‘மொழிபெயர்ப்பாளர் காலத்தின் பிரதிநிதி’

கி. ஜனார்த்­த­னன்

மொழி­யின் தோற்­றத்­திற்கு முன்­னரே மொழி­பெ­யர்ப்பு வந்­து­விட்­டது எனக் கூறிய பேச்­சா­ளர் முனை­வர் ஜெயந்­த­ஸ்ரீ பால­கி­ருஷ்­ணன் (படம்), கூடி­யி­ருந்­தோரை முத­லில் வியப்­பில் ஆழ்த்­தி­னார்.

தாம் குறிப்­பி­டு­வது வாய்­மொ­ழி­யைப் பற்றி அல்ல என்று விளக்­கிய அவர், மனி­த­னின் ஆதி­மொ­ழி­யான உடல்­மொ­ழி­யைப் புரிந்­து­கொள்­வது மொழி­பெ­யர்ப்­பின் முக்­கிய அடித்­த­ளம் என்ற மாறு­பட்ட கருத்தை, தமிழ் மொழி விழாவை ஒட்­டிய சொற்­பொ­ழிவு நிகழ்ச்­சி­யில் முன்­வைத்­தார்.

தமிழ்­மொழி விழா 2022ஐ முன்­னிட்டு, சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பாணி நினை­வுச் சொற்­பொ­ழிவு நிகழ்ச்­சி­யில் திரு­வாட்டி ஜெயந்­த­ஸ்ரீ , 'படைப்­பி­லக்­கி­ய­மும் மொழி­பெ­யர்ப்­பும்' என்ற தலைப்­பில் சொற்­பொ­ழிவு ஆற்­றி­னார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை 'ஸூம்' தளத்­தில் நடந்­தே­றிய நிகழ்ச்­சி­யில் ஆசி­ரி­யர்­கள், சமூ­கத் தலை­வர்­கள் உட்­பட கிட்­டத்­தட்ட 110 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

மாண­வர்­க­ளின் உடல் அசை­வு­க­ளை­யும் முக பாவ­னை­க­ளை­யும் சரி­யா­கப் புரிந்­து­கொள்­ளும்­போது, அவர்­க­ளது உணர்­வு­க­ளு­டன் கலக்­கும் வகை­யில் ஆசி­ரி­யர்­க­ளால் தமிழ் மொழி­யைக் கற்­றுத்­தர முடி­யு­மென்­றார் அவர்.

"மொழி­பெ­யர்ப்­பா­ளர்­கள் இரு­வ­கைப்­ப­டு­வர்; வரை­ய­றை­க­ளை­யும் சட்­ட­திட்­டங்­க­ளை­யும் மையப்­ப­டுத்தி மொழி­பெ­யர்ப்பு செய்­ப­வர்­கள் ஒரு­வகை; படைப்­பு­களை உரு­வாக்­கும் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­கள் மற்­றொரு வகை," என்று அவர் விவ­ரித்­தார்.

15ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த மொழி அறி­ஞர் ஜான் டிரை­டன் விளக்­கிய மூன்று வகை மொழி­பெ­யர்ப்பு முறை­க­ளை­யும் திரு­வாட்டி ஜெயந்­த­ஸ்ரீ விளக்­கி­னார்.

'மெட்­டா­ஃபி­ரேஸ்' எனப்­படும் வார்த்­தைக்கு வார்த்தை என்ற முறை­யி­லான மொழி­பெ­யர்ப்பு, பெரும்­பா­லான நேரங்­களில் பொரு­ளைச் சிதைத்­து­வி­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

'பாரா­ஃபி­ரேஸ்' முறை­யில், மூல­மொ­ழி­யில் எழு­தப்­பட்ட படைப்­பின் பொரு­ளைச் சரி­யாக உள்­வாங்­கிக் கொண்டு அத­னைச் சிதைக்­கா­மல் எழு­த­லாம் என்­ப­தை­யும் மூலப்­ப­டைப்பு போன்ற மாதி­ரிப் படைப்பை உரு­வாக்­கும் 'இமிட்­டே­ஷன்' என்­பது மூன்­றா­வது உத்தி என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பல்­வேறு மொழி­களை ஆட்சி மொழி­க­ளா­கக் கொண்ட சிங்­கப்­பூர் போன்ற நாட்­டில் ஒரு மொழி ஆசி­ரி­ய­ரின் அடிப்­ப­டைத் தகு­தி­யாக ஒன்­றுக்கு மேற்­பட்ட மொழி­க­ளின் ஆளுமை தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறிய அவர், அழுத்­த­மான, ஆழ­மான, வேரூன்றி நிற்­கக்­கூ­டிய ஆளுமை இல்­லாத பட்­சத்­தில் மாண­வர்­க­ளின் மதிப்பை ஆசி­ரி­யர்­கள் பெற முடி­யாது என்­றார்.

"ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளது திறன்­களை நாள்­தோ­றும் மெரு­கு­ப­டுத்­து­தல் அவ­சி­யம். ஆவ­லோடு மொழிக்­கூ­று­க­ளைச் சலிப்­பின்றி உள்­வாங்­கும் தன்­மையை அவர்­கள் கொண்­டி­ருக்­க­வேண்­டும்," என்று அவர் சொன்­னார்.

