­ளை­யும் வழங்கியுள்ளனர்.

ஜூன் பள்ளி விடு­முறை தொடங்­கி­ய­தி­லி­ருந்து இவர்­களைப் போன்று 150க்கும் மேற்­பட்ட பிள்­ளை­கள் சுமார் 50 தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கும் 6,800க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு 'கப்­கேக்'கு க­ளை­யும் 'குக்­கீஸ்'களை­யும் பொட்ட லம் கட்ட உத­வி செய்துள்ளனர்.

இம்­மு­யற்­சியை 'AGWO' எனும் வெளி­நாட்டு ஊழி­யர் நலத் தொண்­டூ­ழிய இயக்­கம் கடந்த ஜூன் மாதம் நடுப்பகுதியிலிருந்து வழி­ந­டத்தி வரு­கிறது.

"தற்­போ­தைய கொவிட்-19 கட்டுப்பாடுகளால் (உயர்த்­தப்­பட்ட விழிப்பு நிலை) தங்­கு­வி­டு­தி­களில் இருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்களது பொழுது­போக்கு நிலை­யத்­திற்குச் செல்ல முடியாது.

இந்தச் சூழ்நிலையில் தாய­கத்­தில் உள்ள குடும்­பத்­தி­ன­ரைப் பற்றி நினைத்­துக்­கொண்­டி­ருக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக நாம் இருக்­கி­றோம் என்­பதை உணர்த்த இம்­மு­யற்சி தொடங்கப்பட்டது," என்று தெரி­வித்­தார் 'AGWO' இயக்­கத்தை நிறுவிய உறுப்­பி­னரான திரு சாமு வேல் கிஃப்ட் ஸ்டீ­பன், 44.

"வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கும் இளம் பிள்­ளை­கள் உள்­ள­னர். தாய­கத்­தி­லி­ருக்­கும் சொந்தப் பிள்­ளை­களை வெகுநாட்­க­ளாக பார்க்­கா­மல் இருக்கும் அவர்களுக்கு இங்­கி­ருக்­கும் பிள்­ளை­க­ளி­ன் அன்­ப­ளிப்­பு­கள் ஆறு­தலை அளிக்கும் என்பதால் இதற்கு ஏற்­பாடு செய்­தோம்," என்­றார் 'AGWO' தொண்­டூழியர்­களில் ஒரு­வ­ரான தொழி­ல­தி­பர் திரு­மதி ம.பிரியா, 53.

சிறுமி ராகாவின் தாயாரான திருமதி பார்வதி, 40, தம் ஒட்டு மொத்த குடும்பத்தையே இம்முயற்சி யில் ஈடுபடுத்தினார்.

தமது 68 வயது தாயா­ரான திரு வாட்டி மால­தி­யு­டன் சேர்ந்து தாமும் உணவைத் தயாரித்து, பொட்­டங்­களைக் கட்டி கொடுத்தார். அவ­ரது கண­வர் ராகே‌ஷ், 41, குக்­கீஸ் பொட்­ட­லங்­களை வெவ்­வேறு வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதிகளுக்கு வாக­னம் மூலம் அனுப்ப உத­வி­யுள்­ளார்.

"கடந்த 2019ஆம் ஆண்­டி­லி­ருந்து வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உணவு சமைப்­பது, உணவு விநி யோகம் செய்­வது, ஆடை­கள், அறை­க­லன்­களைச் சேக­ரித்து வழங்கு­வது போன்ற தொண்­டூ­ழிய முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கி­றேன். இந்த பொட்­ட­லம் கட்­டும் முயற்­சி­யில் என் பிள்­ளை­க­ளின் நண்­பர்­களும் அவர்­க­ளது பெற்­றோர்­களும் உத­விக்­க­ரம் நீட்­டி­யுள்­ள­னர்," என்று காப்­பு­றுதி நிறு­வ­னத்­தில் பணியாற்­றும் திரு­மதி பார்­வதி மேலும் கூறி­னார்.

ஜூன் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து ஒவ்­வொரு சனிக்­கி­ழமை மாலை­யும் தீவின் வெவ்­வேறு பகு­தி­களில் உள்ள ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளுக்கு 'குக்கீஸ்', 'கப்கேக்' பொட்­ட­லங்­கள் தொண்­டூ­ழி­யர்­கள் உத­வி­யு­டன் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன.

இந்­தப் பொட்­ட­லங்­களை ெபற்ற வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் மகிழ்ச்­சிக்கு அள­வேயில்லை.

"சிறு­சிறு அழ­குப் பொட்­ட­லங் களில் பிள்­ளை­கள் 'குக்கீஸ்', 'கப் கேக்'குகளை வைத்து, அவற்று டன் வாழ்த்து எழு­திய அட்­டை­களை இணைத்­தி­ருந்­த­னர். அவர்­க­ளு­டைய முயற்சி எங்­களை நெகி­ழச் செய்து விட்­டது," என்று கூறி­னார் தாகூர் லேன் தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் திரு சுப்­பையா ஞான­மணி, 29.

புதுக்­கோட்­டை­யி­லி­ருந்து சிங்­கப்பூர் வந்து கடந்த ஏழு ஆண்­டு­ க­ளாக பணி­யாற்­றும் இவர், குளிர்­சா­தன தொழில்­நுட்­பர் ஆவார்.

இத்­தொண்­டூ­ழிய முயற்சி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீடிக்­கும் என்று ஏற்­பாட்­டுக் குழு­வி­னர் தெரிவித்­துள்­ள­னர்.

இதன் மூலம் குறைந்­தது 12,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களை சென்­ற­டை­வது குழு­வின் இலக்கு.

இவை தவிர, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக மெய்­நி­கர் தேசிய தினக் கொண்­டாட்டக் கலை நிகழ்ச்­சியை மனி­த­வள அமைச்­சு­டன் இணைந்து 'AGWO' அமைப்பு ஏற்­பாடு செய்­துள்­ளது.

'AGWOSG' ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!