தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் இரண்டு நிகழ்ச்சிகள்

தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ்­மொ­ழிச் சேவைப் பிரிவு ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் இரு நிகழ்ச்­சி­கள் இன்று நடை­பெற இருக்­கின்­றன.

'பொன்­னி­யின் செல்­வன் காமிக்ஸ் தயா­ரிப்­பா­ளர் கார்த்­தி­கே­ய­னு­டன் ஓர் உரை­யா­டல்' எனும் நிகழ்ச்சி இன்று மாலை ஐந்து மணி முதல் ஆறரை மணி வரை 'ஸூம்' தளத்தில் நடை­பெ­றும்.

கூத்­துப் பட்­ட­றைக் கலை­ஞராக வாழ்­வைத் தொடங்­கிய கார்த்­தி­கே­யன், பின்­னர் உயி­ரோ­வி­யம், சிற்­பம் எனப் பல்­வேறு துறை­களில் முத்­திரை பதித்­த­வர்.

பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற உயிரோவியக் கதைப் புத்தகப் படைப்புக்குழுத் தலைவர்.

உயி­ரோ­வி­யப் படைப்­பு­களில் 25 ஆண்டு அனு­ப­வம் மிக்க கார்த்­தி­கே­ய­னு­டன் உரை­யா­டும் சந்­திப்­பில் இணைந்­து­கொள்­வ­தற்­கான அடை­யாள எண்: 964 5451 6291 மறைச்­சொல்: 082982

சுவா சூ காங் பொது நூல­கத்­தின் நான்­காம் தளத்­தில் இன்று பிற்­ப­கல் மூன்று மணி முதல் மூன்­றரை மணி வரை 'கட்­டுக்­க­தை­யல்ல காட்­டுக்­கதை!' எனும் கதை சொல்­லும் நிகழ்ச்சி நடை­பெ­றும்.

விலங்­கு­க­ளின் கதை­க­ளைச் சொல்­லும் இந்­நி­கழ்ச்­சி­யில், சிங்­கப்­பூ­ரில் நடந்த உண்­மைக் கதை­கள், சம்­ப­வங்­கள், மீட்­புப் பணி­கள் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட கதை­களைக் கேட்கலாம்.

இதற்கு, https://www.eventbrite.sg/e/acres-its-not-fiction-but-real-jungle-stori… எனும் இணைய முக­வ­ரி­யில் பதிந்து கொள்­ள­வேண்­டும்.

'ஏக்­கர்ஸ்' எனப்­படும் விலங்­கு­ந­லப் பாது­காப்பு அமைப்­பின் தொண்­டூ­ழி­யர்­கள் இதனை நடத்­து­கி­றார்­கள். அடுத்த நான்கு மாதங்களின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இத்தகைய நிகழ்ச்சி இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!