வித்தியாசமாக வெளியிடப்பட்ட 'விண்ணில் வீடு கட்டி'

வித்தியாசமாக வெளியிடப்பட்ட 'விண்ணில் வீடு கட்டி'

1 mins read
93d4b577-76c8-4e87-9208-20db139f221a
(இடமிருந்து வலம்) திரு பிச்சினிக்காடு இளங்கோ, முனைவர் மு.அ. காதர், திரு நா. ஆண்டியப்பன், முனைவர் சுப. திண்ணப்பன், திரு இரா. தினகரன், முனைவர் ந. செல்லக் கிருஷ்ணன். படம்: நாதன் ஸ்டுடியோ -

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழக ஏற்­பாட்­டில் அதன் தலை­வர் நா. ஆண்­டி­யப்­பன் எழு­திய 'விண்­ணில் வீடு கட்டி...' (அமீ­ர­கத்­திற்கு ஓர் ஆனந்­தப் பய­ணம்) எனும் நூலின் வெளி­யீட்டு விழா இம்­மா­தம் 6ஆம் தேதி மாலை, உட்­லண்ட்ஸ் வட்­டார நூலக அரங்­கில் நடை­பெற்­றது.

சிங்­கப்­பூர்ச் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கச் சார்­பு­நி­லைப் பேரா­சி­ரி­ய­ர் முனை­வர் சுப. திண்­ணப்­பன் தலை­மை­யேற்ற ­நி­கழ்ச்­சி­யில் நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­ன­ரான இரா. தின­க­ரன் நூலை வெளி­யிட்­டார்.

திரு. தின­க­ரன் தொலை­இ­யக்கி மூலம் ஒரு பொத்­தானை அழுத்த, திரை­யில் தோன்­றிய உல­கின் ஆக உய­ர­மான கட்­ட­ட­மான புர்ஜ் கலி­ஃபா­வின் உச்­சி­யி­லி­ருந்து ஒரு பெட்டி மிதந்து வந்து தரை­ இறங்கி, பெட்டி திறந்து அதற்கு உள்­ளி­ருந்து 'விண்­ணில் வீடு கட்டி' புத்­த­கம் வெளி­வ­ரு­வது போன்று வித்தியாசமான ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

சிங்­கப்­பூர்ச் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இணை விரி­வு­ரை­யா­ளர் முனை­வர் ந. செல்லக்­கி­ருஷ்­ணன் நூலை அறி­மு­கம் செய்து உரையாற்றினார்.

ஜமால் முகம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­ சங்­க சிங்­கப்­பூர்க் கிளை­யின் தலை­வர் முனை­வர் மு. அ. காதர் வாழ்த்­துரை வழங்கினார்.