கவிதைவழி வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்த மாணவர்கள்

இந்து இளங்­கோ­வன்

உற­வு­க­ளைப் பிரிந்து, வேறு நாடு வந்து, மாறு­பட்ட சமூ­கத்­தோடு வித்­தி­யா­ச­மான சூழ­லில் வசிக்­கின்­ற­னர் நமது வெளி­நாட்டு ஊழி­யர்­கள். நம் சாலை­கள், வீடு­கள், கட்­ட­டங்­கள் எனப் பல­வும் அவர்­க­ளது வியர்­வை­யின் முத்­து­க­ளாக நிற்­கின்­றன.

நமது மாண­வர்ச் செல்­வங்­கள் சமூ­கத்­தின் அடித்­த­ளம். அவர்­கள் சமூ­கத்­தில் காண்­பவை, அனு­ப­விப்­பவை, கற்­றுக்­கொள்­பவை ஆகி­ய­வற்­றைக் கொண்டு தங்­களின் எண்­ணங்­க­ளைச் செதுக்­கிக்­கொண்டு வரு­ப­வர்­கள். இப்­படி நமது சமூ­கத்­தின் இரு முக்­கி­யப் பிரி­வி­னர் சந்­திக்­கவோ கலந்­து­ரை­யா­டவோ வாய்ப்­பு­கள் அதி­கம் இருப்­ப­தில்லை. அந்த வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தது சமூ­கம் என்ற கருப்­பொரு­ளைக் கொண்டு அமைந்த இந்த ஆண்­டின் சிங்­கப்­பூர் கவிதை திரு­விழா.

'கவி­தை­களில் ஒன்­றி­ணைப்பு: மாண­வர்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இடை­யி­லான கவிதை சொல்­லா­டல்' என்ற இந்த நிகழ்­வில் ஏழு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர். சிங்­கப்­பூ­ரில் வசிப்­பது பற்­றி­யும் தங்­க­ளு­டைய சொந்த நாடு­களில் அனு­ப­வித்த வாழ்க்கை பற்­றி­யும் கவிதை வடி­வில் படைத்­த­னர் இவர்­கள்.

மேலும் தொடக்­கக்­கல்­லூரி, உயர்­நிலைப் பள்ளி மாண­வர்­கள் அறு­வர், சமூ­கம் சந்­திக்­கும் சவால்­கள் பற்றி கவிதை பாணி­யில் வெளிப்­ப­டுத்­தி­னர்.

பெஞ்­சுரு வெளி­நாட்டு ஊழி­யர் தங்கு­வி­டு­தி­யில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன. பல மாதங்­கள் சுதந்­தி­ர­மாக வெளியே போய் வர முடி­யா­மல் தங்­கி­யி­ருக்­கும் சிவ­நே­ச­னுக்கு ஆறு­த­லா­க­வும் வேத­னை­க­ளின் வடி­கா­லா­க­வும் இருப்­பது கவி­தை­கள்­தான் என்­கி­றார்.

மூன்று ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் கொள்­மு­தல் துறை­யில் பணி­பு­ரிந்­து­வ­ரும் சிவ­நே­சன், 'இது நம்­மு­டைய பொம்மை நிறத்தை மாற்­ற­லாம் வா!' என்ற சிந்­தனை­யைத் தூண்­டும் கவி­தையை எழுதி படைத்­தார். வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளது திற­மை­களை வெளிப்­ப­டுத்த இது­போன்ற கவிதை நிகழ்­வு­கள் நல்­ல­தொரு தள­மாக அமை­வ­தாக கூறி­னார். மேலும், சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளின் கண்­ணோட்­டத்தை அவர்­க­ளது கவி­தை­கள்­வழி அறிந்­து­கொண்­டது தமக்­குப் புத்­து­ணர்ச்சி தந்­த­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரால் வெகு­வா­கப் பேசப்­பட்ட '$alary Day' (சம்­பள நாள்) என்­னும் 13 நிமிட குறும்­ப­டத்தை எடுத்த வெளி­நாட்டு ஊழி­யர் மாத­வ­னும் இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்டு தனது கவி­தை­யைப் படைத்­தார். இம்­மா­தம் 8ஆம் தேதி­யன்று நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சியை தமி­ழ­கத்­தின் புகழ்­பெற்ற கவி­ஞர், சிறு­கதை ஆசி­ரி­யர், கட்­டு­ரை­யா­ளர் சாம்­ராஜ் வழி­ந­டத்­தி­னார். 'என்று தானே சொன்­னார்­கள்' எனும் கவி­தைத் தொகுப்பு, 'பட்­டா­ளத்து வீடு', 'ஜார் ஒழிக' ஆகிய இரண்டு சிறு­க­தைத் தொகுப்­பு­கள் போன்­றவை இவ­ரது படைப்­புப் பட்­டி­ய­லில் அடங்­கும்.

