ஜப்பானிய ஆட்சிக்கால சிங்கப்பூரை விவரிக்கும் ‘சுண்ணாம்பு அரிசி’

மோன­லிசா

கல்­வி­யா­ளர், செய்­திப் படைப்­பா­ளர் எனப் பன்­மு­கம் கொண்ட எழுத்­தா­ளர் பொன். சுந்­த­ர­ரா­சு­வின் முதல் நாவல் 'சுண்­ணாம்பு அரிசி'.

ஜப்­பா­னி­யர் ஆட்­சிக் காலத்­தில் சிங்­கப்­பூர் மக்­கள் அனு­ப­வித்த துன்­பங்­களை விவ­ரிக்­கும் இந்­நூ­லின் அறி­முக நிகழ்ச்சி சிங்­கப்­பூர் வாச­கர் வட்­டத்­தின் ஏற்­பாட்­டில் தேசிய நூல­கத்­தில் கடந்த 14ஆம் தேதி நடை­பெற்­றது.

"ஜப்­பா­னி­யர் ஆட்­சிக் காலப் பின்­பு­லத்­தில் ஏதா­வது கதை அல்­லது கட்­டுரை எழு­தி­யி­ருக்­கி­றீர்­களா?" என்று தம்­மி­டம் ஒரு­வர் கேட்­ட­தா­க­வும் அந்­தக் கேள்வி ஏற்­ப­டுத்­திய உந்­து­தலே இந்­நா­வல் எழு­தக் கார­ண­மாக அமைந்­தது என்­றும் பகிர்ந்­து­கொண்­டார் திரு பொன். சுந்­த­ர­ராசு.

"இரண்­டாம் உல­கப் போர்க் கால­கட்­டத்­தில் ஜப்­பா­னி­யர் ஆட்­சி­யின்­கீழ் சிங்­கப்­பூர் மக்­கள் அனு­பவித்த துன்­பங்­களை இப்­பு­தி­னத்­தில் ஆசி­ரி­யர் விவ­ரித்­துள்­ளார். உள்­ளூர்ச் சூழ­லைப் புரிந்து கொண்டு அதை மையப்­ப­டுத்தி எழு­தும் வர­லாற்­றுப் புதி­னங்­கள் வர­வேற்­கப்­பட வேண்­டி­யவை. இது­போன்ற நூல்­கள் தமி­ழில் அதி­கம் வரவேண்­டும். இவற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ரைப் பற்­றிய அரிய தக­வல்­க­ளை­யும் வர­லாற்­றை­யும் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்­துச்­செல்ல முடி­யும்," என்று சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு சு. மனோ­க­ரன் கூறி­னார்.

"வட்­டார வழக்­கில் புதி­னம் எழுது­வது மிகக் கடி­னம். அதனை உணர்ந்த ஆசி­ரி­யர் தேவை­யான இடங்­களில் மேற்­கோள் கொடுத்­தி­ருப்­பது, அந்­தக் காலப் பேச்சு வழக்­கை­யும் எழுத்து வழக்­கை­யும் புரிந்துகொள்ள அதி­கம் உத­வு­கிறது," என்­றார் வாழ்த்­துரை வழங்­கிய முனை­வர் சுப. திண்­ணப்­பன்.

"அன்­றைய வாழ்க்கை முறை­யை­யும் போர்க்­கா­லச் சூழ­லின் மனி­த­நே­யத்­தை­யும் சுட்­டி­யி­ருப்­பது, அன்­றைய சிங்­கப்­பூர் மக்­க­ளைப் பற்றி அதி­கம் தெரிந்­து­கொள்ள உத­வு­கிறது. வர­லாற்­றுப் பதி­வு­களை கற்­ப­னைக் கதை­மாந்­தர்­கள் வழி புதி­ன­மா­கப் படிக்­கும் பொழுது அது மாண­வர்­களை அதி­கம் சென்­ற­டை­யும்," என்­றார் சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் தலை­வர் திரு நா. ஆண்­டி­யப்­பன்.

இந்­நி­கழ்­வில் 'ஸூம'் வழி இணைந்த தமி­ழக எழுத்­தா­ளர் சாரு நிவேதா 'கிரேண்ட் நரேட்­டிவ்' எனும் பெருங்­க­தை­யா­டல் பற்­றிப் பேசி­னார். இன்­றைக்­குப் பெருங்­க­தை­யா­டல்­கள் தேவை­யில்லை என்­றும் சிறு கதை­யா­டல்­களே தேவை என்­றும் அவர் கூறி­னார்.

"போர்க்­கா­லச் சிர­மங்­க­ளைக் குறைக்க மக்­கள் சிங்­கப்­பூ­ரைச் சுற்­றி­யி­ருந்த தீவு­களில் குடி­ய­மர்த்­தப்­பட்­ட­தும், இனங்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட மனக்கசப்பை­யும் இந்த நாவல் மூலம் அறிந்­து­கொள்ள முடி­கிறது," என்­றார் எழுத்­தா­ளர் அழ­கு­நிலா.

நாவ­லின் அரு­மை­யான சொற்­றொ­டர்­க­ளை­யும் குறி­யீ­டு­க­ளை­யும் எடுத்­துக்­காட்­டிப் பேசி­னார் எழுத்­தா­ளர் ஷாந­வாஸ்.

நிகழ்ச்­சி­யில் மேலும் பல­ர் நூல் குறித்த தங்­கள் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

தமி­ழா­சி­ரி­யர்­கள், எழுத்­தா­ளர்­கள், வாச­கர்­கள், மாண­வர்­கள் என 100க்கும் மேற்­பட்­ட­வர்­கள் இந்த நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!