துன்பம் தீண்டிய பெண்களுக்கு துணைநின்று ஆதரவு

அன்­பான கண­வர், மகன் என இரு­வர் தமது உல­க­மாக இருந்­தா­லும் தீபாவுக்கு புற்­று­நோய் ஏற்படுத்திய தனி­மை­யு­ணர்வு அவ­ரைத் தின­மும் சோகத்தில் தள்ளி யது. இத­னைச் சமா­ளிக்க 2017ஆம் ஆண்­டி­லேயே சிபி­ஆர், ஏஇடி போன்ற அவ­ச­ர­நிலை உயிர்­காப்­புத் திறன்­களைக் கற்­றுக்­கொள்ள விரும்­பி­ய­தால் சமூக மன்­றத்­தில் நிகழும் பல­த­ரப்­பட்ட பயி­ல­ரங்­கு­க­ளுக்கு அவர் விண்­ணப்­பித்­தார்.

அதே ஆண்டு சிங்­கப்­பூர் புற்­று­நோய் சங்­கத்­தின் ‘ரிலே ஃபார் லைஃப்’ என்­னும் ஓட்­டத்­தில் தீபா பங்­கெ­டுத்­தார். புற்­று­நோ­யா­ளி­ க­ளை­யும் குண­ம­டைந்­த­வர்­க­ளை­யும் கொண்­டா­டும் இந்த ‘ரிலே’ அவ­ருக்கு உற்­சா­கம் தந்­தது.

அதே உற்சாகத்துடன், புற்­று­நோ­யால் அவ­திப்­படும் பெண்­க­ளுக்கு உதவ உரு­வாக்­கப்­பட்ட ‘பீஷானா’ ஆத­ர­வுக் குழு­வில் அவர் சேர்ந்­தார்.

ஒவ்­வொரு மாத­மும் புதுப் புது நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்­யும் இக்குழு­விற்கு 2018ஆம் ஆண்டு துணைத் தலை

­வ­ரா­க­வும் பின்­னர் தலை­

வ­ரா­க­வும் பொறுப்­பேற்று அவர் செயல்­பட்­டார்.

தமது குழு­வின் செயல்­பா­டு­களில் பல மாற்­றங்­க­ளைச் செய்த தீபா, இன்­று­வரை பல்வேறு நட­வ­டிக்­கை­களில் மும்­மு­ர­மாகப்

பங்­கெடுத்து வருகிறார். துன்பம் தொடர்ந்து வந்தா லும் பெண்கள் துவண்டு விடாமல் இருப்பதை இவரிடம் கற்கலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!