அன்னைமடி தேடிய அன்பு

முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் உல­கைப் புரட்­டிப் போட்­ட­போது அய­ரா­மல் பாடு­பட்டு பல்­லா­யி­ரம் உயிர்­க­ளைக் காக்க உத­வினார்கள். ஆனா­லும் அவ­ர­வர் அன்­னை­யர்க்கு அவர்­கள் செல்­லப்­பிள்­ளை­கள் அல்­லவா?

தாயி­னும் சாலப் பரிந்து நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிக்­கும் இவர்­க­ளுக்­கும் அன்னை மடி தரும் ஆத­ரவு தேவா­மிர்­தம்.

தாயா­ரின் செல்­லப்­பிள்­ளை­யாக வளர்ந்­த­வர் இலங்கை நாட்­ட­வ­ரான 36 வயது இ.நிஷாந்த. அன்­னையை நல்­ல­படி வைத்­துக்­கொள்­வ­தற்­கா­கவே சுகா­தா­க­ரத் துறை உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்ற 16 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிங்­கப்­பூர் வந்­தார். ஜூரோங் சமூக மருத்­து­வ­மனை­யில் பணி­யாற்­றும் இவர் கிரு­மிப்­ப­ர­வல் கட்­டுப்­பா­டு­க­ளால் ஈராண்­டுக்­குப் பிறகு, சென்ற ஏப்­ரல் 8ஆம் தேதி­தான் தாயாரை மீண்­டும் காண முடிந்­தது.

இவர் அன்னை, பாட்டி இரு­வ­ரும் தாதி­யரே. பொறுமை, அர­வ­ணைப்பு, கவ­னம் போன்ற குணங்­களைக் கொண்­டி­ருந்த அவர்­க­ளது வழி­யி­லேயே செல்ல விரும்­பி­ய­தாகக் கூறி­னார் நிஷாந்த. சுகா­தா­ரத் துறை­யில் தாம் வேலை செய்­தால் தாயார் மகிழ்ச்சி அடை­வார் எனத் தெரிந்தே அத­னைத் தேர்ந்­தெ­டுத்­தார் நிஷாந்த.

கடந்த ஆண்டு பொதுத்­துறை உரு­மாற்ற விருது போட்டியில் உன்­ன­தச் சேவை விரு­தைப் பெற்ற திரு நிஷாந்த, இந்த வெற்­றிக்­குப் பின்­னால் தமது தாயார் இருப்­ப­தாகக் கூறி அவரை பெரு­மைப்­ப­டுத்­தி­னார். பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு சிங்­க­ளப் புத்­தாண்­டைத் தாயா­ரு­டன் கொண்­டாட முடிந்­தது இவ­ருக்கு இரட்­டிப்பு மகிழ்ச்சி.

இவ­ரைப் போன்றே அன்னை மடி நாடிச் சென்ற இன்­னொரு பிள்ளை, அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­ம­னை­யில் சிறு­நீ­ரக நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றும் மருத்­து­வர் கே பிரி­யங்கா.

ஈராண்­டுக்­குப் பின்­னர்­தான் இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லத்­தில் உள்ள தமது தாயா­ரைச் சென்று பார்த்­தார் இவர். தொடக்­கத்­தி­ல் இருந்து தாயார் தமக்கு அளித்த சுதந்­திர உணர்வே அவர்­மீ­தான ஏக்­கத்தை அதி­க­ரித்­த­தா­கக் கூறி­னார் டாக்­டர் பிரி­யங்கா. கொவிட்-19க்கு முன்­ன­தாக ஆண்­டுக்கு இரு­மு­றை­யா­வது தமது தாயா­ரைக் காணச் செல்­வது இவ­ருக்கு வழக்­கம்.

இந்­தி­யா­வில் இவ­ரது தந்­தைக்கு கொவிட்-19 தொற்­றி­யது. தடுப்­பூசிகள் இல்­லாத அந்­நே­ரத்­தில் உயிர்­வா­யுத் தட்­டுப்­பா­டும் நில­வி­ய­தால் உற­வி­னர் பல­ரும் உயி­ரி­ழந்­த­னர். அஞ்­சிய தாயா­ருக்­குத் தொலை­பேசி மூல­மாக மட்­டுமே ஆறு­தல் கூற­மு­டி­யும் என்ற நிலை கவலை அளித்­தது என்­றார் சிங்­கப்­பூ­ரில் கண­வ­ர், 8 வயது மகன், 4 வயது மக­ளு­டன் வாழும் டாக்­டர் பிரி­யங்கா.

பிரச்­சி­னை­க­ளை­யும் பேரி­டி­களை­யும் தாங்கி பிள்­ளை­களுக்­குத் தெரி­யா­மல் புன்­சி­ரிப்­பு­டன் நட­மா­டும் தாயார்­க­ளை­வி­டப் பல­சா­லி­களை உல­கில் காண்­பது மிக அரிது என்­றார் டாக்­டர் பிரி­யங்கா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!