‘தாதிமைத் துறை கற்பித்த வாழ்க்கைப் பாடம்’

இந்து இளங்­கோ­வன்

நாற்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக தாதி­ய­ாக பணி­பு­ரிந்­து­வ­ரும் தமது அம்மா காந்­தி­ம­தியைப் பார்த்து தாமும் ஒரு தாதி­ய­ராக வேண்­டும் என்ற கனவு ஷஷிக்கு பதின்ம வயதிலிருந்தே இருந்­தது.

சாதாரண நிலைத் தேர்வுக்கு பிறகு 2007ஆம் ஆண்டு தாதிமைத் துறையில் பட்டயம் பெற்று, 2009ஆம் ஆண்டு தேசிய சேவையை முடித்த கையோடு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியாக தனது பணியைத் தொடங்கினார் ஷஷி சந்திரசேகரம், 35.

ஷஷி சிறு­வ­ய­தாக இருக்­கும்­பொ­ழுது பெற்­றோர்­களில் ஒரு­வ­ரா­வது எப்­போ­தும் பிள்­ளை­யு­டன் இருக்க வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் ஷஷி­யின் தாய் இரவு நேர வேலைக்­கும் தந்தை பகல் நேர வேலைக்­கும் சென்­ற­னர். இது­போன்ற பல தியா­கங்­கள் புரிந்து வேலைப் பளு­வை­யும் குடும்­பத்­தை­யும் நன்­றாக நிர்­வ­கித்து வந்­தார் ஷஷி­யின் தாயார் திரு­மதி காந்­தி­மதி.

"எவ்­வ­ளவு சோர்வாக இருந்­தா­லும் தாதிமைத் துறை­யின் மீதுள்ள பற்றும் அர்ப்­ப­ணிப்­பும் எனது அம்மா ­விற்கு துளி­யும் குறை­யாது. வீட்­டிற்கு வந்து வேலை இடத்­தில் நடந்த பல சுவாரசிய­மான கதை­களை எங்­க­ளுக்­குச் சொல்­வார். அவர் சந்­தித்த நோயா­ளி­கள், அவர்­க­ளது உடல் பிரச்­சி­னை­கள், அவற்றை அவ­ரது குழு எவ்­வாறு கையாண்­டது போன்ற பல கதை­களைக் கேட்­டி­ருக்கிறேன். இது என்­னுள்ளே தாதியாக வேண்­டும் என்ற ஆசையை மேலும் தூண்­டி­யது." என்­றார் ஷஷி.

கிரு­மித்­தொற்று தொடங்­கிய நாளி­லி­ருந்து சிங்­கப்­பூர் சுகா­தாரத் துறைக்­கும் மருத்­து­வர்­க­ளுக்­கும் தாதி­யர்­க­ளுக்­கும் புது­ப்புது பொறுப்பு களும் சவால்­களும் வந்து சேர்ந்­தன.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நோய்த் தொற்று கண்­ட­றி­யப்­படு வதற்கு முன்பு, ஜன­வரி 2020இல் அவ­சர மருத்­து­வப் பிரி­வில் தலைமைத் தாதி பொறுப்பை ஷஷி ஏற்­றுக்­கொண்­டார்.

அப்­போது அவ­சர மருத்­து­வப் பிரிவு, கிரு­மிப்­ப­ர­வலை எதிர்கொள்­ளும் முயற்­சி­யில் பெரும் பங்கு வகித்­தது. கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு மத்தி­ யில் அவ­ச­ர­கால சிகிச்­சையை பாது­காப்­பாக வழங்­கு­வ­தற்­காக தனது 250 பேர் கொண்ட வலு­வான குழுவை ஷஷி வழி நடத்­தி­ னார்.

ஒரு தாதியாக சிறக்க, முக்கியமாக சேவை மனப்பான்மை அவசியம் என்கிறார் ஷஷி. எதிர் பார்ப்புகள் இன்றி சேவை புரியும் எண்ணம் இருந்த தால்தான் எவ்வித இன்னல்கள் வந்தாலும் ஒரு தாதியராக தமது கடமையை ஊக்கமுடன் செய்ய முடியும் என்­பது அவ­ரது அசைக்க முடி­யாத நம்­பிக்கை.

ஒவ்­வொரு நாளும் தாதிமைத் துறை இவ­ருக்கு பல வாழ்க்கைப் பாடங்­களைக் கற்­றுக்­கொ­டுத்து வருகிறது. அவர் சந்­திக்­கும் நோயா­ளி­கள், அவர்­க­ளது குடும்­பங்­கள், சக தாதி­யர்­கள் என ஒவ்­வொ­ரு­ வ­ரும் அவ­ர­வர் வாழ்க்­கை­யில் பல போராட்டங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

"ஒரு முறை வாகன விபத்­தி­னால் அனு­ம­திக்­கப்­பட்ட ஒரு­வர் இறந்­து­விட்­டார். அவர் விபத்­தில் சிக்­கு­வ­தற்கு முன்பு வீட்­டில் தனது மனை­வி­யு­டன் பெரிய சண்டை நடந்­துள்­ளது. கோபத்­து­டன் வீட்டை­ விட்டு கிளம்பிச் சென்­ற­போ­து­தான் சாலை­ விபத்து நிகழ்ந்துள்­ளது. இது, அவரது மனை­விக்கு பெரிய வேத­னை­யை­யும் வருத்­தத்தையும் அளித்­தி­ருக்­கும். கண­வனை இறுதி­ யாக சந்­தித்த தரு­ணம் ஒரு நல்ல நிறை­வான தரு­ண­மாக அமைந்­தி­ருக்கக்கூடாதா என்று அவர் நினைத்­துக் ­கொண்­டி­ருப்­பார்.

"இந்தச் சம்­ப­வம் என்­னுள் சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. எப்­போ­தும் நமது அன்­பிற்­கு­ரி­ய­வர்­களை அலட்­சி­யப்படுத்­தா­மல் கிடைக்­கும் நேரமெல்­லாம் அன்பை வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்­பதை அது உணர்த்­தி­யது." என்­றார் ஷஷி.

நமது வாழ்க்கை நிச்சயமற்றது, ஒவ்வொரு தருணத்தையும் நமக்கு பிடித்த வகையில் நம்மைச் சுற்றி இருப்போருக்கு நன்மை தரும் வகையில் வாழப் பழக, ஷஷிக்கு தாதிமைத் துறை கற்றுத் தந்துள்ளது.

சிங்கப்பூர் இன்று தாதியர் தினத்தை கொண்டாடுகிறது. ஆகஸ்ட் 1 சிங்கப்பூரில் தாதிமை துறை வளர்ச்சியின் ஆரம்பக்காலத்தைக் குறிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!