இளம் ஜோடியை மணவாழ்வில் இணைத்த மெய்நிகர் தளம்

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்பு தாய்­நாட்­டி­லி­ருந்து புறப்­பட்டு பிழைப்­பு தேடி சிங்­கப்­பூர் வந்த பங்­­ளா­தே­‌ஷி­ய­ரான பாரிக் அப்­துல், கை நிறைய சம்­பா­தித்து அடுத்த முறை ஊர் திரும்­பும்­போது திரு­

ம­ணம் செய்­து­கொள்­வ­தா­கத் தாய், தந்­தை­ய­ரி­டம் வாக்­குக் கொடுத்­

தி­ருந்­தார்.

நான்கு ஆண்­டு­கள் வேலை பார்த்து, பிறகு விடுப்­பில் பங்­­ளா­தே­‌ஷுக்­குத் திரும்பி திரு­ம­ணம் செய்­து­விட்­டு மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு வர அவர் திட்­ட­மிட்­டி­ருந்­தார்.

பெற்­றோர்­ திறன்­பேசி வழியே மண­ம­க்களை ஆசிர்­வ­திக்க, அவ­ரது திரு­ம­ணம் மெய்­நி­கர் தளத்­தில் திறன்­பேசி வழியே சென்ற மாதம் 15ஆம் தேதி நடை­பெற்­றது.

மணக்­கோ­லத்­தில் காக்கி புக்­கிட் வட்­டா­ரத்­தி­லுள்ள வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் தமது படுக்­கைக்­குப் பக்­கத்­தி­லேயே 33 வயது பாரிக் அப்­துல் இருந்­தார். மணப்­பெண், பங்­ளா­தே‌ஷ் நாட்­டின் சிராஜ்­கஞ் மாவட்­டம் ரந்­து­னி­பாரி நக­ரில் உள்ள பாரிக் குடும்­பத்­தி­ன­ரின் வீட்­டில் இருந்­தார்.

இஸ்­லா­மிய சம­யப்­படி, சம­யத் தலை­வ­ரான 'காதி' திரு­ம­ணத்தை நடத்த, கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் 'நிக்­காஹ்' வைப­வம் நடை­பெற்­றது.

கடந்த 2019ஆம் ஆண்டு பாரிக்­கிற்கு அப்­பெண் நிச்­ச­யிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

தமது தாய்­வழி சொந்­த­மான லவ்லி அக்­தர் என்ற பெண்ணை, பாரிக் சிங்­கப்­பூ­ரில் இருந்­த­போதே நிச்­ச­யிக்­கப்­பட்ட நிலை­யில், கடந்த ஆண்டு இறு­தி­யில் ஊர் அறிய, சுற்­ற­மும் நட்­பும் சூழ பாரிக், லவ்லி திரு­ம­ணம் நடை­பெ­றும் என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

ஆனால் அதற்கு முன்பு உல­கத்­தையே உலுக்கி வரும் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தம்­மைப் பெரு­ம­ள­வில் பாதிக்­கும் என்று பாரிக் எதிர்­பார்க்­க­வில்லை.

விமா­னச் சேவை­ நிறுத்­தம் மன­த­ள­வில் அவ­ருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. எப்­ப­டி­யா­வது சொந்த நாட்­டுக்­குத் திரும்பி ­வி­ட­லாம் என்ற எண்­ணம் அவ­ருக்­குத் தோன்­றி­யது.

ஆனால் சிங்­கப்­பூ­ருக்கு மீண்­டும் வர முடி­யா­மல் போய்­வி­டுமோ என்ற அச்­சம் அவரை வாட்­டி­யது.

அந்­தக் கவலை அவ­ருக்கு

மிகு­தி­யாக இருந்­த­தற்கு அவ­ரது உடன்­பி­றப்பே கார­ணம்.

தமது மூத்த சகோ­த­ரர் சிங்­கப்­பூ­ரில் கட்­டு­மா­னத் துறை­யில் வேலை பார்த்­து­ வந்­தார்.

விடுமுறைக்காக கடந்த ஆண்டு தொடக்­கத்­தில் அவர் பங்­ளா­தேஷ் திரும்­பி­னார்.

கொவிட்-19 நெருக்­கடிநி­லை­யால் அவ­ரால் மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு வர­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டது. இத­னால் அவர் வேலையை இழந்தார்.

"திரு­ம­ணம் செய்­து­கொள்ள வேண்­டும் என்ற ஆசை எனக்கு இருந்­தது. பெண் வீட்­டார் நீண்ட காலம் எனக்­கா­கக் காத்­தி­ருக்­க­மாட்­டார்­கள்.

"ஆனால் என்னால் சொந்த நாட்­டுக்­குத் திரும்ப முடி­ய­வில்லை. நான் அங்கு சென்­று­விட்­டால் மீண்­டும் சிங்­கப்­பூ­ர் வரு­வது கடி­னம். இத­னால் என் குடும்­பத்­திற்கு வரு­மா­னம் இல்­லா­மல் போய்­வி­டக்­

கூ­டும்," என்று தமது பெற்­றோ­ரின் ஐந்து மகன்­களில் மூன்­றா­வது மக­னான பாரிக் அப்­துல் சொன்­னார்.

பாரிக் அப்­து­லும் அவ­ரது இளைய சகோ­த­ர­ரும் வேலை பார்த்து குடும்­பச் செல­வைச்

சமா­ளிக்­கின்­ற­னர்.

பெற்­றோர், அண்­ணன்­கள், அண்­ணி­மார்­கள், அண்­ணன்­களின் பிள்­ளை­கள், இளைய சகோ­த­ரர்­கள் என அனை­வ­ரும் இவர்­க­ளின் வரு­மா­னத்தை நம்பி இருக்­கின்­ற­னர்.

குடும்­பச் செல­வுக்­காக பாரிக் மாதா­மா­தம் $400 அனுப்­பு­கி­றார்.

இரு­வீட்­டார் ஊக்­கு­வித்­த­தைத் தொடர்ந்து, மெய்­நி­கர் தளத்­தில் மண­மு­டித்த பாரிக், தமது மகிழ்ச்சி யை சக ஊழி­ய­ர்களுடன் பகிர்ந்து­ கொண்­டார்.

தமது தங்­கு­வி­டு­தி­யில் தங்­கி­யி­ருக்­கும் 20 நண்­பர்­க­ளுக்கு அங்­கேயே சமைத்து உண­வ­ளித்­தார்.

பங்­ளா­தே­‌ஷில் அவ­ரது பெற்­றோர் ஏறத்­தாழ 50 பேருக்கு உண­வ­ளித்து மகிழ்ச்­சி­ய­டைந்­த­னர்.

விரை­வில் சொந்த நாடு திரும்ப பாரிக் அப்துல் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!