இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்தின் அக்கறைக்குரிய விஷயங்கள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பசுமைத் திட்டம்

கவின்­விழி கதி­ரொளி

அதி­க­ரிக்­கும் வாழ்க்­கைச் செல­வி­னங்­க­ளைச் சமா­ளிக்க நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ருக்கு இந்த ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் போதிய உதவி இல்­லா­தது பெரும்­பா­லா­ன­வர்­க­ளின் அக்­க­றை­யாக உள்­ளது.

வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2022 குறித்த இந்­தி­யர் சமூ­கத்­தின் கருத்தை அறிய, மக்­கள் கழக இந்­திய நற்­ப­ணிப் பேரவை ஒரு கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

கலந்­து­ரை­யா­ட­லில் பேசிய சமூகத் தலை­வர்­கள், குறைந்த வரு­வாய் குடும்­பங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்ள உத­வித் திட்­டங்­களை வர­வேற்­ற­னர்.

நடுத்­த­ர ­வர்க்­கத்­தி­ன­ருக்கு உதவ போதிய திட்­டங்­கள் இல்லை என்­ற­னர்.

கட்­ட­ணங்­களும் விலை­வா­சி­யும் பொருள் சேவை வரி­யும் அதி­க­ரிப்­பது நடுத்­த­ர­ வர்க்­கத்­தி­ன­ரைப் பாதிப்­ப­தாக அவர்­கள் கூறி­னர்.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­க­ளை­விட, நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ருக்குச் சலு­கை­கள் குறை­வாக இருந்­தா­லும், அவர்­கள் செலுத்­தும் வரி­யை­விட அதி­க­மான சலு­கை­க­ளைப் பெறு­வ­தாக கலந்­து­ரை­யா­ட­லுக்­குத் தலைமை தாங்­கிய சுகா­தா­ரம், தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி கூறினார்.

அர­சாங்க வளங்­களை அதி­கம் தேவை­யுள்­ளோ­ருக்­குச் செல­வி­டு­வதே பொது­வான வழி­முறை என்ற அவர், உதவி தேவைப்­படும் நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ருக்கு அர­சாங்­கம் நிச்­ச­யம் உத­வும் என்­றார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தி­னால் ஏற்­படும் சவால்­க­ளைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரின் திட்­டங்­கள், 'எஸ் பாஸ்', 'எம்ப்­ளாய்­மென்ட் பாஸு'க்கான சம்­பள வரம்பு அதி­க­ரிப்பு போன்­ற­வை தலை­வர்­க­ளின் மற்ற அக்­க­றை­க­ளாக இருந்­தன.

வருங்­கா­லத்­தில் பேரங்­கா­டி­கள் நெகிழிப் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் வசூ­லிக்­கும். இது வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பாதிக்­கும் என்ற கருத்து எழுப்­பப்­பட்­டது.

கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­துக்­கான வரி கூடு­வதை நிறு­வ­னங்­கள் மக்­கள் மீது மறை­மு­க­மாக திணிக்­கக்­கூ­டும் என்­றும் பய­னீட்டுக் கட்­ட­ணங்­கள் கூடு­வது கவலைக்­கி­ட­மாக உள்­ளது என்­றும் சமூகத் தலை­வர்­கள் கருத்­து­களை முன்­வைத்­தனர்.

நெகி­ழிப் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் விதிப்­ப­தால், நெகிழிப் பயன்­பாடு குறை­யும். இது சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்­கும். கரிம வரி அதி­க­ரிப்­பும் தண்­ணீர், மின்­சா­ரக் கட்­டண அதி­க­ரிப்­பும் மக்­கள் இவற்­றைச் சிக்­க­ன­மா­கப் பயன்­ப­டுத்த ஊக்­கு­விக்­கும். இவற்­றின் பயன்­பாடு குறை­வ­தால் சுற்­று­ச்சூழல் பாது­காக்­கப்­படும். பசு­மை­யான சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­வது இத்­திட்­டங்­களின் இலக்கு என்று விளக்­கி­னார் டாக்டர் ஜனில் புதுச்­சேரி.

'எஸ் பாஸ்', 'இ பாஸ்' அட்டை வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­க­ளின் குறைந்­த­பட்ச சம்­ப­ளத்தை $500 கூட்­டு­வது குறித்த கேள்­விக்கு, சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு­களை அதி­க­ரிக்­கும் நோக்­கத்­தில் அமல்­படுத்­தப்­பட்ட திட்­டம் இது என்­றார் அமைச்சர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைக் குறைந்த சம்­ப­ளத்­திற்கு வர­வ­ழைப்­பது, அதி­க­மான சம்­ப­ளத்தை எதிர்­பார்க்­கும் சிங்­கப்­பூ­ரர்­களைப் பாதிக்­கும். இத்­திட்­டத்­தின் வாயி­லாக சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று அர­சாங்­கம் எதிர்­பார்க்­கிறது என்­றார் டாக்­டர் ஜனில் புதுச்சேரி.

கொவிட்-19 தொற்­று­நோ­யி­லி­ருந்து மீண்டு வரும் நாடாக தயார்படுத்­திக்­கொள்­வ­தில் வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2022 கவ­னம் செலுத்­தி­யுள்­ள­தாக, நற்­ப­ணிப் பேர­வை­யின் ஆலோ­ச­க­ரு­மான டாக்­டர் ஜனில் புதுச்­சேரி கூறி­னார்.

