சக்கர நாற்காலியில் ‘பீஷ்மர்’

கால் முறிவு ஏற்­பட்ட நிலை­யி­லும் சக்­கர நாற்­கா­லி­யில் இருந்­த­வாறு பீஷ்­மர் கதா­பாத்­தி­ரம் ஏற்று நடிக்­க­வுள்­ளார் உள்­ளூர் பிர­ப­ல­மான

திரு ச. வடி­வ­ழ­கன். இம்­மா­தம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை எஸ்­பி­ள­னேட்­டில் உள்ள சிங்­டெல் வாட்­டர்­ஃபி­ரண்ட் அரங்­கத்­தில் அரங்­கே­றும் 'கிங்­டம்ஸ் அபார்ட்' என்ற மகா­பா­ர­தத் தழு­வல் நாட­கத்­தில் நடிக்­க­வி­ருக்­கி­றார் அவர். எதிர்­பாரா வகை­யில் ஏற்­பட்ட இந்­தக் காயத்­து­டன் மேடை­யே­று­வது இதுவே முதல் முறை என்­றார் வடி­வ­ழ­கன்.

மகா­பா­ர­தத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ர­மான பீஷ்­மர், கம்­பீ­ர­மும் வீர­மும் நிறைந்த ஒரு போர்­வீ­ரர். அத்­த­கைய வீர­ரின் குணங்­களை அமர்ந்­த­படி காட்­டு­வ­தைச் சவா­லா­கக் குறிப்­பிட்­டார் வடி­வ­ழ­கன். உடல் பாவ­னை­கள், வச­னங்­களைப் படைக்­கும் முறை ஆகி­ய­வற்­றில் கூடு­தல் கவ­னம் செலுத் தப்பட்டது. முறிவு ஏற்­பட்டு சில மாதங்­கள் மருத்­து­வ­ம­னை­யில் இருக்­க­வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­ட­போது, நாட­கத்­தி­லி­ருந்து வில­கி­வி­ட­லாம் என எண்­ணிய திரு வடி­வ­ழ­கனை நடிக்க உற்­சா­கப்­படுத்­தி­னார் நாட­கத்­தின் இயக்­கு­நர் சொங் செ சியென். தேர் போல வடி­வ­மைக்­கப்­பட்ட சிறப்பு சக்­கர நாற்­கா­லி­யைப் பயன்­ப­டுத்தி, பீஷ்­மர் கதா­பாத்­தி­ரத்தை வேறு­பட்ட கோணத்­தில் நாட­கக்­கு­ழு­வி­னர் கற்­பனை செய்து பார்த்­துள்­ள­னர்.

"குரு­ஷேத்­திர போர்க் காட்­சி­களில், எனது சக்­கர நாற்­காலி தேரா­கிறது. பிற இடங்­களில், அது ஒரு நக­ரும் அரி­யணை போலா­கிறது. இப்­படி அமர்ந்­த­படி நடிப்­ப­தில் உள்ள பல்­வேறு சவால்­கள் என்னை ஒரு நடி­க­ராக வளர்த்­துள்­ளன," என்­றார் வடி­வ­ழ­கன்.

சக நடி­கர்­கள், மனைவி, ரவீந்­தி­ரன் நாட­கக் குழு நண்­பர்­கள் என பல­ரின் ஆத­ர­வு­டன் இந்த அனு­ப­வத்தை மேற்­கொண்­டுள்­ள­தாக கூறிய திரு வடி­வ­ழ­கன், நடக்­கவோ எழுந்து சண்­டை­யி­டவோ முடி­யா­த­போ­தி­லும், பீஷ்­மர் கதா­பாத்­தி­ரம் தொய்­வ­டை­யாது என நம்­பிக்கை தெரி­வித்­தார்.

அண்­மைய காலத்­துக்­கேற்ற நவீன மகா­பா­ரத தழு­வ­லா­கப் படைக்­கப்­படும் 'கிங்­டம்ஸ் அபார்ட்', வெளி­நாட்டு நடி­கர்­களு­டன், ஆங்­கி­லம் மட்­டு­மின்றி, பிற­மொழி வச­னங்­க­ளு­டன் மேடை­யே­றும். தமி­ழில் பேசும் பீஷ்­ம­ரு­டன், மலா­யில் பேசும் பீம­னை­யும், ஜப்­பா­னிய மொழி­யில் பேசும் தர்­ம­ரை­யும் மக்­கள் ரசிக்­க­லாம்.

மேல் விவ­ரங்­களுக்கு:

https://www.sistic.com.sg/events/kingdoms1122

செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!