தாய்க்கு பிள்ளை பாரம் இல்லை

ஐந்து வயது வரை சரி­வ­ரப் பேசாத மூத்த மகன் கேஷ­ஃபின் நிலை தாயார் திரு­மதி சரஸ்­வ­திக்­குக் கவ­லை­ய­ளித்­தது.

தொடக்­கப்­பள்­ளி­யில் சேர்ந்த நிலை­யில் அவ­னுக்கு 'டிஸ்­லெக்­சியா' எனப்­படும் கற்­றல் குறை­பாடு கண்­ட­றி­யப்­பட்­டது. இடிந்­து­போன அவ­ருக்கு, மேலு­மோர் இடி! கிட்­டத்­தட்ட நான்கு ஆண்டு சிறிய­வ­னான இளைய மகன் யாத­விற்கு 'ஆட்டிசம்' எனும் மதி­யி­றுக்­கக் குறைபாடு கண்­ட­றி­யப்­பட்­டது. இவ­ருக்கு ருக்­கேஷ் என்ற மக­னும் உண்டு.

தற்­போது முறையே 9, 6, 5 வயது பூர்த்­தி­யான மூன்று மகன்­களை­யும் முழு­நே­ர­மா­கப் பரா­ம­ரித்து வரு­கி­றார் இந்த அன்­புத் தாயார்.

பதி­னைந்து ஆண்­டு­கா­ல­மாக பாலர் பள்ளி ஆசி­ரி­யை­யா­கப் பணி­யாற்றி வந்த திரு­மதி சரஸ்­வ­திக்கு, கடந்த ஆண்டு தாம் பணி­யில் இருந்து வில­க­வேண்­டிய கட்­டா­யம் புலப்­ப­டத் தொடங்­கி­யது. மூன்று சிறு பிள்­ளை­க­ளைப் பேண­வும், கேஷஃப், யாத­வின் நல­னில் கூடு­தல் கவ­னம் செலுத்­த­வும் தனது முழு­நேர வேலையை இவர் கைவிட்­டார்.

"இத்­தனை ஆண்­டு­கா­ல­மாக ஓடி­யோடி உழைத்த எனக்கு வேலை­இல்­லா­மல் இருந்­தது பிடி­மா­னம் இல்­லா­தது போன்­றி­ருந்­தது. இருப்­பி­னும், மகன்­க­ளின் மகிழ்ச்­சி­யைக் காண்­ப­தும் அவர்­க­ளது நல்ல நெறி­மு­றை­க­ளைக் கண்டு ஆசி­ரி­யர்­கள் அவர்­க­ளைப் பாராட்­டு­வ­தைக் கேட்­ப­தும் ஒரு தாயாக எனக்­குச் சொல்­லொணா மன­நி­றைவை அளிக்­கின்­றது," என்­றார் 37 வய­தான திரு­மதி சரஸ்­வதி ஜீவா­னந்­தம்.

யாதவை பாலர் பள்­ளிக்கு மட்­டு­மின்றி, கைக்­கு­ழந்­தை­கள், சிறார்­க­ளி­டம் உள்ள குறை­பா­டு­களை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து உத­வும் திட்­டத்­தின்­கீ­ழான பாடங்­களுக்­கும் அழைத்­துச்­செல்ல வேண்­டும். கேஷஃபை வாரம் மூன்­று­முறை 'டிஸ்­லெக்­சியா' நிலை­யத்­தில் எழுத்­த­றி­வுப் பாடத்­துக்கு அழைத்­துச்­செல்ல வேண்­டும். இதற்­கி­டை­யில், இத்­த­கைய குறை­பா­டு­கள் எது­வும் இல்­லாத ருக்­கேஷை சம­மா­கப் பரா­ம­ரிக்­க­வில்­லையே என்ற வருத்­த­மும் அவரை உறுத்­தி­யது.

எவ்­வ­ளவு மன உளைச்­சல் ஏற்­பட்­டா­லும் பிள்­ளை­க­ளுக்­குத் தானே அனைத்­தை­யும் சரி­வ­ரச் செய்­ய­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்கிறார்.

பள்­ளி­யில் கேஷஃபை சக மாண­வர்­கள் ஏற்­றுக்­கொள்­ளா­மல் புறக்­கணிப்­ப­தும், மனம் புண்­ப­டும்­படி பேசு­வ­தும் அவரை பாதித்­தது. இதனால் மூன்று மகன்­க­ளை­யும் நல்ல நெறி­மு­றை­க­ளு­டன் வளர்ப்­ப­தற்கு முன்­னு­ரிமை தந்துவரு­கி­றார்.

எல்­லாப் பிள்­ளை­க­ளுக்­கும் நல்ல ஆரம்­ப­கால கற்­றல் அனு­ப­வத்தை வழங்க எண்ணி, தோழி­கள் இரு­வ­ரு­டன் இணைந்து 'த ஸ்கு­வி­ரல் ட்ரைப்' என்ற கல்­வி­சார்ந்த வர்த்­தக நிலை­யத்­தை­யும் நிறு­வி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!