சிரிப்பும் வேடிக்கையும் நிறைந்த தமிழ் வகுப்பு மாணவர்களே இந்த ஆசிரியர்களின் முன்னுரிமை

இந்து இளங்கோவன்

மாணவர்கள் தங்கள் முழு ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கே முன்னுரிமை என்று தங்கள் கடமையை ஆற்றிய 17 ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான அதிபர் விருதுக்கு இவ்வாண்டு முன்மொழியப்பட்டனர். இவர்களில் ஏழு பேருக்கு இம்மாதத் தொடக்கத்தில் அதிபர் ஹலிமா யாக்கோப் விருது வழங்கிச் சிறப்பித்தார். முன்மொழியப்பட்டவர்களில் திருமதி சௌம்யா சதீஷ், திருமதி ஜெயசுதா விஜேய், டாக்டர் ராமானுஜம் பரமானந்தம் மூவரும் இடம்பெற்றனர்.

சிறு­வ­ய­தில் வீட்­டில் தமது தொடக்­கப்­பள்ளி தமிழ் ஆசி­ரி­யர் திரு­மதி ராஜ­னைப்போல வேட­மிட்டு மாண­வர்­க­ளுக்­குத் தமிழ் கற்­றுக்­கொடுப்­ப­து­போல் விளை­யாடுவார் திரு­மதி ஜெய­சுதா விஜேய்.

பின்னாளில் அதே திரு­மதி ராஜ­னு­டன் இணைந்து தமிழ் ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரி­யும் வாய்ப்பு இவ­ருக்கு கிட்­டி­யது. தமக்கு தமிழ் கற்­றுக்­கொடுத்த தொடக்­கப்­பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி ஆசி­ரி­யர்­கள், தேசிய கல்­விக் கழக ஆசி­ரி­யர்­கள் என அனை­வ­ரும் இவ­ரு­டைய வாழ்க்­கை­யில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக இவர் தெரிவித்தார். தமிழ் மொழியை இவ்­வ­ளவு சுவா­ர­சி­ய­மாக கற்­றுத்­தர முடி­யுமா என்று தம்மை வியக்க செய்­த­வர்­கள் இவர்­கள் என்று ஆச்­ச­ரி­யம் கலை­யா­மல் கூறி­னார் செங்­காங் தொடக்­கப்­பள்­ளி­யில் தமிழ் ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரி­யும் திரு­மதி ஜெய­சுதா.

புக­லி­ட­மா­கும் தமிழ் வகுப்­பு­கள்

தமிழ் வகுப்பு, மொழிக் கற்­ற­லை­யும் தாண்டி தமிழ் மாண­வர்­க­ளுக்கு ஆறு­த­லும் மகிழ்ச்­சி­யும் தரும் இட­மாக இருக்­க­வேண்­டும் என்று இவர் உறு­தி­யாக நம்­பு­கி­றார்.

திரு­மதி ஜெய­சு­தா­வின் கற்­பித்­தல் அணு­கு­முறை உரு­வா­ன­தில் அவ­ரு­டைய தந்தைக்கு முக்­கிய பங்குண்டு. தந்­தை­யி­டம் இருந்து கற்­றுக்­கொண்ட நகைச்­சுவை உணர்வு இப்­போது மாண­வர்­க­ளு­டன் பிணைப்பை உரு­வாக்க இவ­ருக்கு வழி செய்­கிறது.

“சிறுவயதில் என் தந்தை எப்­போ­தும் நகைச்­சு­வைத் துணுக்­கு­களைச் சொல்வார். நகைச்­சுவை காட்சிகளை என்­னு­டன் சேர்ந்து பார்ப்பார். அவ­ருக்கு இப்­போது 70 வய­தா­கிறது. அவ்­வப்­போது எனக்கு வாட்ஸ்­அப் வழி­யாக நகைச்­சு­வை­க­ளை­யும் காணொ­ளி­க­ளை­யும் அனுப்­பு­வார். நான் எவ்­வ­ளவு சோர்­வா­க. கவ­லை­யா­க இருந்­தா­லும் அவ­ரது குறுந்­த­க­வல் எனது முகத்­தில் புன்­ன­கை மல­ரச்­செய்­யும்.”

“மாண­வர்­கள் என்­னு­டன் இயல்­பாக பழகவும் என்­னு­டன் நெருக்­க­மாக உற­வா­ட­வும் நகைச்­சு­வையை நான் பயன்­ப­டுத்­து­கி­றேன். எல்லா மாண­வர்­க­ளுக்­கும் பிடித்த ஆசி­ரி­ய­ராக இருக்க வேண்­டும் என்­பது இதன் நோக்கம் அல்ல. மாறாக, அவர்­க­ளு­டன் ஒரு நல்­லு­றவை ஏற்படுத்தி அவர்­க­ளது தேவை­க­ளை­யும் கண்­ணோட்­டங்­க­ளை­யும் புரிந்­து­கொள்­வதே இதன் நோக்­கம்,” என்­றார் அவர்.