மொழி­பெ­யர்ப்­பா­ளர்­கள், படைப்­பா­ளர்­க­ளைப் போலவே தங்­க­ளது காலத்­தின் பிர­தி­நி­தி­க­ளாக இயங்க முடி­யும் என்று கூறிய திரு­வாட்டி ஜெயந்­த­ஸ்ரீ, கிளி­யோ­பட்ரா போன்ற வர­லாற்று மாந்­தர்­க­ளைப் பற்­றிய குறிப்­பு­க­ளைப் புரிந்­து­கொண்டு படைப்­பு­களை உரு­வாக்­கிய பிளூட்­டார்க், ஷேக்ஸ்­பி­யர், பெர்­னார்ட் ஷா போன்­றோர், அந்த வர­லாற்று மாந்­த­ரைத் தத்­தம் சமு­தா­யங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளா­கச் சித்­தி­ரித்­த­தைச் சுட்­டி­னார்.

இதே­போல வால்­மீ­கிக்கு வெகு பிற்­கா­லத்­தில் வாழ்ந்த கம்­பர், தம்­மைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­காக அவர்­க­ளுக்­குத் தெரிந்த மொழி, கலா­சார வடி­வில் ராமா­ய­ணக் கருத்­து­க­ளைக் கொண்­டு­சேர்ப்­ப­தாக அவர் விவ­ரித்­தார்.

மொழி­பெ­யர்ப்பு மட்­டு­மின்றி மொழி­யின் மற்ற கூறு­க­ளைப் பற்­றிய தமது கருத்­து­க­ளை­யும் பகிர்ந்த திரு­வாட்டி ஜெயந்­த­ஸ்ரீ, நாட்­டின் பெய­ரைச் சுருக்­கா­மல் இருப்­பது தமி­ழுக்­குச் செய்­யப்­படும் கட­மை­என்­றார்.

தமி­ழ­கத்­தில் சிங்­கா­பு­ர­மும் சிங்­கா­நல்­லூ­ரும் சிங்கை என அழைக்­கப்­ப­டு­கின்­றன. சிங்­கப்­பூ­ரை­யும் சிங்கை என்று சுருக்கி அழைத்­தால் அது சரி­யாக வராது எனக் கரு­து­கி­றேன்," என்­றார் அவர்.

தஞ்­சா­வூ­ரைத் 'தஞ்சை' என்­றும் புதுச்­சே­ரி­யைப் 'புதுவை' என்­றும் சுருக்­கு­வ­தைத் தவிர்ப்­ப­தா­கக் கூறிய அவர், தமிழ் மொழி­யில் உள்ள இரண்டு மூன்று வார்த்­தை­க­ளைச் சேர்த்­துச் சொல்­லும் இன்­பத்தை இழக்­கத் தாம் தயா­ராக இல்லை என்­றார்.

சொற்­பொ­ழி­வு­டன் புதிர் அங்­கம் ஒன்­றும் இந்­நி­கழ்ச்­சி­யில் இடம்­பெற்­றது. சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி 1959ஆம் ஆண்­டில் அதி­கா­ரத்­துவ மொழி­யா­னது, தமிழ்­மொழி விழா 2007ஆம் ஆண்டு முதல் கொண்­டா­டப்­ப­டு­கிறது உள்­ளிட்ட தக­வல்­களை பங்­கேற்­பா­ளர்­கள் 'காஹுட்' தளத்­தின்­மூ­லம் நடத்­தப்­பட்ட புதிர் அங்­கத்­தில் கற்­றுக்­கொண்­ட­னர்.

தமி­ழ­வேள் கோ சாராங்­க­பா­ணி­யின் வாழ்க்­கைக் கதைச் சுருக்­கத்­தை­யும் தமிழ் முரசு இதழை நிறு­வி­யது, சிங்­கப்­பூ­ரின் நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­களில் ஒன்­றா­கத் தமிழை இடம்­பெ­றச் செய்­வ­தில் பங்­காற்­றி­யது உள்­ளிட்ட அவ­ரது சாத­னை­க­ளை­யும் சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத் தலை­வர் தன­பால் குமார் தமது தொடக்க உரை­யில் சுட்­டி­னார்.

அதி­க­மான மாண­வர்­கள் ஆங்­கி­லத்­தில் சிந்­தித்­துப் பேசும் சூழ­லுக்­கேற்ற இந்­தக் கருத்­த­ரங்கு ஆசி­ரி­யர்­களை மிக­வும் கவ­ரக்­கூ­டிய ஒன்­றாக அமைந்­தி­ருப்­ப­தாக நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட சிராங்­கூன் கார்­டன்ஸ் உயர்­நி­லைப் பள்ளி ஆசி­ரி­யர் குமாரி அ.அஸ்­மது பீவி தெரி­வித்­தார்.

ஈசூன் இனோவா தொடக்­கக் கல்­லு­ரி­யின் மூத்த ஆசி­ரி­யர் திரு­வாட்டி அ. மல்­லிகா, சூழ­லுக்­கேற்ப மொழி­பெ­யர்த்து பொருளை உள்­வாங்­கிச் செயல்­படும் முறையை மாண­வர்­க­ளி­டம் பரிந்­து­ரைக்­கப்­போ­வ­தா­கக் கூறி­னார்.

பன்­னி­ரெண்டு ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் தமி­ழ­வேள் கோ சாராங்­க­பாணி அவர்­க­ளின் நினை­வுச் சொற்­பொ­ழிவை நடத்தி வரு­கிறது. ஒவ்­வோர் ஆண்­டும் பல்­வேறு துறை­சார் அறி­ஞர்­கள் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் ஏற்ற தலைப்­பு­களில் சொற்­பொ­ழிவு ஆற்­று­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!