ஒன்றுபட்ட உணர்வை வெளிக்காட்டும் தேசிய தின அலங்காரம்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கத்­தி­லி­ருந்து நாடு இன்­னும் விடு­ப­டா­தி­ருக்­கும் நிலை­யில், வெளி­ந­ட­மாட்­டத்­தைக் குறைத்­துக் கொண்­டி­ருக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­ க­ளுக்கு உற்­சா­கம் ஊட்ட தொண்­டூ­ழி­யர்­கள் கைகோர்த்­துள்­ள­னர்.

கிரு­மித்­தொற்­றுக் கட்­டுப்­பா­டு­ க­ளைக் கடைப்­பி­டித்­த­வாறு தேசிய தினத்தை முன்­னிட்டு வீட­மைப்­புப் பேட்­டையை அலங்­க­ரிப்­ப­தற்­காக பீஷான் ஈஸ்ட் பிரிவு மூன்றின் வசிப்­போர் குழு களத்­தில் இறங்­கி­யது.

கடந்த 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து அந்த வசிப்­போர் குழு­வில் தொண்­டூ­ழி­ய­ரா­கச் செயல்­பட்டு வரு­கி­றார் திரு­மதி ரா. சித்ரா நாயுடு, 55.

'போத்­தல்' மூடி­கள், 'பிளாஸ்­டிக்' மூடி­கள், தாளால் ஆன தட்­டு­கள் போன்ற மறு­ப­ய­னீடு செய்­யக்­கூ­டிய பொருட்­க­ளைக் கொண்டு அலங்­கா­ரப் பொருட்­களை உரு­வாக்­கும் முயற்­சி­யில் இவர் ஈடு­ப­ட்­டார்.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளை­யும் இதில் ஈடு­ப­டுத்­தும் நோக்­கில் அவர்­க­ளி­ட­மி­ருந்து ஜூன் மாதத்­தி­லி­ருந்து அலங்­கா­ரத்­திற்­குத் தேவை­யான மறு­ப­ய­னீட்­டுப் பொருட்­கள் சேக­ரிக்­கப்­பட்­டன.

'ரெட் லயன்ஸ்' வான்­குடை சாகச வீரர்­களைக் கெள­ர­விக்க, பிளாஸ்­டிக் மூடி­களைக் கொண்டு சிறிய வான்­குடை மாதி­ரி­கள் செய்­யப்­பட்­டன.

பழைய குறும்வட்­டு­களுக்கு வெள்­ளை­நிற வண்­ணம் தீட்டி நீண்ட சிவப்­பு­நி­றத் துணி­யில் அவற்றை கோர்­வை­யாக இணைப்­பது, பல்­லின மக்­கள் கைகோர்த்து நிற்­கும் கேளிக்­கைச் சித்­தி­ரங்­களை தாளால் ஆன தட்­டு­களில் வரை­வது ஆகி­யவை இந்த அலங்­கா­ரங்­களில் அடங்­கும்.

திரு­மதி சித்­ரா­வும் அவ­ரது சகத் தொண்­டூ­ழி­யர் திரு­மதி ‌‌ஷரிந்தர்ஜித் கோர் என்­ப­வ­ரும் இரண்டு மாதங் ­க­ளாக இவற்­றைப் பொறு­மை­யாக வீட்­டில் இருந்­த­வாறு வடி­வ­மைத்­த­னர்.

வடி­வ­மைத்த அலங்­கா­ரங்­களை வீட­மைப்­புப் பேட்டை புளோக்கு களின் மூன்று இணைப்­புப் பாதை­களில் பொருத்துவதற்கு அவர்களது கண­வன்மார் உதவி புரிந்­த­னர்.

"அலங்­கா­ரங்­களைப் பொருத்திய போது சக குடி­யி­ருப்­பா­ளர்­கள் எங்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தது மகிழ்ச்­சி­யைத் தந்­தது.

"குடி­யி­ருப்­பா­ளர்­கள் அலங்­கா­ரங்­க­ளின் முன்னால் நின்று புகைப்­ப­டம் எடுத்­துக்­கொண்­ட­தும் மிகுந்த திருப்தி அளித்­தது," என்­றார் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தின் முன்­னாள் ஊழி­ய­ரான திரு­மதி சித்ரா.

"ஒரு சிங்­கப்­பூ­ர­ராக கலை­யின் வழி தேசிய தினக் கொண்­டாட்­டத்­திற்­குப் பங்­க­ளிக்க முடிந்­தது எனக்­குக் கிடைத்த பேறு. எங்­கள் முயற்சி குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு தேசிய தினத்­தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்த உத­வும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் 49 வயது இல்­லத்­த­ரசி ‌‌ஷரிந்தர்­ஜித் கோர்.

'ஒன்­றி­ணைந்த நமது சிங்­கப்­பூர் உணர்வு' என்ற இவ்­வாண்­டின் தேசிய தினக் கொண்­டாட்­டத்­தின் கருவை மைய­மா­கக் கொண்டு அலங்­கா­ரங்­கள் உரு­வாக்­கப்பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட திரு­மதி சித்ரா, ஒற்­று­மை­யு­டன் இத்­தொற்று காலக்­கட்­டத்­தி­லி­ருந்து மீண்டு வரு­வோம் என்று நம்­பிக்கை கொண்­டுள்­ளார்.

- செய்தி: ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!