பங்­கேற்­பா­ளர்­க­ளின் கவி­தை­க­ளைக் கேட்டு தமது கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­தோடு கவிதை எழு­து­தல், கவிதை உரு­வாக்­கம் போன்­ற­வற்­றைப் பற்­றிய தனது எண்­ணங்­க­ளை­யும் பார்­வை­யா­ளர்­க­ளி­டம் சொன்­னார் கவி­ஞர் சாம்­ராஜ்.

"கவி­தை­க­ளைச் சிறப்­பாக எழுத நீங்­கள் நிறைய வாசிக்க வேண்­டும். நிறைய வாசிக்க வாசிக்க உல­கைப் பற்­றிய உங்­களது புரி­த­லும் அறி­வும் வள­ரும். இது ஒரு கவி­ஞ­னாக நீங்­கள் வளர, வழி செய்­யும். உங்­கள் வாழ்க்கை நிகழ்­வு­க­ளை­யும் அனு­ப­வங்­க­ளை­யும் உள்­வாங்­கிக்­கொண்டு அதி­லி­ருந்து கற்­ப­னைத் தூண்­டல் பெற்று கவி­தை­களை உரு­வாக்­கும்­போ­து­தான் உங்­க­ளது தனித்­து­வம் வெளிப்­படும்," என்று பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு அறி­வுரை கூறி­னார் கவி­ஞர் சாம்­ராஜ்.

சிங்­கப்­பூர் கவி­தைத் திரு­விழா 2015ஆம் ஆண்டு தொடங்கி, ஏழா­வது ஆண்­டாக வெற்­றி­க­ர­மாக நடந்­தே­றி­யது. தமிழ், மலாய், ஆங்­கி­லம், சீனம் ஆகிய நான்கு மொழி­களி­லும் ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை கவிதை விழா நடத்­தும் சிங்­கப்­பூர் இலக்­கிய மாநா­டும் சென்ற வாரம் சிறப்­பாக நடை­பெற்­றது.

ஒரு சமூ­க­மாக நல்ல எண்­ணங்­க­ளை­யும் சமூ­கம் சார்ந்த விழிப்­பு­ணர்­வை­யும் வளர்க்­கும் வண்­ணம், விதை­க­ளாக, கவிதை­களை விதைக்­கும் நோக்­கத்­தைக் கொண்­டது இவ்­வாண்­டின் கவிதை திரு­விழா. மேலும், கவிதை விழா­வை­யொட்டி ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் தேசிய கவி­தைப் போட்­டி­யின் தமிழ்ப் பிரிவு வெற்­றி­யா­ளர்­க­ளு­ட­னான கவி­யா­ட­லும் இவ்­வாண்டு நடை­பெற்­றது. 'சமூக (க)விதை­கள்: தேசிய கவி­தைப் போட்டி வெற்­றி­யா­ளர்­க­ளு­டன் ஒரு கவிக்­கூ­டல்' என்­னும் இந்த நிகழ்வு, வெற்­றி­யா­ளர்­கள் தங்­கள் கவி­தை­க­ளைப் படைக்­கும் ஒரு தள­மா­க­வும் பார்­வை­யா­ளர்­க­ளுக்­கான கற்­றல் தள­மா­க­வும் அமைந்­தது.

