மரபு போற்றும் காட்சிப் பெட்டகம்

தமிழர்களின் தொன்மையான மரபு, பண்பாடு, நாகரிகத்தின் சங்கமமாக விளங்குகிறது சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டாரமும் அங்குள்ள கடைகளும்! சிங்கப்பூர் இந்தியர்களின் வாழ்வியலில் பிணைந்துள்ள அவ்வட்டாரத்தில் செழுமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள எட்டுக் கடைகளை, அவை சமூகத்தில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை அங்கீகரித்துச் சிறப்பிக்கிறது தெருமுனை அரும்பொருளகத் திட்டம்.

கி.ஜனார்த்­த­னன்

கேம்­பல் லேனில் அமைந்­துள்ள ஜோதி ஸ்டோர் புஷ்­பக் கடைக்­குச் செல்­ப­வர்­கள், கடை­யு­டன் தொடர்­பு­டைய பொருள்­க­ளைக் காட்­டும் அரும்­பொ­ரு­ள­க­மாக விளங்­கும் சிறிய வெண்­ணிற காட்­சிப்­பெட்டி ஒன்று முகப்­பில் வைக்­கப்­பட்­டி­ருப்­பதைக் கண்­டி­ருக்­க­லாம்.

1960களில் ஒட்­டுக்­க­டை­யாக இருந்த ஜோதி ஸ்டோ­ரின் வர­லாற்றை விளக்­கும் பனு­வல்­களும் பழைய படங்­களும் நீல நிறப் பை, வாழை நார், வண்­ணக் களி­மண் தீபம், வளை­யல் போன்ற பொருள்­களும் அச்சிறு அரும்­பொ­ரு­ள­கத்­தில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­லும் சிங்­கப்­பூர் டைகர் ஸ்டாண்­டர்­டி­லும் செய்­தித்­தாள் அச்­சுக்­கோப்­பா­ள­ராகப் பணி­யாற்­றிய திரு முரு­கையா ராமச்­சந்­திரா, 90, 1960ல் பூக்­க­டை­யைத் திறந்து, தம் மக­ளின் பெயரை அதற்­குச் சூட்­டி­னார். இந்­தக் கடை­யைத் தொடங்­கி­ய­போது தமக்கு இரண்டு வயது என்று கூறிய திரு முரு­கை­யா­வின் மக­னும் கடை­யின் இப்­போ­தைய நிர்­வா­கி­யு­மான ராஜ்­கு­மார் சந்­திரா, 63, தங்­க­ளது கடை­யின் வளர்ச்சி, சிங்­கப்­பூர் இந்­தி­யச் சமூ­கத்­தின் வளர்ச்­சியை எதி­ரொ­ளிப்­ப­தா­கக் கூறி­னார்.

இக்­க­டை­யைப்­போல, லிட்­டில் இந்­தி­யா­வில் நெடுங்­கால மர­புள்ள மேலும் ஏழு கடை­க­ளி­லும் காட்­சிப் பெட்­டி­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. தேசிய மர­பு­டைமைக் கழகத்­தின் தெரு­முனை அரும்­பொ­ரு­ள­கத் திட்­டத்­தின்­கீழ் அந்­தக் காட்­சிப் பெட்டி­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

தேசிய மர­பு­டைமைக் கழகத்தின் 'அவர்­எஸ்ஜி' மர­பு­டை­மைத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, மர­பு­டைமை பற்­றிய விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்­க­வும் சமூ­கங்­க­ளுக்கு இடை­யில் ஒற்­று­மையை வலுப்­படுத்­த­வும் இந்த தெரு­முனை மர­பு­டைமை அரும்­பொ­ரு­ள­கங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சுற்­று­லாக்­க­ளை­யும் பயி­ல­ரங்­கு­களை­யும் நடத்த வணிகங்­க­ளுக்கு 'அவர்­எஸ்ஜி' மர­பு­டை­மைத் திட்­டம் உத­வு­கிறது. தேசிய மர­பு­டைமைக் கழகம் நடத்­தும் சிங்­கப்­பூர் மர­பு­டைமை விழா போன்ற நிகழ்வு­களில் இக்­க­டை­கள் பங்கேற்கவும் இத்திட்டம் உத­வு­கிறது.

மூவாண்டுச் சோத­னைத் திட்­ட­மாக, பாலஸ்­டி­யர் வட்­டா­ரத்­தில் ஐந்து மர­பு­டைமை வர்த்­த­கங்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் 2020ஆம் ஆண்டு மார்ச்­சில் இது தொடக்­கம் கண்­டது. பின்­னர் ஏப்­ரல் 2021ல் கம்போங் கிளாம் வட்­டா­ரத்­தில் ஏழு கடை­களில் காட்­சிப் பெட்­டி­கள் வைக்­கப்­பட்­டன.

