தமிழ் மொழியின் கரம் பிடித்து கல்விப் பயணம் தொடர உறுதுணை புரியும் உபகாரச் சம்பளம்

சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம், தொடர்பு தக­வல் அமைச்­சின் மொழி­பெ­யர்ப்புத் துறை­யோடு இணைந்து ஏற்­பாடு செய்த பகிர்­வ­ரங்கு பிப்ரவரி 25ல் நடைபெற்றது.

சிங்­கப்­பூ­ரில் தமிழ் சோறு போடுமா? என்ற கேள்வி அவ்­வப்­போது நம் செவி­களில் ஒலிப்­ப­து­தான். ஆனால், சோறு என்ன, அறுசுவை உணவே படைக்­கும் அள­விற்கு வாய்ப்­பு­, வச­தி­களைக் கொண்டது சிங்கப்பூர் தமிழ்.

அதன் அடிப்­ப­டை­யில், அத்தகைய வச­தி­களை மாண­வர்­க­ளோடு பகிர்ந்­து­கொள்­ளும் ஒரு முயற்­சி­யில் அண்­மை­யில் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் ஈடு­பட்­டது.

சிங்­கப்­பூ­ர் தொடர்பு தகவல் அமைச்­சின் மொழி­பெ­யர்ப்புத் துறை­யோடு இணைந்து தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்­கா­கப் பகிர்­வ­ரங்கு ஒன்­றிற்­கு அது ஏற்­பாடு செய்­தது.

அந்தத் துறை­யிலுள்ள உப­கா­ரச் சம்­பள வாய்ப்பை மாண­வர்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­பது பகிர்­வ­ரங்­கின் நோக்­கம். உப­கா­ரச் சம்­ப­ளம் குறித்த பகிர்­வ­ரங்கை அமைச்­சோடு இணைந்து தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் நடத்தியது இதுவே முதல் முறை.

பகிர்­வ­ரங்கு பிப்­ர­வரி மாதம் 25ஆம் தேதி பிற்பகல் இணை­யம்­வழி நடை­பெற்­றது. பல்­வேறு கல்­லூ­ரி­க­ளைச் சேர்ந்த சுமார் 40 மாண­ வர்­கள் அதில் கலந்­து­கொண்­ட­னர். அவர்­களில் 15 பேர், ஜிசிஇ மேல்­நி­லைத் தேர்வை முடித்து மேற்­ப­டிப்­பிற்­கா­கத் திட்­ட­மிட்­டுக்கொண்­டி­ருக்­கும் மாண­வர்­கள்.

பகிர்­வ­ரங்­கில் பங்கேற்ற தொடர்பு தக­வல் அமைச்­சின் இரண்டு கல்வி­ மான்­கள் தங்க­ளின் அனு­ப­வங்­

க­ளை­யும் அமைச்­சின் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­தின் வாயி­லா­கப் பெற்ற பயன்­க­ளை­யும் பகிர்ந்­து­கொண்­ட­னர். இவர்­களில் ஒரு­வர் திரு ஜெர­மயா. இவர் அமைச்­சின் உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்று இங்­கி­லாந்­தில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கம் ஒன்­றில் முது­க­லைக் கல்­வியை மேற்­கொண்டு வரு­கி­றார்.

இன்னொருவர் செல்வி அஸ்­வினி செல்­வ­ராஜ். சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அர­சி­யல் பாடத்­தில் முது­க­லைக் கல்வி பயின்று வரு­கி­றார் இவர்.

மொழி மீதான ஆர்­வத்­தைத் தொடர்ந்து வளர்த்­துக்­கொள்­ளும் அதே­வேளை, அர­சாங்­கப் பணி­யை­யும் மேற்­கொள்­ள அமைச்­சின் உப­கா­ரச் சம்­ப­ளம் எவ்­வாறு வழி­

வ­குத்­தது என்­ப­தை மாண­வர்­க­ளி­டம் கல்­வி­மான்­கள் எடுத்துரைத் தனர்.

அமைச்­சின் அதி­கா­ரி­கள் மொழி­பெ­யர்ப்புத் துறை, உப­கா­ரச் சம்­ப­ளம், அமைச்­சிலுள்ள பணிகள் ஆகி­யவை குறித்தும் அவர்கள் விளக்­கம் அளித்­த­னர். அர­சாங்­கத்­தின் முக்­கியப் பொறுப்­பு­களில் அம­ர­வும் தமி­ழ் மொழியோடு தொடர்ந்து பய­ணம் செய்­ய­வும் உப­கா­ரச் சம்­ப­ளம் கைகொடுக்கும் விதத்தை மாண­வர்­கள் அறிந்­து­கொண்­ட­னர்.

மொழி­பெ­யர்ப்புத் துறைக்­குரிய உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்­கான விண்­ணப்­பங்­களை ஒவ்­வோர் ஆண்­டும் தொடர்பு, தக­வல் அமைச்சு வர­வேற்­கிறது. இவ்­வாண்­டு விண்­ணப்­பத்­திற்­கான இறுதி நாள் மார்ச் 15. ஆர்வமுள்ள மாண­வர்­கள் இந்த தேதிக்குள் விண்­ணப்­பிக்­க­லாம். விவ­ரங்­க­ளை https://go.gov.SG/MCIScholarship இணை­யத்­த­ளத்­தில் அறிந்துகொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!