தந்தை எவ்வழி, தனயனும் அவ்வழி

கி.ஜனார்த்­த­னன்

சிறு­வ­னாக இருக்­கும்­போது தமது தந்தை கார­ணம் கூறா­மல் இரவு நேரங்­களில் வெளியே செல்­வது பிர­காஷ் கோவிந்­த­சா­மிக்கு மர்­ம­மாக இருந்­தது.

மக­னுக்­குத் தெரி­யா­மல் அந்­தத் தந்தை தொண்­டூ­ழி­ய­மா­கச் செய்த கண்­கா­ணிப்பு அதி­காரி பணியை தற்­போது 45 வய­தாக இருக்­கும் திரு பிர­காஷ், கடந்த பன்­னி­ரண்டு ஆண்­டு­க­ளா­கச் செய்து வரு­கி­றார்.

நவம்­பர் 30ஆம் தேதி செவ்வாய்க்­கி­ழமை சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, மெய்நி­கர் வழியாக நடத்திய விருது நிகழ்ச்­சி­யின்­போது 'விபிஓ' எனும் தொண்­டூ­ழிய கண்­கா­ணிப்­புத் திட்­டத்­தின்­கீழ் பிர­கா­ஷும் கௌர­விக்­கப்­பட்­டார்.

கடந்த 1971ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட அந்­தத் திட்­டம், குற்­ற­வா­ளி­க­ளின் மறு­வாழ்­வில் தொண்­டூ­ழிய பங்­கேற்­பை­யும் சமூக விழிப்­பு­ணர்­வை­யும் ஊக்­கு­விக்­கிறது.

நீதி­மன்­றத்­தில் கண்­கா­ணிப்­புத் தண்­டனை விதிக்­கப்­பட்­டோரை கண்­கா­ணிக்­கும் பணியை திரு பிர­காஷ் போன்ற தொண்­டூ­ழி ­யர்­கள் கண்­கா­ணித்து அவர்­க­ளது தேவையை அறிந்து உதவி செய்து வரு­கின்­ற­னர்.

ஏறக்­கு­றைய 18 மாதம் முதல் 24 மாதங்­கள் வரை கண்­கா­ணிப்­பின் கீழ் உள்­ள­வர்­களை இந்த அதி­கா­ரி­கள் கண்­கா­ணிக்க வேண்டும்.

"இந்­தக் கட­மை­யில் நேர்த்­தி­யைக் காட்­டிய காலஞ்­சென்ற எனது தந்தை, கண்­கா­ணிப்­பில் இருந்­த­வர்­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக அவர்­க­ளைப் பற்­றியோ தாம் செய்­து­வந்த தொண்­டூ­ழி­யம் பற்­றியோ குடும்­பத்துடன் பகிர்ந்துகொள்ளவில்லை," என்று திரு பிர­காஷ் சொன்­னார்.

தமது தாயா­ரும் தொண்­டூ­ழி­யர் என்­ப­தால் தொண்­டூ­ழி­யம் தமது குடும்­பத்­தின் வாழ்க்கை முறை­யாக மாறி­விட்­ட­தாகக் கூறினார் சுய­தொழிலில் ஈடு­பட்டு வரும் பிர ­காஷ்.

கண்­கா­ணிப்­புத் தண்­ட­னைக்கு உட்­பட்­ட­வர்­களைக் கண்­கா­ணிப்பு எது­வும் இல்­லா­மல் நிதா­ன­மாக, சமூ­கத்­து­டன் இணை­யும்­ப­டி­யான நிலைக்­குக் கொண்­டு­வ­ரு­வதே தமது பணி­யின் இலக்கு என்று இது­வரை தமது அனு­ப­வத்­தில் ஆறு பேரைக் கண்­கா­ணித்து வந்த பிர­காஷ் சொல்­கி­றார்.

"அவர்­க­ளுக்கு ஒரு நண்­ப­ராக மாறி அவர்­க­ளு­டைய பொழு­து­போக்கு­கள், விருப்பு வெறுப்­பு­கள் போன்­ற­வற்றை அறிய முயற்சி செய்­வேன். ஒன்­றாக சாப்­பி­டு­வோம், அவர் களுக்­குப் பிடித்­த­மான சில இடங் களுக்­குச் செல்­வோம்.

"கண்காணிப்புப் பணிகளுக்கு உரிய கட்டுப்பாடுகளுடன் தமக்கும் கண்காணிக்கப்படும் நபருக்கும் இடையே யதார்த்தமான, சுதந்திர மான உணர்வு கொண்ட சூழலை உருவாக்க வேண்டும்.

"அவர்களுக்கு அறிவுறுத்துவதில் அவசரம் காட்டாமல் அவர்கள் கூறுவதைக் கேட்டு புரிந்து கொள்வது நல்ல கண்காணிப்பு அதிகாரிக்கு அழகு.

"இளையர்களுக்கும் யோசிக்கும் திறமை உள்ளது. குடும்பத்தினரின் கோபத்திற்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் இவர்களுக்குத் தேவை, பாரபட்சமில்லாத கேட்டலும் புரிந்து கொள்ளும் மனப்பான்மையும்," என்றும் அவர் கூறினார்.

கண்காணிப்பு உத்தரவு முடிந்த பிறகு மனம் திருந்தியவர்கள் நன்றி கூறும்போது தமக்கு ஏற்படும் உணர்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை என்று ஒற்றை யரான திரு பிரகாஷ் தெரிவித் தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!