நல்வழியைக் காட்டும் சமரசம்

அண்டை வீட்­டுக்­கா­ரர் புகை­பி­டிப்­பதைத் தாங்­க­முடி­யாத அந்த ஆடவர் அதி­ருப்­தியை வெளிப்­படுத்த அந்த வீட்­டுக்­குள் சன்­னல் வழி­யாக சிறிதளவு தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டிப்­பார். இவர் தண்­ணீர் அடிப்­ப­தால் அந்த அண்­டை­வீட்­டுக்­கா­ர­ரும் வேண்­டு­மென்றே சன்­னல் அருகே நின்று புகைபிடிப்பார்.

ஈராண்­டு­க­ளா­கத் தொடர்ந்த இந்­தப் பகை பெரி­தான நிலை­யில், இரு­வ­ரும் சமூக சம­ர­சப் பேச்­சு­வார்த்­தைக்­குச் சென்ற­னர்.

தாம் புகை­பி­டித்­த­தால் தமது அண்­டை­வீட்­டா­ருக்கு நெஞ்­சில் கிரு­மித்­தொற்று ஏற்பட்டது அப்­போ­து­தான் அவருக்குத் தெரி­ய­வந்­தது. இது முன்­னரே தெரிந்து இருந்ததால் புகை­பி­டிப்­பதை எப்­போதோ நிறத்தியிருப்பேனே என்று அந்த அண்­டை­வீட்டுக்காரர் கூறினார்.

இந்­தச் சம்­ப­வத்தை கடந்­தாண்டு செப்­டம்­ப­ரில் நிகழ்ந்த சட்ட விழிப்­பு­ணர்வு வாரத்­தின்­போது பகிர்ந்த இரண்­டா­வது சட்ட அமைச்­சர் எட்­வின் டோங், சமூக சம­ரச நடு­வர்­களின் சேவை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­வ­தைச் சுட்­டி­னார்.

2020ஆம் ஆண்டு ஜன­வரி முதல் செப்­டம்­பர் வரை, அண்டைவீட்­டார் சத்­தம் போடு­வது குறித்த புகார்­களின் எண்­ணிக்கை 11,400 ஆகப் பதிவாகி­யுள்­ளது.

இந்த எண்­ணிக்கை கடந்­தாண்டு இதே காலத்­திற்கு 3,600 ஆக இருந்­தது.

கடந்­தாண்டு மே மற்­றும் ஜூன் மாதங்­களில் அண்டை வீடு­க­ளி­லிருந்து புகை வெளி­வருவது குறித்த புகார்­கள் 25 விழுக்­காடு அதி­க­ரித்­ததா­க­ நகர சேவை அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. சிக­ரெட் புகை, ஊது­வத்தி அல்­லது குழம்பு வாசனை, அதி­க­மான சத்­தம், இரைச்­சல், நடை­பா­தை­யில் செடி­களை வைப்­பது போன்­றவை காலங்­கா­ல­மாக அக்­கம்­பக்­கத்­த­வ­ரி­டையே மனக்­க­சப்பு ஏற்­ப­டக் கார­ண­மாக இருப்­பவை.

கொவிட்-19 சூழ­லில் அண்­டை­வீட்­டார் குறித்து வீட­மைப்பு வளர்ச்சி கழ­கத்­திற்கு கொடுக்­கப்­பட்ட புகார்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இத்தகைய சிறிய சச்சரவுகளுக்கு நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடர்­வ­தற்குப் பதி­லாக சம­சர நடு­வ­ரின் உத­வி­யு­டன் பிரச்சி­னையை ஆரோக்­கி­ய­மான முறை­யில் தீர்க்­க­லாம் என்­றார் திரு டோங்.

அண்டை வீட்­டா­ருடன் மட்­டு­மின்றி குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யி­லான சர்ச்­சை­களுக்குப் பலர் பேசி தீர்வு காண இய­லா­த­போதும் பலர் நீதி­மன்­றத்தை நாடு­கின்­ற­னர்.

நீதி­மன்­றத்­திற்­குப் பதி­லாக சம­ரச நிலை­யத்தை நாடி­னால் சட்­டச் சிக்­கல்­க­ளின்றி அதி­கச் செலவு இல்­லா­மல் பிரச்­சி­னை­க­ளைப் பேசித் தீர்க்­க­லாம்.

இத­னால் நல்­லு­ற­வை­யும் வளர்க்­க­லாம் என்­பது தமிழ் முர­சி­டம் பேசிய சம­ரச நடு­வர்­க­ளின் பொது­வான பரிந்­துரை.

 

கி. ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!