சிங்கப்பூர் இந்தியர் மரபை அறிந்துகொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்

எஸ்.விக்னேஸ்வரி

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தினுள் முதன்­மு­றை­யா­கக் காலடி எடுத்த வைத்­த­போது திரு வைத்தி­ய­நா­த­னுக்கு விவ­ரிக்க முடி­யாத மகிழ்ச்சி, பெருமை!

கல்­லும் மண்­ணும் கம்­பி­யு­மா­கக் கட்­டு­மா­னப் பணி நடந்­த­போது, சாரக்­கட்­டு­களில் ஏறி இறங்கி, உடல் முழுதும் சிமென்ட் தூசி படிய பல மாதங்­கள் கேம்­பல் லேனில் வேலை பார்த்த அவர், கட்­ட­டப் பணி­கள் முடிந்த பின்­னர் உள்ளே சென்று பார்த்­த­தில்லை.

"இது நான் கட்­டிய கட்­ட­டம். இங்கே இத்­தனை காட்­சிப்­பொ­ருள்­களை வைப்­பார்­கள் என்று நான் எதிர்­பார்க்­க­வில்லை. எவ்­வ­ளவு அழ­காக இருக்­கிறது!" என்று பெரு­மி­தத்­து­டன் அவர் கூறி­னார்.

"சிங்­கப்­பூர் இந்­தி­யர்­கள் பற்றி நிறைய தக­வல்­களை இங்கே தெரிந்து­கொண்­டேன். இங்­குள்ள தமி­ழர்­க­ளின் வர­லாறு 2,000 ஆண்டு­க­ளுக்கு முந்தையது என்­பது இங்கு வந்த பிற­கு­தான் தெரிந்­தது," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 20 ஆண்டு­களாகப் பணி­பு­ரி­யும் 45 வய­தான திரு வைத்­தி­ய­நா­தன், இந்­திய மர­பு­டைமை நிலை­யம், தேக்கா கடைத்­தொ­குதி, தி வெர்ஜ் போன்ற கட்­ட­டங்­க­ளின் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்­கான மேல­ளா­ராக இருந்­தார்.

ஆனால், இது­வரை அவர் அந்தக் கட்­டங்­க­ளுக்­குள் சென்று பார்த்­த­தில்லை.

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் முடி­வடைந்து ஏறக்­கு­றைய எட்டாண்டு­களான நிலை­யில், முதன்­மு­றை­யாக அந்­நி­லை­யத்தை சென்ற வாரம் அவர் சுற்­றிப்­பார்த்­தார்.

இந்­தியா, பங்­ளா­தே‌‌ஷ், மியன்­மார், தாய்­லாந்து ஆகிய நாடு­களைச் சேர்ந்த 45 ஊழி­யர்­கள் பங்­கேற்ற இந்­தச் சுற்­று­லாவை வெளி­நாட்டு ஊழி­யர்­ நிலை­யம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அவர்­க­ளுக்கு நிலை­யத்­தைச் சுற்­றிக்­காட்­டிய தொண்­டூ­ழி­யர்­கள், ஆங்­கி­லத்­தி­லும் தமி­ழி­லும் அங்­குள்ள காட்­சிப்­பொ­ருள்­க­ளைப் பற்றி விளக்­கிக் கூறி­னர்.

சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளின் வர­லாறு, கலா­சா­ரம், மர­பு­டைமை போன்­ற­வற்றை எடுத்­துக்­கூற முதன்­மு­றை­யாக இச்­சுற்­று­லா­விற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தாக வெளி­நாட்டு ஊழி­யர்­ நிலை­யம் கூறி­யது.

"பெரும்­பா­லான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளது விடுப்பு நாள்­களில் விலங்­கி­யல் தோட்­டம், பற­வைப் பூங்கா, மரினா பே போன்ற சுற்­று­லாத் தலங்­க­ளுக்கே செல்­வர்.

"ஆனால், மர­பு­டைமை நிலை­யங்­கள், அரும்­பொ­ரு­ள­கங்­கள் போன்ற இடங்­க­ளுக்­குச் செல்­லும்­போ­து­ சிங்­கப்­பூ­ரின் பல்லினக் கலா­சா­ரத்­தை­யும் வர­லாற்­றை­யும் அவர்­கள் அறிந்­து­கொள்ள முடி­கிறது.

"தாங்­கள் வாழும் சமூ­கத்­தைப் பற்றி அவர்­கள் அறிந்து வைத்­து இ­ருப்­பது முக்­கி­யம்," என்று வெளி­நாட்டு ஊழி­யர்­ நிலை­யத்­தின் மூத்த அதி­காரி சதீ‌ஷ் நாயுடு குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­று­டன் தமிழ்­நாட்டு வர­லாற்­றை­யும் அறிந்து­கொள்ள இந்­தச் சுற்­றுலா உத­வி­ய­தாக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கூறி­னர்.

"இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூருக்கு வந்த தமி­ழர்­கள் பற்­றி­யும், இந்­நாட்­டில் அவர்­க­ளு­டைய பங்­களிப்பு பற்­றி­யும் விளக்­க­மா­கக் கூறி­னர். தமி­ழர்­க­ளின் மர­பு­டைமை இந்­தி­யா­வை­விட சிங்கப்­பூ­ரில் சிறப்­பா­கக் கட்­டிக்­காக்­கப்­ப­டு­வது குறிப்­பி­டத்­தக்­கது," என்­றார் திரு சுகு­மார், 45.

உல­கெங்­கும் கிரு­மித்­தொற்­றுச் சூழ­லால், கடந்த சில ஆண்­டு­களாக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளது குடும்­பங்­களை நேரில் சென்று பார்க்க முடி­யாத நிலை. அத­னால் சில­ருக்கு மன­அ­ழுத்­தம் ஏற்­பட்­டது.

"என் நண்­பர்­க­ளு­டன் சுற்­று­லா­விற்கு வந்­த­தில் மகிழ்ச்சி. என் நண்­பர்­கள், உற­வி­னர்­களை இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­திற்கு வரு­கை­தர ஊக்­கு­விப்­பேன்," என்று தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­புரி­யும் திரு செந்­த­மிழ்ச்­செல்­வன், 25, கூறி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அளித்த கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யில், இது­போன்ற சுற்­று­லாக்­களை மற்ற மர­பு­டைமை நிலை­யங்­க­ளி­லும் நடத்த வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யம் திட்­ட­மிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!