வெளிநாட்டு ஊழியர் நலன் நாடும் நாள் நலன் பேணும் திட்டங்கள், ஊக்குவிப்புகள், சுகாதாரப் பராமரிப்பு சாதனங்கள், போட்டிகள், கொண்டாட்டம்

அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினத்தை ஒட்டி சிங்கப்பூரில் நேற்று வெளிநாட்டு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டனர். கொண்டாட்டங்களுடன் காப்புறுதி உள்ளிட்ட பல நன்மைகளுக்கு வழிவகுக்கும் அவர்களுக்கான இணை உறுப்பினர் திட்டமும் தொடங்கப்பட்டது.

கி.ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பாது­காப்­பை­யும் அவர்­க­ளுக்­கான ஆத­ர­வை­யும் மேம்­ப­டுத்­தும் நோக்­கில் வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யம், அவர்­க­ளுக்­காக புதி­தாக இணை உறுப்­பி­னர் திட்­டம் ஒன்­றைத் தொடங்­கி­யுள்­ளது.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சைச் சேர்ந்த இந்த நிலை­யம், இரு கட்­டங்­க­ளாக இந்த இணை உறுப்­பி­யத்தை வெளி­யி­டும்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான சிங்­கப்­பூர் அறி­மு­கத் திட்­டம் (செட்­ட­லிங்-இன் புரோ­கி­ராம்) திட்­டத்­தில் இணை­யும் புதிய ஊழி­யர்­க­ளுக்கு இந்த உறுப்­பி­யம் முத­லில் வழங்­கப்­படும்.

அடுத்த கட்­ட­மாக, தற்­போது இங்கு பணி­பு­ரி­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் 2022ஆம் ஆண்டு முதல் சேர்க்­கப்­ப­டு­வர்.

வேலை­யி­டத்­திற்கு வெளி­யில் ஏற்­படும் விபத்­து­கள், உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் நோய்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான காப்­பு­றுதி, இந்த உறுப்­பி­யத்­தின் முக்­கி­ய­மான அங்­கம். இவை தற்­போது நடப்­பில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான காப்­பு­று­தித் திட்­டங்­களில் இல்லை என்­ப­தால் இந்தப் புதிய திட்­டத்தை மேம்­ப­டுத்­தப்­பட்ட திட்­டம் என்று என்­டி­யுசி வர்ணித்­தது.

இந்த உறுப்­பி­யத்­தின் ஆண்­டுக் கட்­ட­ணம் $24. திட்­டத்­தில் சேர்­வோ­ருக்கு முதல் ஆண்­டுக்­கான கட்­ட­ணம் ஆறு வெள்­ளி­யா­கக் குறைக்­கப்­படும்.

அடுத்த ஆண்­டின் முதல் காலாண்­டிற்­குள் இத்­திட்­டத்­தில் 100,000 ஊழி­யர்­க­ளைச் சேர்க்க இலக்கு கொண்­டுள்ளதாக வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யத்தின் தலை வர் இயோ குவாட் குவாங் கூறி­னார்.

ஊழி­யர்­க­ளி­டம் திரட்­டப்­பட்ட கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­பட்ட இந்த உறுப்­பி­யத் திட்­டம், ஊழி­யர்­கள் மீது தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் கொண்­டுள்ள கடப்­பாட்­டைப் பிர­தி­ப­லிப்­ப­தாக தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் தலைமைச் செய­லா­ளர் இங் சீ மெங் தெரி­வித்­தார்.

மின்­னி­லக்­கச் செயலி மூலம் ஊழி­யர்­கள் இதன் சேவை­க­ளைப் பெற­லாம்.

"கற்­றல், திறன் மேம்­பாடு, தொலை­பேசிச் சேவை­கள், மருத்­து­வச் சேவை­கள், வேலை முகப்­புச் சேவை­கள், வேலை­யிட விபத்­துக்­கான காப்­பு­றுதி போன்­ற­வற்­றுக்­கா­னச் சலு­கை­களை ஊழி­யர்­கள் இந்­தச் செய­லி­மூ­லம் பெறு­வர்," என்­றும் திரு இங் கூறி­னார்.

எண் 51 சுன் லீ ரோட்­டில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யத்­தின் கேளிக்கை மன்­றத்­தில் நேற்று நிகழ்ந்த அனைத்­து­லக வெளி­நாட்டு ஊழி­யர் தினக் கொண்­டாட்­டங்­க­ளின்­போது செய்­தி­யாளர்­களி­டம் பேசிய திரு இங், இந்­தக் காப்­பு­று­தித் திட்­டம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு மிகக் கட்­டுப்­ப­டி­யான திட்­டம் என்­றும் வேலை­யி­டத்­திற்கு வெளி­யி­லுள்ள சூழ­லி­லும் ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை இத்­திட்­டம் உறுதி செய்­யும் என்றும் கூறி­னார்.

"சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யின் ஓர் அங்­கத்­தி­ன­ரான வெளி­நாட்டு ஊழி­யர்­கள், இங்கு வசிக்­கும் காலம் பய­னுள்­ள­தாக அமை­வ­தற்கு இச்­செ­யலி வகை செய்­யும்," என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

கடந்த ஏழு ஆண்­டு­க­ளா­கக் கட்­டு­மா­னத்­து­றை­யில் பாது­காப்பு ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் 30 வயது ஜான் பீட்­டர் இந்­தப் புதிய உறுப்­பி­யத் திட்­டத்தை வர­வேற்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"இத்­திட்­டத்­தில் அடங்­கும் புதிய காப்­பு­று­தித் திட்­டம், முந்­தைய திட்­டங்­க­ளை­விட சிறந்­தது என நான் கரு­து­கி­றேன். வேலை இடத்­திற்கு வெளியே நடக்­கும் எதிர்­பா­ராத விபத்து போன்ற அசம்­பா­வி­தங்­களுக்கு இத்­திட்­டம் பாது­காப்பு அளிக்­கிறது," என்று தஞ்­சா­வூ­ரைச் சேர்ந்த திரு ஜான் கூறி­னார்.

"அசம்­பா­வி­தங்­கள் ஏற்பட்டால் நமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு ஏற்­ப­டக் கூடிய பெரும் சிர­மத்­தைக் குறைக்க இந்­தச் சிறு தொகை உத­வ­லாம்," என்­றார் செய­லாக்க நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் தமி­ழ­கத்­தின் புதுக்­கோட்டை மாவட்­டத்­தைச் சேர்ந்த திரு அய்­யப்­பன், 41.

காப்­பு­று­தி­யு­டன் திறன் மேம்­பாட்டுச் சலு­கை­களைப் பெறு­வது தமக்கு கூடு­தல் ஊக்­கு­விப்­பைத் தந்­தி­ருப்­ப­தாக கட்­டு­மா­னத் துறை­பாது­காப்பு அதி­கா­ரி­யான திரு சி. பாண்­டி­யன், 46, கூறி­னார்.

ஊழி­யர்­க­ளின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வித­மாக இந்­தத் திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார். அந்­தக் கொண்­டாட்­டங்­களில் ஊழி­யர்­க­ளுக்கு 3,000 அன்­ப­ளிப்­புப் பைகள், 6,500 பேருக்­கான உணவு, $30,000 பெறு­மா­ன­முள்ள பற்­றுச்­சீட்­டு­கள் ஆகி­யவை விநி­யோ­கம் செய்­யப்­பட்­டன.

என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் பேரங்­காடி, $1.8 மில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான கைச் சுத்­தி­க­ரிப்­பான், வைட்­ட­மின் மாத்திரை­கள், உண­வுப்­பொ­ருட்­கள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­களை நேற்று 'டிஏ­எஸ்­எல்' எனப்­படும் ஊழி­யர் தங்­கும் விடு­தி­க­ளுக்­கான சங்­கத்­திற்கு வழங்­கி­யது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்டி அவர்­க­ளு­ட­னான ஒரு­மைப்­பாட்­டைக் கொண்­டா­டு­வ­தன் மூலம் ஃபேர்பி­ரைஸ், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் பாராட்­டும் சமு­தா­யத்­து­டன் இணை­வ­தாக ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் தலைமை நிர்வாகி சியா கியான் பெங் தெரி­வித்­தார். இந்த நன்­கொ­டை­யின் மூலம் ஊழி­யர்­க­ளின் பாது­காப்­பும் நல­னும் மேம்­படும் என நம்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு ஊழியர் நிலையம் மெய்நிகர் நிகழ்ச்சியுடன் கூடிய நேரடி கலை நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழக திரை நட்சத்திரங்கள் ரம்யா பாண்டியன், விமல், பாடகி உஜ்ஜைனி ராய் ஆகியோருடன் வங்காள பிரபலங்களும் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை நிலையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இரவு 7.30 மணி முதல் 9.30 மணிவரை காணலாம். கேளிக்கை அங்கங்கள் மட்டுமின்றி, அதிர்ஷ்டக் குலுக்கு, ஊழியர்களுடனான போட்டி அங்கம் மற்றும் நிலையத்தின் அடித்தளத் தூதர்களைக் கௌரவிக்கும் அங்கமும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை (IMD) கொண்டாட, மனிதவள அமைச்சின் கீழ் உள்ள 'ஏஸ்' எனப்படும் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழு, இருபதுக்கும் மேற்பட்ட பங்காளிகளுடன் இணைந்து, வெளிநாட்டு ஊழியர்களுக்கான அனைத்து எட்டு பொழுதுபோக்கு நிலையங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கொவிட் சூழலால் கடந்த ஈராண்டுகளாக விடுதிகளில் முடங்கிக் கிடந்த ஊழியர்கள் பலரும் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், சுற்றுலாக்கள் என பல்வேறு அங்கங்களிலும் பங்கேற்று நேற்றைய விடுமுறை நாளை உல்லாசமாகக் களித்தனர்.

டிசம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை இந்த நிலையங்களிலும் 500 ஊழியர் தங்குவிடுதி களிலும் 100,000 அன்பளிப்புப் பைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!