இளையர்களின் கலையார்வத்தை வளர்க்கும் நடனப் போட்டி

அருணா கந்­த­சாமி

இளை­யர்­க­ளின் கலை­யார்­வத்தை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் 'பர­தம்' எனும் இந்­திய நட­னப் போட்­டியை 2007ஆம் ஆண்­டி­லி­ருந்து நடத்தி வரு­கிறது தோ பாயோ மேற்கு சமூக மன்ற இந்­தியர் நற்­ப­ணிச் செயற்­குழு.

'பர­தம் 2022', இம்­மா­தம் 23ஆம் தேதி, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை, தோ பாயோ மேற்கு சமூக மன்ற அரங்­கில் நடை­பெற்­றது. வயது அடிப்­ப­டை­யி­லான மூன்று பிரி­வு­களில் 50க்கும் மேற்­பட்­டோர் பதிந்­து­கொண்ட நிலை­யில் இம்­மா­தம் 9ஆம் தேதி நடை­பெற்ற தகு­திச் சுற்­றில் தேர்­வான 18 போட்­டி­யா­ளர்­கள், இறு­திச் சுற்­றில் கள­மி­றங்­கி­னர். விக்­னேஸ்­வரி வடி­வ­ழ­கன், நிர்­மலா தேவி, கலை­மணி பத்­ம­லக்‌ஷ்மி சுரே‌ஷ் ஆகி­யோர் போட்­டி­யின் நடு­வர்­க­ளா­கச் செயல்­பட்­ட­னர்.

நிகழ்ச்­சி­யில், நிதி மற்­றும் போக்கு­வ­ரத்து மூத்த துணை­ய­மைச்­சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

பர­தக் கலை மீதான ஆர்­வத்தை இளம் வய­தி­லேயே கண்­ட­றிந்து ஊக்­கு­விப்­பது முக்­கி­யம் என்றார் தோ பாயோ மேற்கு சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணி செயற்­கு­ழு­வின் தலை­வர் வி.ஜி. பால­சந்­தர்.

போட்­டி­யைப் பற்றி தன்­னு­டைய நடன ஆசி­ரி­யர் மூலம் அறிந்­து­கொண்ட 10 வயது ஸ்ரீதர் ப்ர­ணிதா,

இளம் வய­தி­லேயே நடனம் மீது அதீத ஆர்­வம் கொண்­டி­ருக்­கும் இவ­ருக்கு இது முதல் போட்டி அல்ல. இருப்­பி­னும் நடு­வர்­கள் முதல்­மு­றை­யா­கத் தன்­னு­டைய நாட்­டி­யம் குறித்­துக் கருத்­து­ரைத்­தது புது­மை­யான அனு­ப­வம் என்­றார், 'A' பிரி­வில் முதல் பரிசை வென்ற ப்ர­ணிதா.

ஏழு வய­தி­லி­ருந்தே பர­தம் பயி­லும் இச­பெல் ஜோஷி, 15, போட்டி குறித்து ஃபேஸ்புக் மூலம் தெரிந்து­கொண்­ட­தா­கக் கூறி­னார். இவர் 'B' பிரி­வில் முதல் பரி­சைத் தட்டிச்­சென்­றார். செயிண்ட் மார்­க­ரெட் உயர்­நி­லைப் பள்ளி மாண­வி­யான இவர், மன உளைச்­ச­லைக் குறைக்க நட­னம் ஒரு சிறந்த வழி என்­று கூறினார்.

படம்: ஏற்பாட்டுக் குழு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!