'சமூ­கம்' பற்­றிய கலந்­து­ரை­யா­டல்

சிங்­கப்­பூர் இலக்­கி­யக் கருத்­த­ரங்கு 2021ன் ஒரு பகு­தி­யாக, சிங்­கப்­பூர் இலக்­கி­யம் குறித்த கலந்­து­ரை­யா­டல் ஒன்று ஜூலை 31 அன்று மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யாக நடந்­தது. இதில் சிங்­கப்­பூ­ரின் தமிழ் இலக்­கி­யத்­தைப் பிர­தி­நி­தித்து சிவா­னந்­தம் நீல­கண்­டன் கலந்­து­கொண்டு பேசி­யி­ருந்­தார்.

'சமூ­கம்' என்ற கருப்­பொ­ரு­ளில் நடந்­தே­றிய இக்­க­லந்­து­ரை­யா­டல், நான்கு மொழி இலக்­கி­யங்­க­ளி­லும் எவ்­வாறு உண­ரப்­பட்டு பிர­தி­ப­லிக்­கப்­பட்­டுள்­ளது, எழுத்­தா­ளர்­கள் எதிர்­கா­லத்­தில் எந்­தெந்த அம்­சங்­க­ளைக் கையாள்­வது ஆகி­ய­வற்­றைக் குறித்­துக் கருத்­து­கள் பகி­ரப்­பட்­டன.

"சுதந்­திர சிங்­கப்­பூ­ரில் இது­வரை தமிழ் இலக்­கிய விளைச்­சல் சுமார் 500 புத்­த­கங்­கள். கம்­பத்­தி­லி­ருந்து அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­புக்கு மாறி­ய­து­மு­தல் 'சார்ஸ்' கொள்­ளை­நோயை எதிர்­கொண்­ட­து­வரை பல்­வேறு தளங்­களில் தமிழ்ச் சமூ­கத்­தின் முதல் அரை­நூற்­றாண்டு கால இலக்­கியத்­தில் பதி­வா­கி­யுள்­ளது. ஆயி­னும், சிக்­கலான அம்­சங்­கள் அரி­தா­கப் பேசப்­பட்­டன. ஆனால் கடந்த ஐந்­தாறு ஆண்­டு­களில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. லதா, சித்­து­ராஜ் பொன்­ராஜ், எம்கே குமார், உமா கதிர் போன்­றோர் தங்­கள் புனை­வு­களில் பல இன சமு­தா­யத்­தில் தமிழ்ச் சமூ­கம் எதிர்­கொள்­ளும் சிக்­கல்­கள்­மு­தல் பெண்­கள், விளிம்­பு­நிலை மாந்­தர்­க­ளின் வாழ்க்­கை­வரை நுணுக்­க­மான சித்­தி­ரங்­களைத் தீட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

"சிங்­கைத் தமிழ்ச் சமூ­கத்­தின் 200 ஆண்­டு­கால வர­லாற்­றைப் பல்­வேறு கோணங்­க­ளி­லி­ருந்து உயி­ரோட்­ட­மா­கத் தீட்­டிக்­காட்ட நமது எழுத்­தா­ளர்­கள் முய­ல­வேண்­டும். குறிப்­பாக உள்­ளூர் இளை­யர்­கள் தமிழ் இலக்­கி­யத்­தைக் கையில் எடுத்­துக்­கொள்ள முன்­வ­ர­வேண்­டும்," என்று கலந்­து­ரை­யா­ட­லில் தெரி­வித்­தார் சிங்­கப்­பூர்த் தமிழ் இலக்­கி­யத்­தைப் பிர­தி­நி­தித்த சிவா­னந்­தம் நீல­கண்­டன்.

சிங்­கப்­பூர் கவிதை விழா நிகழ்ச்­சி­களை நீங்­கள் சிங்­கப்­பூர் பொயட்ரி ஃபெஸ்டி­வல் (Singapore Poetry Festival) ஃபேஸ்புக், இணை­யப்­பக்­கம், யூடி­யூப் தளம் ஆகி­ய­வற்­றின்­வழி காண­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!