அணிமணி பொற்­சாலை, தண்­ட­பாணி மளி­கைக்கடை, எஸ்­ஐ­எஸ் இறைச்­சிக்கடை, ஹனிஃபா டெக்ஸ்­டைல்ஸ், ஆனந்த பவன், கோமள விலாஸ், தி பனானா லீஃப் அப்­போலோ ஆகி­யவை இந்­தத் திட்­டத்திற்குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு இருக்கும் மற்ற ஏழு கடை­கள்.

'நகைத் தொழிலுக்கே கௌரவம்'

தமது கடைக்­குக் கிடைத்­துள்ள அங்­கீ­கா­ரத்­தின் மூலம் சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளின் வாழ்­வி­ய­லில் முக்­கிய இடம் வகிக்­கும் அணிகலன் செய்­யும் கலையே கௌர­விக்­கப்­பட்­டுள்­ள­தாக சிராங்­கூன் சாலை­யில் அமைந்­துள்ள அணிமணி பொற்­சா­லை­யின் உரி­மை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு பி.வி. அசோ­கன், 64, தெரி­வித்­தார்.

"1948ல் பட்­டுக்­கோட்­டை­யி­ல் இ­ருந்து சிங்கப்பூர் வந்து, சிராங்­கூன் சாலையில் இக்கடை­யைத் திறந்தார் பொற்கொல்லரான திரு ரத்தி­ன­வேலு, 2006ஆம் ஆண்­டு­வரை உரி­மை­யா­ள­ராக இருந்தார். 2006ல் பிறகு அவ­ரது குடும்­பத்­தைச் சேர்ந்த நாங்­கள் நிர்­வ­கித்து வரு­கி­றோம்," என்று திரு அசோகன் கூறி­னார்.

மூன்று தலை­மு­றை­க­ளைக் கடந்து இயங்­கி­வ­ரும் தண்­ட­பாணி மளி­கைக் கடைக்கு இந்த அங்­கீ­கா­ரம் கிடைத்­துள்­ள­து மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார் அந்தக் ­க­டையை 1960களில் நிறு­விய திரு சண்­மு­கத்­தின் மரு­ம­கள் மீனா ஞான­பண்­டி­தன், 45.

"உணவிற்குப் புகழ்­பெற்ற காரைக்­கு­டி­யி­லி­ருந்து 1946ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ருக்கு வந்த திரு சண்­மு­கம், பாரம்­ப­ரிய மசாலா கல­வை­க­ளைப் பற்றி நன்கு தெரிந்­த­வர். அவர் அமைத்­தி­ருந்த கடை­யின் தோற்­றம் முதல் மளி­கைப்­பொ­ருள்­க­ளின் சுவைவரை சிறிதும் மாற்றாமல் பாது­காத்து வரு­கிறோம்," என்றார் திருவாட்டி மீனா.

'தந்தையார் சிறப்பிப்பு'

பஃப்ளோ சாலை­யில் அமைந்­துள்ள 'எஸ்­ஐ­எஸ் பிரி­மி­யம் மீட்ஸ்' இறைச்­சிக்­க­டை­யின் உரி­மை­யா­ளர் ஜாய்ஸ் கிங்ஸ்லி, இந்த அங்­கீ­கா­ரம் தம் தந்தை சின்­ன­சாமி இரு­த­ய­சாமி­யைப் பெரு­மைப்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"1949ஆம் ஆண்­டில் என் தந்தை தமது 14 வய­தில் சிங்­கப்­பூ­ருக்­குக் கப்­ப­லில் வந்தார். இறைச்­சிக்­கடை யில் வேலைக்குச் சேர்ந்து, அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு, பின்­னர் தேக்கா சந்­தை­யில் தனியாகக் கடை­ திறந்­தார்," என்று திருவாட்டி கிங்ஸ்லி கூறினார்.

"முப்­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக க­டை­யின் வளர்ச்­சி­யை நான் கண்­டுள்ளதால் லிட்டில் இந்தியா வரலாற்றுடன் எங்களது கடைக்கு உள்ள பிணைப்பை என்­னால் நன்கு உணர முடிகிறது," என்று அவர் சொன்னார்.

பெரும்­பா­லான வாடிக்­கை­யா­ளர்­கள் இந்­துக்­களும் முஸ்­லிம்­க­ளு­மாக இருப்­ப­தால் அவர்­க­ளது சமய உணர்­வு­க­ளுக்கு மதிப்பு கொடுத்து மாட்­டி­றைச்­சி­யை­யும் பன்றி இறைச்­சி­யை­யும் இக்­கடை விற்­ப­தில்லை.

தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்துவதில் முன்னோடி

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழ­மை­யான இந்­திய உண­வ­கங்­களில் ஒன்­றான ஆனந்த பவன், புதிய தொழில்­நுட்ப முறை­க­ளைக் கையாள்­வ­தில் முன்­னோ­டி­யா­கத் திகழ்­கிறது. கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லில் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க இயந்­திர மனி­தர்­க­ளைப் பயன்­ப­டுத்­திய ஆனந்­த­ப­வன், பாரம்­பரிய சேவைத் தரத்­தைத் தொடர்ந்து வழங்க புதுப்­புது தொழில்­நுட்ப உத்­தி­க­ளைப் பயன்­ப­டுத்த எப்­போ­தும் விரும்­பும் என்­றார் அதன் உரிமை­யா­ளர் திரு வீரன்­கு­மார் எட்­டிக்­கன், 38.

1924ஆம் ஆண்­டில் திரு குழந்தை­வேலு முத்­து­சாமி கவுண்­டர், தம் சகோ­த­ரர்­க­ளு­டன் ஆனந்த பவன் உண­வகத்­தைத் தொடங்­கி­னார். தற்­போது ஐந்து கிளை­க­ளு­டன் இயங்கி வரும் அவ்வுண­வ­கத்­தின் மரபுடைமைக் காட்­சிப் பெட்டி சிராங்­கூன் சாலை­யிலுள்ள அதன் கிளைக்கு அரு­கில் இருக்­கும் சுவரை ஒட்டி வைக்­கப்­பட்­டு உள்­ளது.

1947ல் தொடங்­கப்­பட்ட கோமள விலாஸ், பாரம்­ப­ரிய உண­வு­க­ளு­டன் சிங்­கப்­பூர்த் தமி­ழர்­க­ளின் உண­வுத் தெரி­வு­களில் பல்­வேறு புது­மை­க­ளை­யும் அறி­மு­கம் செய்­துள்­ளது. இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு 'கருணா விலாஸ்' என்ற உண­வ­கத்­தின் உரி­மை­யாளர் இந்­தி­யா­வுக்­குத் திரும்­பி­யதை அடுத்து, அதனை வாங்கி அதற்குத் தம் மனை­வி­யின் பெயரைச் சூட்­டி­னார் திரு முரு­கையா.

தி பனானா லீஃப் அப்­போலோ உண­வ­கத்தை 1974ல் நிறு­விய சமை­யற்­க­லை­ஞர் எஸ். செல்­லப்­பன், 1960ல் காரைக்­கு­டி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ர் வந்து, பழம்­பெ­ரும் வர்த்­தகர் கோவிந்­த­சாமி பிள்­ளைக்கு சமை­யற்­கா­ர­ரா­கப் பணி­யாற்­றி­னார். பின்பு அவர் சிறிய தோசைக் கடை ஒன்று நடத்தி, அதற்­குப் பிறகு கஃப் ரோட்­டில் உண­வ­கம் ஒன்றை தொடங்­கி­னார். 1983ஆம் ஆண்­டில் ரேஸ் கோர்ஸ் சாலைக்கு அக்கடை இடம்­பெ­யர்ந்­தது.

"கடின உழைப்­பா­ளி­யும் கட்­டொ­ழுங்கு மிக்­க­வ­ரு­மான என் தந்தை, குறையாத தரமே பாரம்­ப­ரி­யத்­தின் பெருமை என நம்­பி­ய­வர்," என்றார் அவரின் இரண்டாவது பிள்ளையான திரு சங்கரநாதன்.

கேம்­பல் லேனில் 1957ஆம் ஆண்டு திரு கே. முகம்­மது ஹனிஃபா சிறிய அளவில் தொடங்­கிய தெரு­வோர துணிக்­கடை, இன்று மலே­சி­யா­வி­லும் இந்­தி­யா­வி­லும் கிளை­க­ளைக் கொண்டு பெரும் வணி­க­மாக விரி­வ­டைந்­து உள்­ளது. அத்துடன், வீட்­டிற்­குத் தேவை­யான பொருள்­க­ளை­யும் மளிகைப்­பொ­ருள்­க­ளை­யும் விற்­கும் அக்கடையை இப்­போது திரு ஹனிஃபா­வின் பிள்­ளை­கள் நிர்வகித்து வரு­கின்­ற­னர்.

சிராங்­கூன் சாலை­யில் உள்ள ஹனிஃபா டெக்ஸ்­டைல்­சுக்­கு­முன் மர­பு­டை­மைக் காட்­சிப் பெட்டி வைக்கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!