ஆபத்தில் உதவும் கரங்களுக்கு வலுசேர்க்கும் பயிற்றுவிப்பாளர் அப்துல் ரஹ்மான்

கி. ஜனார்த்தனன்

மருத்­துவ அவசரநிலை ஏற்­படும் நேரத்­தில் சம்­பவ இடங்­க­ளுக்கு விரைந்து உத­வு­வ­தில் பல்­லாண்டு அனு­ப­வம் கொண்ட அதி­காரி அப்­துல் ரஹ்­மான் அப்­துல் ரசாக், 37, அடுத்த தலை­முறை சேவை­யா­ளர்­களை உரு­வாக்­கு­வ­தில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யில் மருத்­துவ உதவி அதி­கா­ரி­யாக கடந்த 19 ஆண்­டு­ க­ளா­கச் சேவை­யாற்­றிய திரு அப்­துல் ரஹ்­மான், குடி­மைத் தற்­காப்­பின் 24ஆம் ரோட்டா தள­பத்­திய பயிற்­சி­யில் டிசம்­பர் 30ஆம் தேதி தேர்ச்சி பெற்ற அதி­கா­ரி­களில் ஒரு­வர்.

தேசிய சேவையை முடித்த பின்­னர் தமது 19 வய­தில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யில் முழுநேர­மா­கச் சேர்ந்த திரு அப்­துல் ரஹ்­மான், ஆபத்­தில் இருப்­போ­ருக்கு உத­வு­வ­தில் உற்­சா­கத்­தை­யும் நிறை­வை­யும் காண் ­ப­தா­கத் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"திறந்­த­வெளி கார் நிறுத்­தம் ஒன்­றில் நிறை­மாத கர்ப்­பி­ணிக்­குப் பிர­ச­வம் பார்த்­தது எனது சேவை காலத்­தில் வித்­தி­யாச­மான அனு­ப­வ­மாக இருந்­தது. அபா­ய­கட்­டத்­தைத் தாண்­டிய பிறகு அனை­வ­ரும் உணர்ந்த நிம்­ம­தி­யும் வெளிப்­ப­டுத்­திய நன்றி உணர்­வும் எனக்கு நிறை­வாக இருந்­தது," என்று அவர் கூறி­னார்.

பின்னர், இளைய அதி­கா­ரி­களை வழி­நடத்தும் பணிக்கு மாறிய திரு அப்­துல் ரஹ்­மான், அந்­தப் பணிக்கு நேர்­மை­யும் கட்­டொ­ழுங்­கும் தேவைப்­ப­டு­வ­தாகக் கரு­து­கி­றார்.

"தற்­போது பாடங்­களை இணை­யத்­தில் முன்­கூட்­டியே படிக்­கும் வசதி உள்­ள­தால் எனது மாண­வர்­கள் முன்­கூட்­டியே படித்­து­விட்டு கேள்­வி­க­ளு­டன் பயிற்சி வகுப்பு வரு­வர்.

"அந்­த வகுப்­பில் நான் மட்­டும் அவர்­க­ளுக்குப் பாடம் சொல்­லித் தருவதற்குப் பதி­லாக மாண­வர்­கள் அனை­வ­ரும் கலந்­து­ரை­யா­டும் சூழலை உரு­வா­க்குவது வழக்­கம்," என்று அவர் கூறி­னார்.

பணி­யில் இருந்துகொண்டே சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­க­ழ­கத்­தில் நிதி­யி­யல் முடித்த திரு அப்­துல் ரஹ்­மான், இதற்­காக தமது மனை­வி­க்கு நன்றி தெரி­விக்க விரும்­பு­வ­தா­கக் கூறி­னார். படிப்­பை­யும் சுழற்சி முறை­யி­லான வேலை நேரத்­தை­யும் சமா­ளிப்­பது கடி­னம் என்­றா­லும் குடும்பம் மற்றும் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் ஆத­ர­வு தமக்கு கைகொ­டுத்­த­தா­கக் கூறி­னார்.

"நமது குடி­மைத் தற்­காப்­புப் படை வருங்­கா­லத்­தில் மேன்­

மே­லும் சிறப்புப் பெறும் என்­ப­தில் எனக்­கு சந்­தே­க­மில்லை. தொடர்ந்து என்­னால் இயன்ற அளவு பங்­காற்­று­வதே என் விருப்­பம்," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!