நானும் ஒரு படைப்பாளி

தமிழ் மாணவர்களின் படைப்புத் திறனைப் பட்டை தீட்டும் கல்வி அமைச்சின் நிகழ்ச்சி

யுகேஷ் கண்­ணன்

 

சிங்­கப்­பூ­ரின் தமிழ் மாண­வர்­க­ளுக்­குள் மறைந்­தி­ருக்­கும் கலைத்­திறன்­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­களுக்­குப் பயிற்­சி­ய­ளித்து, மெரு­கூட்ட உத­வு­வதே 'நானும் ஒரு படைப்­பாளி' நிகழ்ச்­சி­யின் முக்­கிய நோக்­க­மென கல்வி அமைச்­சின் தாய்­மொ­ழி­கள் துறை­யில் தமிழ்­மொ­ழிப் பிரி­வுக்­கான மூத்த உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி மும்­தாஸ் காசிம் கூறி­னார்.

1990களில் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­கா­கத் தொடங்­கப்­பட்ட இந்­நி­கழ்ச்சி தற்­போது தொடக்கக் ­கல்­லூரி மாண­வர்­களுக்கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­கழ்ச்­சி­யில் நடத்­தப்­படும் பல்­வேறு பயி­ல­ரங்­கு­க­ளின்­வழி தமிழ் மாண­வர்­கள் சிறு­கதை, நாட­கம், கவிதை ஆகி­ய­வற்றை எழு­தக் கற்­கின்­ற­னர்.

இவற்­றில் கலந்­து­கொண்டு வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­குப் பரி­ச­ளிப்பு விழா நேற்­றுக் காலை ஒன்­பது மணி முதல் நண்பகல் 12 மணி வரை உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய அரங்­கில் நடை­பெற்­றது.

சிறப்பு விருந்­தி­ன­ரான கல்வி அமைச்­சின் தாய்­மொ­ழித் துறை இயக்­கு­நர் ஹெங் போய் ஹோங், குத்­து­வி­ளக்கு ஏற்றி நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்­தார்.

தொடர்ந்து தமிழ்த்­தாய் வாழ்த்­தும் கிள­மெண்டி டவுன் உயர்­நிலைப் பள்ளி மாண­வி­க­ளின் பரத நாட்­டி­ய­மும் அரங்­கே­றின.

நிகழ்ச்­சி­யின் முக்­கிய அம்­ச­மாக சிறந்த படைப்­பு­களை இயற்­றிய மாண­வர்­கள், மேடை­யில் அவற்­றைப் படைத்­த­னர். உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் சிறு­க­தை­களையும் நாட­கங்­க­ளை­யும் படைத்த வேளை­யில் தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் கவி­தை­க­ளைப் படைத்­த­னர்.

'நானும் ஒரு படைப்­பாளி' பயி­ல­ரங்­கு­களில் பங்­கேற்ற 330 மாண­வர்­க­ளுள் சிறந்த பங்­கேற்­பாளர்களாகத் தேர்வு செய்­யப்­பட்ட 93 மாண­வர்­க­ளுக்கு நேற்று பரி­சுக் கோப்­பை­களும் சான்­றி­தழ்­களும் வழங்­கப்­பட்­டன.

சுவா சூ காங் உயர்­நி­லைப் பள்ளி மாணவி வடி­வேல் பவித்ரா, 13, தொடர்ந்து இது­போன்ற பயி­ல­ரங்­கு­களில் பங்­கேற்க விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­தார். "குறட்டை" என்ற தலைப்­பில் நான்கு வய­துக் குழந்தை ஒன்று பெரு­வி­ரைவு ரயி­லில் கோளாறு ஏற்­பட்­ட­வு­டன் செய்­யும் சேட்­டை­களை கதைக்­க­ரு­வா­கக் கொண்டு இவர் எழு­திய கதையை மேடை­யில் படைத்­த­போது சிரிப்­பொலி அரங்கை நிறைத்­தது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை மைய­மா­கக் கொண்ட கவி­தையை எழு­தி­னார் தேசிய த் தொடக்­கக் கல்­லூரி மாணவி, பிரீத்தி மகே­சு­வ­ரன், 17. இந்­நி­கழ்ச்­சி­யின் வாயி­லாக எவ்­வாறு எளிய, கருத்­துள்ள கவி­தை­களை நய­மாக எழு­து­வது என்­ப­தைக் கற்­றுக்­கொண்­ட­தாக இவர் கூறி­னார். இதற்குமுன் கவிதை எழு­திய அனு­ப­வம் இல்­லா­த­தால் முத­லில் சவா­லாக இருந்­தா­லும் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் உத­வி­யோடு அதைக் கடந்து வந்­த­தாக இவர் குறிப்­பிட்­டார்.

இது­போன்ற நிகழ்ச்­சி­களில் தமிழ் மாண­வர்­கள் முன்­வந்து ஆர்­வத்­து­டன் ஈடு­ப­டு­வது மன­நி­றைவை அளிப்­ப­தா­கக் கூறி­னார் திரு­வாட்டி மும்­தாஸ். அவர்­க­ளது திற­மை­க­ளுக்­கான தள­மா­கத் தொடர்ந்து "நானும் ஒரு படைப்­பாளி" இருக்­கு­மென இவர் உறு­தி­ய­ளித்­தார். இனி வரும் ஆண்­டு­களில் இந்­நி­கழ்ச்சி மெய்­நி­கர் முறை­யி­லும் நேரடியாகவும் நடை­பெ­றவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!