சமூக நல்லிணக்கத்தில் கடப்பாடு கொண்டவர்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

இன­வா­தம் தொடர்­பான அனு­ப­வங்­கள் ஃபஹீ­மா­வுக்கு ஏற்­பட்­ட­துண்டு. அச்­சம்­ப­வங்­கள் நடக்­கும்­போது அந்­தத் தரு­ணத்­தில் நற்­கு­டி­மக்­க­ளாக என்ன செய்­வ­தென்று பல நாட்­கள் அவர் யோசித்­தி­ருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கி­டையே கலா­சார அறிவு, புரிந்­து­ணர்வு இரண்­டை­யும் வளர்ப்­பதே சிறந்த வழி என்று 36 வயது நஸ்­ஹத் ஃபஹீமா நஸீர் கான் முடி­வெ­டுத்­தார். அதற்காக 2015ஆம் ஆண்­டில், 'ஹேஷ்.பீஸ்' (hash.peace) அமைப்­பைத் தோற்­று­வித்­தார். சமூக நல்­லி­ணக்க ஆத­ரவு வழங்­கும் இந்த அமைப்பை, இளை­யர்­களே வழி­நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்த அமைப்­பின் வழி வெவ்­வேறு கலா­சா­ரங்­க­ளைப் பற்றி புரிந்து­கொள்ள உத­வும் ஒன்­று­கூடல்­கள், சிங்­கப்­பூ­ரின் நல்­லி­ணக்­கத்­தைக் குலைக்­கும் விவ­கா­ரங்­களைப் பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­கள் மூலம் மற்ற இனத்­த­வர்­க­ளின் கருத்­து­களை இளை­யர்­கள் செவி­மடுத்து அவர்­க­ளின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்­ளும் பக்­கு­வத்தை வளர்த்­துக்­கொள்­ளும் வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தித் தரப்­ப­டு­கின்­றன.

சம­யம் சார்ந்த பயங்­க­ர­வாத சித்­தாந்­தம் பரவுவதைத் தடுக்கவும் அமைப்பு உத­வு­கிறது.

"ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் இடை­யிலான கலா­சா­ரப் புரிந்­து­ணர்வை மேலும் மேம்­ப­டச் செய்­ய­லாம். பல இன, பல கலா­சார, பல நாட்­ட­வர் உள்ள வேலை­யி­டத்­தில் சமூக நல்­லி­ணக்­கம் வலு­வாக்­கப்­ப­டு­வது குறித்து நிறு­வ­னத்­தின் மனி­த­வ­ளப் பிரிவு சிந்­திக்­க­லாம்.

"வெவ்­வேறு கலா­சா­ரத்­தைப் பற்றி மேலும் ஆராய அரும்­பொரு­ள­கம் செல்­வது அல்­லது இன நல்­லி­ணக்க நாளை அலு­வ­ல­கத்­தில் கொண்­டா­டு­வ­தைப் பரி­சீ­லிக்­கலாம்," என்­றார் ஃபஹீமா.

இவர் சில ஆண்­டு­க­ளாக அரசு சார்­பற்ற அமைப்பு ஒன்­றில் நிர்­வாகி­யாக இருந்து, தற்­போது எஸ். ராஜ­ரத்­னம் அனைத்­து­லக ஆய்­வுப் பள்­ளி­யில் ஆசியா தொடர்­பான முது­க­லைப் பட்­டப்­ப­டிப்பை முழு­நே­ர­மாக மேற்­கொண்டு வரு­கி­றார்.

சமூக நலப் பணி­யில் ஈடு­படும் ஜமியா சிங்­கப்­பூர் அமைப்­பின் இளை­யர் பிரி­வுக்கு 2018ஆம் ஆண்டு முதல் தலை­வ­ரா­க­வும் பொறுப்பு வகிக்­கி­றார்.

அங்கு 'சிங்­கப்­பூர் ஃபூட்பேங்க்' அமைப்­பு­டன் இணைந்து 900க்கும் மேற்­பட்ட வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளுக்கு உண­வுப் பொருட்­களை விநி­யோ­கம் செய்­யும் முயற்சி உட்­பட பல்­வேறு சமூக நல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டார்.

ஜமியா அமைப்­பின் இளை­யர் பிரி­வி­ன­ரி­டையே தலை­மைத்­து­வப் பண்­பு­களை வளர்க்க, வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் ஆசி­யான் அள­வில் ஒரு மெய்­நி­கர் மாநாட்­டுக்கு இவ்­வாண்டு ஏற்­பாடு செய்­தி­ருந்­தார். வட்­டார அள­வில் செயல்­படும் மற்ற இளைய தலை­வர்­களி­ட­மி­ருந்து சமூ­கத்­திற்­குப் பங்­காற்­றும் உத்­தி­க­ளைக் கற்­றுக்­கொள்ள மாநாடு வழி­வ­குத்­தது.

"உல­கத்தை மாற்றப் போகி­றேன் என அனைத்து விவ­கா­ரங்­க­ளை­யும் இளை­யர்­கள் தங்­கள் தலை­யில் சுமந்து, அந்­தப் பளு­வால் சோர்­வடைந்து, தொண்­டூ­ழி­யத்தை விட்டு வில­கும் போக்கு தவிர்க்­கப்­பட வேண்­டும். இளை­யர்­கள் பரிந்­துரை செய்­யும் சமூக நட­வ­டிக்­கை­களில், அவர்­க­ளுக்கு முத­லில் ஆர்­வம் இருக்கவேண்­டும். தாங்­கள் விரும்பி அதில் ஈடு­ப­டு­வ­தாக இருக்க வேண்­டும் என எப்­போ­தும் வலி­யு­றுத்­து­வேன்," என்று சொன்­னார் ஃபஹீமா.

ஒரு தொண்­டூ­ழிய அமைப்­பின் நீடித்த நிலைத்­தன்­மைக்கு, அவ்­வப்­போது தலை­மைத்­துவ மாற்­றம் அவ­சி­யம் என்று கரு­தும் ஃப‌ஹீமா, தாம் சேவை­யாற்­றும் இரு தொண்­டூ­ழிய அமைப்­பு­க­ளி­லும் தகுந்த இளம் தலை­வர்­களை அடை­யா­ளம் கண்டு, தலை­மைத்­து­வப் பொறுப்பை அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளார்.

தொடர்ந்து அந்த இரு அமைப்பு ­க­ளி­லும் இதர வழி­களில் பங்­காற்று­வார் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

குடும்­பப் பொறுப்­பு­க­ளை­யும் முழு­நே­ரப் பணி­யை­யும் சமா­ளித்­த­வாறு சமூ­கத்­திற்­குத் தொண்­டாற்றி வரும் இவ­ரின் பங்­க­ளிப்பை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் மதிப்புக்குரிய 'அதி­பர் தொண்­டூ­ழிய, கொடை விருது' இம்­மா­தம் 11ஆம் தேதி­யன்று இவ­ருக்கு வழங்­கப்­பட்­டது.

"ஃபஹீமா உட்­பட, 11 பேருக்கு இவ்வாண்டு இந்த விருது வழங்கிச் சிறப்பிக்கிப்பட்டது. மீள்­தி­றன் மிக்க நக­ரில் மற்­ற­வர்­க­ளுக்­குத் தங்­களால் முடிந்த உத­வியை எல்­லா­ரா­லும் நல்க முடி­யும் என்­பதை இவ்­வி­ருது உணர்த்­து­கிறது," என்று தேசிய தொண்­டூ­ழிய, நன்­கொடை ஊக்­கு­விப்பு நிலை­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி மெலிசா கிவி தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!