கதை சொல்­வதை ஒரு கற்­பித்­தல் உத்­தி­யா­கப் பயன்­ப­டுத்­தும் திரு­மதி ஜெய­சுதா, தமது மாண­வர்­க­ளு­டன் தனிப்­பட்ட அனு­ப­வங்­க­ளை­யும் பகிர்ந்து கொள்­கி­றார். அவர்­க­ளி­டம் தமிழ்­மொழி ஆர்­வத்­தைத் தூண்­டு­வ­தற்­காக, இளம் வய­தில் விவா­தப் போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­போது எடுத்த காணொ­ளி­களை மாண­வர்­களுக்கு போட்­டுக்காட்­டு­வார்.

“காணொ­ளி­களை பார்த்­து­விட்டு, பிள்­ளை­கள் சிரித்­துக்­கொண்டே, ‘திரு­மதி விஜேய், உங்­கள் தலை­முடி மிக­வும் வேடிக்­கை­யாக இருக்­கிறது!’ என்று கூறு­வர். ஆனால் அவற்­றைப் பார்த்­து­விட்டு எனது ஆசி­ரி­ய­ரால் இவ்வ­ளவு துணி­வு­டன் தமி­ழில் பேச முடிந்­தால் என்­னா­லும் முடி­யும் என்ற எண்­ணம் அவர்­கள் மன­தில் எழும்,” என்று சிரித்­த­படி சொன்­னார்.

பிரி­யாத, மறக்­க­மு­டி­யாத மாண­வர்­கள்

தமது முன்­னாள் மாண­வர்­களில் பலர் இன்­னும் தம்­மு­டன் தொடர்­பில் இருப்­ப­தாக கூறிய திரு­மதி ஜெய­சுதா, தமது நினை­வில் நீங்­காத ஒரு மாண­வரை பற்றி பகிர்ந்­து­கொண்­டார்.

“அவ­ருக்கு தமிழ்ப் பாடம் என்­றாலே அச்­சம். தமி­ழில் பேச மிக­வும் சிர­மப்­பட்­டார். இப்­ப­டிப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு மீண்­டும் மீண்­டும் ‘தமி­ழில் படி, எழுது’ என்று வற்­பு­றுத்­தா­மல் அவர்­க­ளது மனப்­போக்கை புரிந்­து­கொள்­வது அவ­சி­யம்,” என்­றார் திரு­மதி ஜெய­சுதா.

அந்த மாண­வ­ரு­டன் அதிக நேரம் செலவு செய்து, ஊக்­கம் தந்து, படிப்படி­யாக வழிகாட்டி அவரிடம் தமிழ் ஆர்­வத்­தை­யும் திற­னை­யும் வளர்க்க உத­வி­னார் திருமதி ஜெயசுதா.

இந்த மாண­வர் பின்பு ‘ஓ’ நிலை தேர்­வில் பள்­ளி­யி­லேயே முதல் நிலை­யில் தேர்ச்­சி­பெற்று அனை­வ­ரை­யும் பெரு­மை­ய­டைய செய்­தார்.

இன்றும் அந்த மாணவர் தம்மைப் பார்க்கும்­ போ­தெல்­லாம், “வணக்­கம் ஆசி­ரி­யர். நலமாக இருக்­கிறீர்களா?” என்று தமி­ழில் நலம் விசாரிக் கும்­போது பெரு­மை­யாக இருப்பதாகக் கூறினார் திரு­மதி ஜெய­சுதா. இதுபோன்ற நினை­வு­கள்­தான் இந்தப் பணியை தொடர்ந்து நீடிக்க இவ­ருக்கு உத்­வே­கம் தரு­கின்றன.

“நான் எப்­போ­தும் ஒன்றை சக ஆசி­ரியர்­களிடம்­ வலி­யு­றுத்­து­வேன். மற்­ற­வர்­களிடம் கூறும் அறி­வு­ரை­களை நாம் முதலில் பின்­பற்­ற­வேண்­டும். சக தமிழ் ஆசி­ரி­யர்­க­ளு­டன் உரை­யா­டும்போது தமி­ழில் பேச வேண்­டும் என்று சொல்வேன். நாமே ஓர் உதா­ர­ண­மாக இல்லா விட்டால் மாண­வர்­களை தமி­ழில் பேச சொல்ல முடி­யாது,” என்றார் இந்தத் தமிழாசிரியர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!