தாதிமை இல்லங்களுக்கு இடையே சவால் போட்டி

பல­வீ­ன­மா­க­வும் அந்த நிலைக்­குச் செல்­லும் அபா­யம் உள்ள முதிய வர்­களும் அர்த்­த­முள்ள நட­வ­டிக்கைகளைப் பின்­பற்ற முடி­யும் என்­பதை எடுத்­துக்­காட்­டும் வித­மாக புத்­தாக்கத்­து­டன் வடி­வ­மைக்­கப்­பட்ட சவால் போட்­டி­கள் ஏற்­பாடு செய்­யப்பட்­டுள்­ளன.

தாதிமை இல்­லங்­களில் வசிப் பவர்கள் பங்கேற்கும் வகையில் இந்­தப் போட்­டி­க­ளுக்கு சொங் பாங் சமூக விளை­யாட்டு மன்­ற­மும் ஸ்ரீ நாரா­யண மி‌‌ஷன் தாதிமை இல்­ல­மும் இணைந்து ஏற்­பாடு செய்­தன.

'ஏஐசி' எனும் ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்பு, ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வு­டன் கடந்த மாதம் 27ஆம் தேதி போட்டி கள் நடை­பெற்­றன.

ஸ்ரீ நாரா­யண மி‌‌ஷன் தாதிமை இல்­லத்­தில் சோத­னை­யின் அடிப் படை­யில் சவால் போட்டி நடத்­தப் பட்­டது.

பின்­னர் இதர இல்­லங்­களில் உள்ளவர்­க­ளுக்­கும் போட்டி ஏற்­பாடு செய்­தால் முதி­யோர் சுவா­ர­சி­ய­மாக ஈடு­ப­டு­வார்­கள் என்ற கருத்து எழுந்­தது.

அதன் அடிப்­ப­டை­யில் ஈசூனில் உள்ள 'ஆல் செயின்ட்ஸ் ஹோம்', ஸ்ரீ நாரா­யண மி‌‌ஷன், சுவாமி ஹோம் எனும் சன்­‌‌ஷைன் வெல்­ஃபேர் ஆக்­‌‌ஷன் மி‌‌ஷன், வில்லா ஃப்ரான்­சிஸ் முதி­யோர் இல்­லம் ஆகிய நான்கு தாதிமை இல்­லங்­களில் வசிக்­கும் குடி­யி­ருப்பாளர் ­க­ளுக்கு இடையே மாற்றியமைக்­கப்­பட்ட விளை­யாட்டு நடத்தப் பட்டது.

நான்கு இல்­லங்­க­ளி­லும் தனித் தனியே போட்­டி­கள் நடை­பெற்­றா­லும் மெய்­நி­கர் தளம் வழி நான்கு அமைப்­பு­களும் மின்­னி­லக்க முறை யில் இணைக்­கப்­பட்டிருந்தன.

சக்­கர நாற்­காலி பந்­த­யம், 'ஸ்போர்ட் ஸ்டேக்­கிங்', 'லேடர் டாஸ்' ஆகிய மூன்று போட்­டி­களில் அவர்­கள் பங்­கேற்­ற­னர்.

நான்கு இல்­லங்­க­ளைச் சேர்ந்த குறிப்­பிட்ட அதி­கா­ரி­கள் இந்­தப் போட்­டி­களை நடத்­து­வ­தற்­காக மூன்று மணி நேர விளை­யாட்­டுப் பயிற்­சிக்­குச் சென்று பயிற்சி பெற்றனர்.

போட்­டி­க­ளுக்­குத் தேவை­யான தள­வா­டங்­களை வழங்கி இரு அமைப்­பு­கள் ஆத­ரவு அளித்­தன.

சட்ட, உள்­துறை அமைச்­ச­ரும் நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கா.சண்­மு­கம் போட்­டி­களில் கலந்­து­கொண்டு சிறப்­பு சேர்த்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!