அடுத்த வேளை உணவு கேள்விக்குறியானால்...

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

"கையில் பணம் இல்­லாத நேரங்­களில், முத­லில் எங்­கள் பிள்­ளை­ க­ளுக்கு உணவு கொடுப்­போம். பின்­னர் எங்­கள் வயிற்றை நிரப்­பிக்­கொள்ள தண்­ணீர் குடிப்­போம்."

'பியோண்ட் சோஷியல் சர்விசஸ்' சமூக சேவைகள் அமைப்பு அண்­மை­யில் மேற்­கொண்ட ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­களில் ஒரு­வர் இவ்­வாறு கூறி­யி­ருந்­தார்.

தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு உணவு இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக பெற்­றோர் உண­வைக் குறைத்­துக் கொள்­கின்­ற­னர் என்­பது அந்த ஆய்­வின் குறிப்­பி­டத்­தக்க கண்­டு­பி­டிப்­பு­களில் ஒன்று.

குழந்தை, இளை­யர் நல்­வாழ்வு அமைப்­பான 'பியோண்ட்', கடந்­தாண்டு வாடகை வீடு­கள் அதி­கம் உள்ள குடி­யி­ருப்­புப் பேட்­டை­யில் உணவு போதாத நிலை குறித்து 50க்கும் மேற்­பட்ட வாடகை வீடு குடி­யி­ருப்­பா­ளர்­கள், உணவு உதவி வழங்­கு­ப­வர்­கள் உள்­ளிட்ட பல தரப்­பி­ன­ரு­டன் ஆய்வு நடத்­தி­யது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று குறிப்­பாக குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­க­ளுக்கு உணவு போதாத நிலை அதிகரித்துள்­ளதாக பியோண்ட் அமைப்­பின் ஆய்வு கண்டறிந்தது.

இது பணம் இல்லாததால், தரமான உணவு, பல்வகை உணவு, ஊட்டச்சத்துள்ள உணவு போன்றவை போதுமான அளவுக்கு கிடைக்காத நிலையாகும்.

இது ஒரு பொதுச் சுகா­தா­ரப் பிரச்­சினை என்று பியோண்ட் வர்ணித்­தது.

அடுத்த வேளை உணவு நிச்சயமில்லை என்ற நிலைக்கும் மன உளைச்­சல், நாட்­பட்ட நோய் ஆகி­ய­வற்­று­டன் தொடர்­பி­ருப்­ப­தாக அந்த ஆய்வு கூறி­யது.

குறைவாக உள்ள உணவை ஈடு­கட்ட, தண்­ணீர், மாவுச்­சத்து உள்ள உணவு போன்­ற­வற்றை உட்­கொண்­ட­து­டன் விலை மலி­வான, ஆனால் வயிற்றை நிரப்­பும் உணவு வகை­க­ளைக் குடும்­பங்­கள் தேர்ந்­தெ­டுத்­தன.

'பியோண்ட்' அமைப்பு ஏற்­கெ­னவே கடந்த பிப்­ர­வரி மாதம் வெளி­யிட்ட மற்­றோர் அறிக்­கை­யில், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு முன்பு, அதன் குடும்ப உதவி நிதிக்கு விண்­ணப்­பித்­த­வர்­க­ளின் இடை­நிலை (median) குடும்ப வரு­மா­னம் $1,600 ஆக இருந்­த­தா­கக் கூறி­யது.

ஆனால் கிரு­மிப் பர­வ­லுக்­குப் பின்­னர், உதவி நிதிக்கு விண்­ணப்­பித்­த­வர்­க­ளின் குடும்ப வரு­மானம் $500க்கு குறைந்­தது.

அவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு­வர்தான் 54 வயது திரு­மதி பிரியா, (உண்மைப் பெயர் அல்ல). கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு முன்பு இவர் பகுதி நேர­மாக வீடு­க­ளைச் சுத்­தம் செய்து வந்­தார்.

கண­வ­ரு­ட­னும் தொடக்­கப்­பள்ளி செல்­லும் பேரப்­பிள்­ளை­யு­ட­னும் அவர் வாடகை வீட்­டில் வசித்து வரு­கி­றார். ஆனால் கிரு­மிப் பர­வ­லால் திரு­மதி பிரியா தமது வேலையை இழந்­தார். உடல்­ந­லப் பிரச்­சி­னை­யால் அவ­ரது கண­வ­ரா­லும் வேலை செய்ய இய­லாது.

இந்­நி­லை­யில் சமூக மேம்­பாட்டு மன்­றம் இவர்­க­ளுக்கு பொரு­ளா­தார ரீதி­யாக உதவி வரு­கிறது.

"பணப் பற்­றாக்­குறை ஏற்­ப­டும்­போது அரு­கில் இருக்­கும் பெளத்த ஆல­யத்­தி­லி­ருந்து இல­வச உணவை பெற்­றுக்­கொள்­வோம். வீட்­டில் சமைக்­கும் கறி வகை உணவு இரு நாட்­கள் வரை வைத்து உண்­போம்," என்று கூறி­னார் திரு­மதி பிரியா.

இவ்­வாண்டு ஏழு வய­தா­கும் தமது பேரப்­பிள்­ளை­யின் மூன்று வேளைக்­கான சாப்­பாட்­டுத் தேவை­யும் பூர்த்­தி­செய்­யப்­ப­டு­வ­தாக திரு­மதி பிரியா குறிப்­பிட்­டார்.

அவ்­வப்­போது உதவி அமைப்­பு­ கள் நேர­டி­யாக வந்து வழங்­கும் இல­வச உணவு அல்­லது மளி­கைப் பொருள் அன்­ப­ளிப்பு உதவி குடும்­பத்­திற்கு பேரு­த­வி­யாக விளங்கு வதா­க­வும் அவர் சொன்­னார்.

போதிய சேமிப்பு இருக்க வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை கிரு­மிப் பர­வல் தமக்கு உணர்த்­தி­யது என்று கூறிய திரு­மதி பிரியா, பேரப்­பிள்­ளை­யைத் தங்­க­ளால் முடிந்த பர­மா­ரிப்பை வழங்க உறுதி கொண்­டுள்­ள­தா­கச் சொன்­னார்.

உணவு போதாத நிலை குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, வசதி குறைந்த குடும்­பங்­க­ளின் உணவு மற்­றும் இதர அடிப்­ப­டைத் தேவை களுக்கு உதவ, 'பியோண்ட் சமூ­கச் சேவை அமைப்பு அண்­மை­யில் நிதி திரட்டத் தொடங்­கி­யுள்­ளது. ஜியாக் பா புவே (Jiak Ba Buay) என்­பது திட்­டத்­தின் பெயர். ஹோக்­கி­யன் கிளை­மொழி­யில் சாப்­பிட்டு விட்­டீர்­களா என்­பது அதன் பொருள்.

இம்­மு­யற்­சி குறித்து மேல் விவ­ரம் அறி­ய­வும், நன்­கொடை வழங்­க­வும் https://www.beyond.org.sg/jiakbabuay/ என்ற இணை­யப் பக்­கத்­துக்குச் செல்­ல­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!