சிங்கப்பூரில் முதன்முறையாக ஒரு வரைபடக் கண்காட்சி

உலக வரை­ப­டத் தொகுப்­பு­க­ளி­லி­ருந்து வெவ்­வேறு வடி­வங்­கள், அள­வு­கள், நிறங்­க­ளி­லான வரை­படங்­கள் ஒன்­று­தி­ரட்­டப்­பட்டு முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூ­ரில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

'உலகை வரை­ப­ட­மாக்­கு­தல்: ஆசிய வரை­ப­ட­வி­ய­லி­லி­ருந்து பெறப்­படும் கண்­ணோட்­டங்­கள்' என்ற இக்­கண்­காட்சி நேற்­றுத் தொடங்­கி­யது. அடுத்த ஆண்டு மே 8ஆம் தேதி வரை இது நடை­பெ­றும்.

தற்­போது பயன்­பாட்­டில் உள்ள அறி­வி­யல் சார்ந்த நவீன யுக வரை­ப­டங்­கள், கண்­காட்­சி­யில் இடம்­பெற்­றுள்ள வரை­ப­டங்­க­ளி­லி­ருந்து மாறு­பட்­டவை. அக்­கால வரை­ப­டங்­களில் கற்­ப­னை­யும் உண்­மை­யும் கலந்­தி­ருந்­தன.

இத்­த­கைய சிறப்பு வாய்ந்த வரை­ப­டங்­களை, பல நூற்­றாண்டு­களுக்கு முன்பு வாழ்ந்­த­வர்­கள் பெரி­தும் நம்­பி­யி­ருந்­த­னர். 60க்கும் மேற்­பட்ட இந்­தக் கலை, வர­லாற்­றுப் படைப்­பு­க­ளைக் கண்­காட்­சி­யில் காண­லாம்.

"அர­சி­யல், அழ­கி­யல் அம்­சங்­களு­டன் சம­யம் சார்ந்த கூறு­களில் இருந்த ஆர்­வம், வரை­படம் உரு­வாக்­கத்­தில் முக்­கி­யத்­து­வம் பெற்­றன. மேற்­கத்­திய தாக்­கம் 17ஆம் நூற்­றாண்­டுக்­கும் 19ஆம் நூற்­றாண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் ஆசி­யர்­க­ளி­டையே ஏற்­ப­டத் தொடங்­கி­ய­போது, சிக்­க­லான உல­கம் விடுக்­கும் மிரட்­ட­லைத் தணிக்க இது­போன்ற வரை­ப­டங்­கள் உத­வின," என்­றார் தேசிய நூலக வாரி­யத்­தின் கண்­காட்­சி­கள் பிரி­வின் மூத்த தலை­வர் திரு சுங் சாங் ஹோங். இந்­திய மர­பு­டைமை நிலை­யம், ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து பெறப்­பட்ட அரிய வரை­படங்­களும் கண்­காட்­சி­யில் இடம்­பெற்­றுள்­ளன.

சத்­ருன்­ஜய யாத்­திரை வரை­படக் கண்­ணோட்­டம், பெனா­ரஸ் வரை­ப­டம், ஜெயின் அண்­ட­வியல் வரை­ப­டம் ஆகி­ய­வை­யும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

"கீழை நாடு­க­ளுக்­கும் மேற்­கத்­திய நாடு­க­ளுக்­கும் இடையே வரை­ப­டங்­கள் பற்றி ஏற்­பட்ட கருத்­துப் பரி­மாற்­றங்­கள், எப்­படி ஆசிய வரை­ப­டங்­களை மேம்­படுத்­தின அல்­லது மாற்றி அமைத்­தன என்­பதை இந்த வரை­ப­டங்­கள் காட்டு­கின்­றன," என்று தேசிய நூல­கத்­தின் அரும்­பொ­ரு­ள­கப் பிரி­வில் பணி­பு­ரி­யும் மூத்த நூல­க­ரான திரு­மதி மகேஸ்­வரி பெரி­ய­சாமி தெரி­வித்­தார்.

வரை­ப­டங்­களில் வேற்று மொழிச் சொற்­கள் இருந்­த­தால், அவற்றை மொழி­பெ­யர்ப்­ப­தற்­காக பல நாடு­க­ளைச் சேர்ந்த மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளி­டம் உதவி கோரி இந்த வரை­பட ஆராய்ச்சியை வெற்­றி­க­ர­மா­கச் செய்து முடித்­துள்­ளார்­கள், கண்­காட்­சி­யின் ஏற்­பாட்­டா­ளர்­கள்.

"நாம் வாழும் உல­கத்­தை­யும் சுற்­றி­யுள்ள வட்­டா­ரத்­தை­யும் நம் முன்­னோர்­கள் எப்­ப­டிப் பார்த்­தார்­கள் என்­பதை இந்த வரை­ப­டங்­களின் மூலம் அறிந்­திட முடி­கிறது," என்று திரு­மதி மகேஸ்­வரி விளக்­கி­னார்.

முன்­னோர்­கள் பின்­பற்­றிய பாரம்­ப­ரி­யத்தை மட்­டும் காட்­டாமல் அவர்­க­ளின் மொழி எவ்­வாறு வேறு­பட்­டது என்­ப­தை­யும் இந்த வரை­ப­டங்­கள் காட்­டு­கின்­றன.

"பல இன சமு­தா­ய­மான சிங்­கப்­பூ­ருக்கு, இந்­தக் கண்­காட்­சி­யைக் கொண்டு வரு­வது எங்­களுக்கு மிக­வும் பெரு­மை­யாக உள்­ளது," என்று நூலக வாரி­யத்­து­டன் இக்­கண்­காட்­சித் திட்­டத்­திற்­காக இணைந்து பணி­யாற்­றிய இரு பிரெஞ்சு அரும்­பொ­ரு­ள­கப் பொறுப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

திரு பியர் சிங்­கா­ர­வேலு, திரு ஃபேபரிஸ் ஆர்­கௌன்ஸ் ஆகிய அவ்­வி­ரு­வ­ரும் ஆசிய வரை­படங்­களைக் கலைப் படைப்­பு­கள் என வரு­ணித்­தும் இருந்­த­னர்.

விக்­டோ­ரியா ஸ்தி­ரீட்­டில் அமைந்­தி­ருக்­கும் தேசிய நூல­கக் கட்­ட­டத்­தின் பத்­தா­வது மாடி காட்­சிக் கூடத்­தில் தின­மும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி­வரை நடை­பெ­றும் இக்­கண்­காட்­சிக்கு அனு­மதி இல­வ­சம்.

கூடு­தல் செய்தி:

பாவை சிவக்­கு­மார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!