"மக்­க­ளை­யும், வர்த்­த­கங்­க­ளை­யும், திறன், தொழில்­நுட்­பம் போன்ற அங்­கங்­களில் மேம்­ப­டுத்­து­வது எதிர்­கா­லத்­திற்கு இன்­றி­ய­மை­யா­த­தா­கும். குறைந்த வரு­மா­னம் ஈட்டும் குடும்­பங்­க­ளுக்­கும், கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைத்து வெப்­ப­நிலை உயர்­வைக் குறைப்­ப­தற்­கும், தொற்று­நோ­யி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்­கும் எந்தெந்த வழி­களில் செல­வி­டு­கி­றோம் என்ப­ன­வற்­றில் வர­வு­செ­ல­வுத் திட்­டம் முக்கிய கவ­னம் செலுத்­தி­யது," என்று அமைச்­சர் ஜனில் கூறி­னார்.

இந்த செல­வு­க­ளுக்­கான நிதியை பெறும் வழி­க­ளை­யும் திட்­டம் ஆராய்ந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மூப்­ப­டை­யும் மக்­கள் தொகை அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­வ­தால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செல­வும் கூடு­கிறது என்­றார் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி.

அனை­வ­ரும் நம் உடல்­நலத்­தில் ஆரம்­பக்­கா­லத்­தி­லி­ருந்து அக்­கறை கொள்ள வேண்­டும். வரும் முன் காப்­பதே பிற்­காலத்­தில் நமக்கு கைகொ­டுக்­கும் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

நேற்று முன்­தி­னம் மெய்­நி­கர் வழி­யாக நடந்த இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் இந்­திய சமூ­கத் தலை­வர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் என கிட்­டத்­தட்ட 150 பேர் பங்­கேற்­ற­னர். கலந்­து­ரை­யா­டல் ஏறத்­தாழ இரண்டு மணி நேரம் நடை­பெற்­றது.

வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்கை குறித்து தமிழ்ச் சமூ­கத்­தி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு தமி­ழர் பேரவை அண்­மை­யில் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

தமி­ழர் பேர­வை­யின் இணை அமைப்­பு­களில் 20க்கும் மேற்­பட்ட அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளு­டன் தமி­ழர் பேர­வை­யின் ஆலோ­ச­க­ரும் புக்­கிட் பாத்­தோக் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு முரளி பிள்­ளை­யும் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்று ஐயங்­க­ளுக்கு விளக்­கம் அளித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் குடும்­பங்­கள், ஊழி­யர்­கள், தொழில்­கள், நீடித்த நிலைத்­தன்மை, வருங்­கா­லம் என ஐந்து பகு­தி­க­ளாக வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் வெவ்­வேறு அம்­சங்­கள் பகுத்து ஆரா­யப்­பட்­டன.

அதி­க­ரித்­து­வ­ரும் வாழ்க்­கைச் செலவினங்­கள், குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கான உதவி, சிங்­கப்­பூர்ப் பசுமைத் திட்­டம் ஆகி­யவை குறித்து அதி­கம் பேசப்­பட்­டன.

இவ்­வாண்டு வர­வு­செ­ல­வுத்­திட்­டம், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் விழு­மி­யங்­க­ளைப் பிரதி­ப­லிக்­கக்­கூ­டிய ஒன்­றாக இருப்­ப­தைப் பங்­கேற்­பா­ளர்­க­ளின் கேள்­வி­களுக்குப் பதி­ல­ளித்த திரு முரளி பிள்ளை சுட்­டிக்காட்­டி­னார்.

இயற்கை வளங்­கள் அற்ற சிங்­கப்­பூர், தொலை­நோக்­கு­டன் சிந்­தித்து, சிக்­க­ன­மாக நடந்­து­கொள்­ள­வேண்­டிய அவ­சியத்தை அவர் மீள்­வ­லி­யு­றுத்­தி­னார்.

'ஒன்­றி­ணைந்து முன்­னோக்­கிய நமது புதிய பாதையை உரு­வாக்­கு­தல்' என்ற கருப்­பொ­ரு­ளில் அமை­யப்­பெற்­றுள்ள இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்கை, சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லம் பற்­றி­யது. இயற்கை வளங்­க­ளின்றி, மனித ஆற்­றலை மூல­த­ன­மா­கக் கொண்டு முன்­னே­றிய சிங்­கப்­பூர் தொடர்ந்து முன்­னே­று­வ­தற்­கான பல முக்­கி­யக் கூறு­களை வர­வு­செ­ல­வுத் திட்­டம் முன்­வைத்­துள்­ளது.

அத்­த­கைய கூறு­களை சமூ­கத்­தின் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் உணர்ந்­து­கொள்­வது முக்­கி­யம் என்­ப­தா­லும், தேசிய அள­வி­லான இத்­த­கைய அம்­சங்­கள் குறித்த வெளிப்­ப­டை­யான, அறி­வார்ந்த கலந்­து­ரை­யா­டல்­கள் தமிழ்ச் சமூ­கத்­தில் தொட­ர­வேண்­டும் என்­ப­தா­லும், இக்­கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தாக, தமி­ழர் பேர­வை­யின் தலை­வர், திரு வெ பாண்­டி­யன் கூறி­னார்.

மார்ச் 6ஆம் தேதி மெய்­நி­கர் தளத்­தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் தமிழ்ச் சமூ­கத்­தின் தலை­வர்­கள் பல­ரும் தங்­கள் பிர­தி­நி­தி­க­ளு­டன் கலந்­து­கொண்­டது ஊக்­க­ம­ளிப்­ப­தா­க­வும், தமிழ்ச் சமூகத்­திற்கு இத்­த­கைய மேலும் பல கலந்­து­ரை­யா­டல்­களை ஏற்­பாடு செய்ய திட்டம் இருப்­ப­தா­க­வும் தமி­ழர் பேரவை தெரிவித்தது.

செய்தி, படம்: தமி­ழர் பேரவை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!