வகுப்பறையில் பாரம்பரியக் கலை விருந்து

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

திரு­மதி சாந்தி பால­மு­ரு­க­னின் வகுப்­பில் ஒரு பாடலை அறி­மு­கப்­படுத்­தி­னால், உடனே மாண­வர்­கள் கோலாட்­டம் ஆட­லாமா, கும்மி அடிக்­க­லாமா என்று ஆர்­வத்­து­டன் கேட்­கின்­ற­னர். சுவா சூ காங் புளோக் 10 பிசி­எஃப் ஸ்பார்­கல்­டொட்ஸ் பாலர் பள்­ளி­ தமிழ் வகுப்­புக்­குச் செல்ல மாண­வர்­களுக்கு மிக­வும் பிடிக்­கும்.

இவ்­வாண்­டு கல்வி அமைச்­சின் தாய்­மொ­ழி­க­ளின் கருத்­த­ரங்கு நிகழ்ச்­சி­யில் சிறந்த பாலர் பள்ளி தாய்­மொழி ஆசி­ரி­ய­ருக்­கான விருதை வென்ற திரு­மதி சாந்தி,

சுவா­ர­சி­ய­மான கற்­பித்­தல் முறை­கள் வழி சிறு­வர்­க­ளின் மொழி ஆர்­வத்­தைத் தூண்டி வரு­கி­றார்.

தமிழ் பாடல்­க­ளைச் சொல்­லிக் கொடுத்து, அவற்­றிற்கு ஏற்ற பாரம்­பரிய நட­னங்­க­ளை­யும் காணொளி வழி காண்­பித்­தும், ஈடு­ப­டச் செய்­தும் சுவா­ர­சி­ய­மான கற்­பித்­தல் முறையை மேற்­கொள்­கி­றார். இது சிறார்­க­ளி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

அதோடு, ''உறி­யடி போன்ற விளை­யாட்­டு­களில் மாண­வர்­களை ஈடு­ப­டுத்­தும்­போது பார்­வை­யற்­ற­வர்­கள் எத்­த­கை­ய சவால்­களை எதிர்­கொள்­கின்­ற­னர்­ என்பதை விளங்­கிக்­கொண்டு, அவர்­க­ளுக்கு எவ்­வாறு உத­வ­லாம் போன்ற தக­வல்­க­ளை­யும் அவர்­கள் உள்­வாங்­கிக் கொள்­கின்­ற­னர்," என்று தம் கற்­பித்­தல் முறை­ பற்றி விளக்­கி­னார், 43 வயது ஆசி­ரி­யர் திரு­மதி சாந்தி.

புத்­த­கம் வாசித்­த­லைக் காட்­டி­லும் வெளிப்­பு­றப் பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­க­ளும் நட­வ­டிக்­கை­களும் சிறார்­க­ளுக்­குக் கூடு­தல் ஆர்­வம் இருக்­கிறது. அதன் வழி சொல்ல விரும்­பும் கருத்­து­களை எப்படி மனதில் பதிய வைக்­க­லாம் என்­ப­தில் திரு­மதி சாந்­தி­யின் கவ­னம் அடங்­கி­யுள்­ளது.

வகுப்­பில் ஒவ்­வொரு சிறா­ரும் தன் பேச்­சாற்­றலை வளர்த்­துக்­கொள்­ள வகுப்­ப­றை­யின் முன் பேசு­வ­தற்கு வாய்ப்பை தாம் வழங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு­மதி சாந்தி, இது மாண­வர்­க­ளது தன்­னம்­பிக்­கையை வளர்த்து, கூச்­ச சுபா­வத்­தைப் போக்­க­வும் உத­வு­கிறது என்­றார்.

மதுரை காம­ராஜ் பல்­க­லைக்­கழத்கத்­தில் கணித துறை­யில் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொண்ட திரு­மதி சாந்தி பால­மு­ரு­கன், திரு­ம­ணத்­திற்­குப் பிறகு, தம் இரு பிள்­ளை­களை­யும் வளர்ப்­ப­தில் கவ­னம் செலுத்­தி­னார். பிள்­ளை­கள் வளர்ந்­த­தும் 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து பகுதி நேர பாலர் பள்ளி ஆசி­ரி­ய­ராக மூன்று ஆண்­டு­கள் பணி­யாற்­றி­னார்.

பிள்­ளை­க­ளுக்­குப் பாடம் சொல்­லிக் கொடுப்­பது பிடித்­துப்­போக, கணித பட்­ட­தா­ரி­யான திரு­மதி சாந்தி, சீட் கல்­விக் கழ­கத்­தில் ஒன்­றரை ஆண்­டு­கால ஆரம்­பக்­கல்வி பட்­ட­யம் பயின்­றார். அதன் பிறகு, 2019ல் சுவா சூ காங் புளோக் 10 பிசி­எஃப் ஸ்பார்­கல்­டொட்ஸ் பாலர் பள்­ளி­யில் சேர்ந்­தார்.

"சிறார்­க­ளு­டன் வலு­வான நட்­பு­றவை வளர்த்­துக்­கொள்­ளுங்­கள், அவ்­வாறு செய்ய, இன்­னும் நன்­றா­கக் கற்­றுக்­கொள்­வர்' என்­றார் திரு­மதி சாந்தி.

திரு­மதி சாந்­தி­யு­டன் பொங்­கோல் ‌‌‌ஷோர் புளோக் 174டி 'பிசி­எஃப் ஸ்பார்­கல்­டொட்ஸ்' பள்ளி ஆசி­ரி­யர் திரு­மதி சண்­மு­கம் கீதா­வும் புன் லே புளோக் 262 'பிசிஎஃப் ஸ்பார்­கல்­டொட்ஸ்' பள்ளி ஆசி­ரி­யர் திரு­வாட்டி மு. ‌‌ஷர்­மிளா தேவி­யும் தாய்­மொழி கற்­பித்­த­லில் தகுதி (மெரிட்) விரு­து­க­ளு­டன் நிகழ்ச்­சி­யில் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர்.

கல்வித்துறை நிபுணர்களும் விருது பெற்ற ஆசிரியர்களும் பங்கேற்ற 'தாய்மொழிகளின் கருத்தரங்கு'

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!