தொண்டூழியத்திற்கு உன்னத விருது

சீ. ஜமிலா அக்­பர்

ஆரம்­ப­கா­லக் கல்­வித் துறை­யில் 1998ஆம் ஆண்டு அடி­யெ­டுத்து வைத்­த­வர் திரு­வாட்டி கன்­னி­கா­தேவி நாரா­ய­ண­சாமி, 59. இப்­போது திறன் ஆத­ரவு மையத்­தின் உதவி இயக்­கு­ந­ரா­க­வும் பிரஸ்­பிடேரி­யன் சமூக சேவை மையத்­தின் சிறப்­புத் தேவைப் பிரி­வின் வழி­காட்­டி­யா­க­வும் பணி­யாற்றி வரு­கி­றார்.

பல ஆண்­டு­க­ளாக இவர் சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­களுக்கு உத­வி­வ­ரு­கி­றார். சிங்­கப்­பூ­ரை­யும் தாண்டி மற்ற சில நாடு­களில் ஆரம்­ப­கா­லக் கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் தரப்­ப­ட­வேண்­டும் என்­பதை இவர் உணர்ந்­தார். சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னத்­து­டன் தொண்­டாற்றி இந்­நா­டு­களில் ஆரம்­ப­கா­லக் கல்வி­யின் முக்­கி­யத்­து­வத்தை மக்­களுக்கு எடுத்­து­ரைத்து வரு­கி­றார்.

அண்­மை­யில் சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னத்­தின் 30வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­போது முன்­மா­தி­ரி­யா­கத் திக­ழும் தொண்­டூழி­யர்­க­ளுக்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன. திரு­வாட்டி கன்­னி­கா­தேவிக்கு 'குடி­ம­கன் தூதர்' விருது வழங்­கப்­பட்­டது.

தம் குடும்­பத்­தின் ஆத­ர­வும் சக தொண்­டூ­ழி­யர்­க­ளின் ஒத்­துழைப்­பும் இல்­லை­யெ­னில் தமது தொண்­டூ­ழி­யப் பணி சாத்­தி­ய­மில்லை என்­றார் அவர்.

"இந்­தி­யா­வின் சில பகு­தி­களில், தொடக்­க­நிலை ஒன்­று­தான் ஆரம்­ப­கா­லக் கல்வி என்று பெற்­றோர்­கள் நினைத்­தி­ருந்­த­னர். இவர்­க­ளுக்கு ஆரம்­ப­கா­லக் கல்­வி­யின் முக்­கி­யத்­து­வத்தை நாங்­கள் உணர்த்­தி­னோம். வெவ்­வேறு கல்வி நிலை­யங்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரின் ஆரம்­ப­கா­லக் கல்­வி­மு­றை­யைப் பற்றி பகிர்ந்­து­கொண்­டோம். சில கல்வி நிலை­யங்­களில் இத­னால் மாற்­றம் ஏற்­பட்­டது எங்­களுக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது," என்று திரு­வாட்டி கன்­னி­கா­தேவி தெரி­வித்­தார்.

தொண்­டூ­ழி­யத்­தில் ஆர்­வம் காட்­டும் மற்­றொ­ரு­வர் 62 வயது உடல்­நோவு தணிப்பு பரா­ம­ரிப்­பாளர் ராம­சு­வாமி அகி­லேஸ்­வ­ரன். இவர் தமது 12 ஆண்டு தொண்­டூ­ழி­யச் சேவை­யின் மூலம் இந்­தோ­னீ­சியா­வில் நோய்த்­த­டுப்பு சிகிச்­சைத் தரத்தை உயர்த்தி 60,000த்திற்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­தி­யுள்­ளார்.

தமது முப்­பது ஆண்டு கால அனு­ப­வத்­தை­யும் நிபு­ணத்­து­வத்­தை­யும் இந்­தோ­னீ­சிய மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள் ஆகி­யோ­ரு­டன் பகிர்ந்­து­கொண்டு அவர்­க­ளின் திறன்­கள் மேம்­பட முக்­கி­யக் கார­ண­மாக இருந்­துள்­ளார் இவர்.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னத்­தின் பல தொண்­டூ­ழி­யத் திட்­டங்­க­ளுக்­குத் தலைமை தாங்கி, சிறப்­பா­கச் செய­லாற்றி வரும் திரு ராம­சு­வாமி அகி­லேஸ்­வ­ர­னுக்கு 'உல­கக் குடி­ம­கன்' விருது வழங்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!