அச்சுநூல்களுக்குத் தேவை குறைந்தாலும் நம்பிக்கை இழக்காத விற்பனையாளர்கள்

இணை­யம் மற்­றும் சமூக ஊட­கங்­க­ளின் தாக்­க­மும் பர­ப­ரப்­பான, நெருக்­கடி மிகுந்த வாழ்க்­கைச் சூழ­லும் போட்டி போட்டு நேரத்­தைத் தின்­று­கொண்­டி­ருந்­தா­லும் நூல் வாசிப்­பது, அதி­லும் அச்­சுப்­படியை வாசிப்­பது என்­பது குறைந்த எண்­ணிக்­கை­யில் இருந்­தா­லும், அது இன்­ன­மும் சிங்­கப்­பூர் மக்­களின் வாழ்க்­கை­யில் ஒரு பகு­தி­யாக இருப்­ப­தற்­குச் சான்­று­க­ளாக விளங்கி வருகின்றன இங்­குள்ள ஓரிரு புத்­த­கக் கடை­கள்.

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் ஆரியா கிரி­யே­ஷன்ஸ், ராஜி பதிப்­பகம், தேக்கா 777 ஆகிய கடை­களில் தமிழ் நூல்­கள் கிடைக்­கின்­றன.

நூல் விற்­பனை மிக­வும் குறைந்­துள்ள நிலை­யில், தொடர்ந்து செயல்­ப­டு­வ­தில் சிர­மத்தை எதிர்­கொண்ட ரஹ்­மத் பதிப்­ப­கத்­தின் நூல்­க­ளுக்கு மறு­வாழ்வு அளிக்­கும் நோக்­கில் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் ஆரியா கிரி­யே­ஷன்ஸ் தொடங்­கப்­பட்­டது. டன்­லப் சாலை முனை­யில் துணி­க­ளு­டன் நூல்­களை­யும் விற்­கும் சிறிய கடை­யாகத் தொடங்­கப்­பட்ட இக்­கடை, தற்­போது அப்­பர் டிக்­சன் சாலை­யில் ஈர­டுக்குக் கடை­யாக, இரண்­டா­வது தளத்­தில் ஒரு பெரிய புத்­த­கக் கடை­யு­டன் செயல்­ப­டு­கிறது.

"மின்­னூல்­க­ளால் அச்­சு­நூல்­களின் தேவை குறைந்­துள்­ளது. பெரும்­பா­லும் பெரி­ய­வர்­களே கடைக்கு வரு­கின்­ற­னர். கடை­யாக மட்­டு­மின்றி, உள்­ளூர் எழுத்­தா­ளர்­களின் படைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வு அளிக்­கும் தள­மா­க­வும் ஆரியா கிரி­யே­ஷன்ஸ் அமை­யும் என நம்பு­கி­றோம்," என்­றார் அதன் நிறு­வ­னர் பிரேமா மகா­லிங்­கம்.

கடந்த 20 ஆண்­டு­க­ளாக இயங்கி வரும் ராஜி பதிப்­ப­கத்­தில் தேர்வு நூல்­களே அதிக வர­வேற்பு பெற்­றுள்­ள­தா­க­வும், கொவிட்-19 சூழ­லில் பள்­ளி­க­ளுக்­குச் சென்று நேர­டி­யா­கக் கடையை விளம்­ப­ரப்­படுத்த இய­லா­மல் போன­தால் விற்­பனை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார் அதன் நிறு­வ­னர் சூரிய ரத்னா.

தமிழ் நூல்­களும் பூசைப் பொருள்­களும் விற்­கும் டன்­லப் சாலை­யி­லுள்ள 'தேக்கா 777' கடை, கடந்த ஆண்டு சிறிய அள­வில் செயல்­ப­டத் தொடங்கி, தற்­போது பெரிய கடை­யாக உரு­மா­றி­யுள்­ளது. வாச­கர்­களில் பலர் பக்­தர்­க­ளாக இருப்­ப­தைக் கண்டு புத்­த­கக்­க­டை­யாக இருந்த தேக்கா 777ல் பூசைப் பொருள்­க­ளை­யும் விற்­கத் தொடங்­கிய திரு வி. ரஞ்­சித், 34, வாச­கர்­க­ளின் ஆத­ர­வால் ஊக்­க­ம் அடைந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

நோய்ப்­ப­ர­வல் சூழ­லில் பாதிக்­கப்­பட்ட மற்­றொரு நூல் விற்­ப­னை­யகம், கும­ரேஷ் என்­டர்­பி­ரை­ச­ஸின் இணை நிறு­வ­ன­மான 'தமிழ்­புக்­‌ஷாப்'. ஜெயக்­கு­மார்-கம­ல­வேணி இணை­ய­ரால் 2002ல் தொடங்­கப்­பட்ட இந்­நி­று­வ­னம், கடந்த ஆண்­டி­லி­ருந்து 'tamilbookshop.com' என முழுவதுமாக இணை­யத்திற்கு மாறியது.

"பல்­லாண்டு கால­மாய் இயங்­கிய எங்­க­ளது நேரடிப் புத்­த­கக் கடை­யை­விட அண்­மை­யில் தொடங்­கப்­பட்ட இணை­யக் கடைக்கு நல்ல வர­வேற்பு இருக்­கி­றது. சிறு­வர் நூல்­களை விற்­கும் எங்­க­ளது கடை தற்­போது அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா நாடு­க­ளி­லி­ருக்­கும் பெற்­றோ­ரை­யும் ஈர்த்­துள்­ளது," என்­றார் திரு ஜெயக்­குமார், 72.

மூலைக்கு மூலை நாளி­தழ், வார, மாத சஞ்­சி­கை­க­ளை­யும் நூல்­க­ளை­யும் விற்­று­வந்த பல பெட்டிக் கடை­கள் மூடப்­பட்டு விட்டன என்­றா­லும் ஆங்­காங்கே சில கடை­களில் தமிழ் நூல்­கள், சஞ்­சி­கை­க­ளைக் காண முடி­கிறது.

நூல் வாசிப்­போர் குறைந்­தி­ருக்­கும் அதே சம­யத்­தில், பலர் மின்­னூல்­க­ளையோ இல­வ­ச­மாக நூல­கத்­தில் கிடைக்­கக்­கூ­டிய நூல்­களையோ பெரும்­பா­லும் விரும்­பு­கின்­ற­னர் என்­பது நூல் விற்­ப­னை­யகங்­க­ளின் பொது­வான கருத்து. பிள்­ளை­க­ளின் படிப்­பிற்­கும் தமிழ்ப் புழக்­கத்­திற்­கும் பெற்­றோரே தமிழ் நூல்­களை அதி­கம் வாங்­கு­வ­தால் சிறு­வர் நூல்­களில் அதிக நாட்­டம் செலுத்­து­வ­தாக நூல் விற்­ப­னை­யா­ளர்­கள் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!