கற்பித்தல் மீதுள்ள பற்று தந்த அங்கீகாரம், பாராட்டு

கி. ஜனார்த்தனன்

 

கற்பித்தலின் மீதும் மாணவர்களின் முன்னேற்றத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்ததால் வேறு துறைகளிலிருந்து ஆசிரியர் தொழிலுக்கு மாறினர் அண்மையில் பதவி உயர்வு பெற்ற இந்த கல்வியாளர்கள்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் படிப்பை முடித்த பிறகு வங்கியில் வேலை பார்த்த திரு சத்ய பிரசாத், 45, அந்த வேலையைவிட ஆசிரியர் பணியே பிடித்திருந்ததாகத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக கிரீன்விட்ஜ் தொடக்கப்பள்ளியில் பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்த திரு பிரசாத், கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளியின் துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.

இவருடன் 5,454 கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கான பதவி உயர்வு விழா இம்மாதம் 28ஆம் தேதியன்று ரிசார்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் நடைபெற்றது.

பழைய வேலையை விட்டு விலகிய பின்னர், தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய திரு பிரசாத்திற்கு வேறொரு வேலை கிடைத்தபோதும் ஆசிரியர் துறையிலேயே இருக்க முடிவு செய்தார்.

பணம் அதி­கம் சம்­பா­திப்­ப­தைக் காட்­டி­லும் மாண­வர்­க­ளு­டன் பழ­கும் வாய்ப்பே திரு பிர­சாத்­திற்­குப் பிடித்­தி­ருக்­கிறது.

"என் வழி­காட்­டு­த­லின் மூலம் மாண­வர்­கள் தடை­க­ளைத் தாண்டி முன்­னே­று­வ­தைக் காணும்­போது நான் அடை­யும் மன­நி­றைவை வார்த்­தை­க­ளால் வர்­ணிக்க முடி­யாது," என்­றார் திரு பிர­சாத்.

2011ஆம் ஆண்­டில் தமது பாட்டி மரணமடைந்த சம­யத்­தில் ரக்பீ போட்­டிக்­காக மாண­வர்­களை அழைத்­த­போது அந்த மாண­வர்­கள் போட்­டி­யில் எதிர்­பா­ராத வித­மாக வென்றதாக அவர் நினைவுகூர்ந்தார். அந்த நாளைத் தம்­மால் மறக்க முடி­யாது என்று திரு பிர­சாத் கூறி­னார்.

"என்னை மகிழ்விப்பதற்காக போராடி போட்­டி­யில் வென்­ற­தாக மாண­வர்­கள் கூறி­ய­போது உணர்ச்­சி­வ­யப்­பட்­டேன். ஓர் ஓரமாக சென்று ஆனந்­தக் கண்­ணீர் விட்டேன்," என்­றார் திரு பிர­சாத்.

தொடக்­க­நி­லை­யில் ஆங்­கி­லம் மற்­றும் கணித பாடங்­க­ளைக் கற்­பித்த திரு பிர­சாத், தொடக்­க­நிலை மாண­வர்­கள் நல்ல பண்­பு­களை நிரந்­த­ர­மா­கக் கற்­கும் வய­தில் இருப்­ப­தால் அவர்­க­ளுக்­குக் கற்­றுத்­தர விரும்­பி­னார். பணம் மீது பற்­றின்­மை­யும் மாண­வர்­க­ளுக்கு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற உண்­மை­யான ஆர்­வ­மும் ஆசி­ரி­ய­ருக்­குத் தேவை என்று ஐந்து வயது மக­ளுக்­குத் தந்­தையான திரு பிர­சாத் கூறி­னார்.

பதவி உயர்வு பெற்ற மற்­றொரு கல்­வி­யா­ள­ரான அப்­துல் நசீ­ரும், 57, தொடக்­கத்­தில் வேறு துறை­யைச் சார்ந்­த­வர். காவல்­து­றை­யில் இருந்து இவர், 1995ஆம் ஆண்டு தமது ஆசி­ரி­யர் பட்­ட­யக்­கல்­வியை முடித்த பின்­னர் கிம் மோ உயர்­நி­லைப் பள்­ளி­யில் தமிழ் ஆசி­ரி­ய­ரா­கச் சேர்ந்­தார். தமிழ்­மொ­ழிப் பாடம் இல்­லாத உயர்­நி­லைப் பள்­ளி­க­ளுக்­கான தமிழ்­மொழி நிலை­யம் ஒன்றில் அவர் பாடம் கற்பித்தார்.­

 

மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பள்ளித் தலைமையாசிரியரின் ஊக்கு­விப்­பின் பயனாக திருச்­சி­யில் உள்ள ­தூய வள­னார் தன்­னாட்சிக் கல்­லூரியில் தமிழ்மொழி­யில் தமது இளங்­க­லைப் பட்­டப்­ப­டிப்பை முடித்தார். அதன் பிறகு 2001 முதல் 2003 வரை சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பி­ய­போது பாடத்­திட்­டப் பிரி­வில் பாடப் புத்­தக எழுத்­தா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னார். பாடத்­திட்­டத்தை வடி­வ­மைக்­கும் அனு­ப­வம் பாடத்தை மாண­வர்­க­ளுக்கு நடத்த மேலும் எளிதாக்கியதாகக் கூறி­னார். ஜின்­டாய் உயர்­நி­லைப் பள்­ளி­யி­லும் மிலேனியா கல்வி நிலை­யத்­தி­லும் கற்­பித்த பின்­னர் தற்­போது சுவிஸ் காட்­டேஜ் உயர்­நி­லைப் பள்­ளி­யில் வழி­காட்டு ஆசி­ரி­ய­ராக உள்­ளார்.

ஆசி­ரி­யர்­க­ளுக்கு சொல்­வன்மை, அக்­கறை, பார­பட்­ச­மின்மை ஆகி­யவை முக்­கி­ய­மா­கத் தேவைப்­ப­டு­கின்­றன என்பது திரு நசீரின் உறுதியான நிலைப்பாடு,

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!