உள்ளூர் திரைப்படம்: மாணவர் பார்வையில் வெளிநாட்டு ஊழியர்

ஆ. விஷ்ணு வர்­தினி

சிங்­கப்­பூர் உள்­கட்­ட­மைப்­பு­கள் உரு­வாக பெரி­தும் உதவி வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் அல்­லல்­களைச் சித்­திரிக்­கும் ‘மை இன்­விசி­பல் லைஃப்’ எனும் உள்­ளூர் திரைப்­ப­டம், ‘பன்­னாட்டு புலம்­பெயர்ந்­தோர் தினத்தை’ முன்­னிட்டு டிசம்­பர் 1ஆம் தேதி முதல் டிசம்­பர் 18ஆம் தேதி­வரை வரை யூடியூப் தளத்தில் இலவசமாக திரையிடப் படுகிறது

பள்­ளிக்­கூட வளா­கத்­தில் வேலை­ பார்க்­கும் சஞ்­சய் எனும் வெளி­நாட்டு ஊழி­ய­ருக்­கும் மாண­வரான டேனி­ய­லுக்­கும் இடையே உள்ள நட்பை, உறவை இத்­தி­ரைப்­படம் சித்­திரிக்­கிறது.

சிக்­கல்­களும் சந்­தே­கங்­களும் ஏற்­ப­டு­கை­யில் இரு­வ­ருக்­கு­மான நட்பு எவ்­வ­கை­யில் பாதிக்­கப்­ப­டு­கிறது, சஞ்­சய் எதிர்­நோக்­கும் சவால்­கள் யாவை என்­பதே படத்­தின் கதைக்­கரு.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் 10-16 வய­து­டைய இளை­யர்­களுக்கும் ­உரியதாக உரு­வாகி­உள்ள இந்­தப் படம், சிங்­கப்­பூ­ரில் சமூக ஒற்­று­மை­யை­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­களை மாண­வர்­கள் எந்த கண்­ணோட்­டத்­தில் நோக்­கு­கின்­ற­னர் என்­ப­தை­யும் ஆராய்­கிறது.

சஞ்­சய் கதா­பாத்­தி­ரம், தங்­க­ளது வாழ்­வி­யல் பிரச்­சி­னை­கள் அறி­யப்­ப­டு­கின்­றன என்ற நம்­பிக்­கையை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தும் என்று திரைப்­ப­டத்­தின் இயக்­கு­நர் திரு எட்­வர்ட் ஃபூ நம்­பிக்கை தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் சவால்­க­ளைச் சித்­திரிக்­கும் அதே வேளை­யில், பிள்ளை-பெற்­றோர் உறவு, நட்­பில் புரிந்­து­ணர்வு என இளை­யர்­க­ளைச் சார்ந்த பல்­வேறு கூறு­க­ளை­யும் திரை­யில் கொண்டு வர முயற்சி செய்­துள்­ள­தாக திரு எட்­வர்ட் கூறி­னார்.

‘மை இன்­வி­சி­பல் லைஃப்’ திரைப்­ப­டத்­தின் முன்­னோட்ட நிகழ்ச்சி நவம்­பர் 23ஆம் தேதி நடந்­தது. அதில் கலந்­து­கொண்ட மனி­த­வள அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங், ‘கேட்வே ஆர்ட்ஸ்’, ‘செண்­டூ­ரி­யன் கார்ப்­ப­ரே­ஷன்’ நிறு­வ­னங்­கள் இணைந்து எடுத்­துள்ள இம்­மு­யற்­சி­யைப் பாராட்­டி­னார்.

திரைப்­ப­டம் எனும் கலை ஊடகத்­தைக் கொண்டு நமது சமூகத்தை, பண்­பாட்டை ஆராய்­வதோடு, இத்­தி­ரைப்­ப­டம் நாம் உரு­வாக்க விழை­யும் எதிர்­கா­லத்­தை­யும் எடுத்­துக்­கூ­று­வ­தாக டாக்­டர் டான் கூறி­னார்.

“வெவ்­வேறு பின்­ன­ணி­களில் இருந்து வரும் சமூ­கத்­தி­ன­ரைப் பற்­றிய நமது மனத்­த­டை­க­ளைப் போக்­கு­வது எப்­படி என்­பதை இத்­தி­ரைப்­ப­டம் காட்­டு­கிறது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­டன் நல்­லுறவு வளர்த்­துக்­கொள்­வ­தற்­கான முதல் படி, அவர்­க­ளு­டன் உரை­யா­டு­வதே என்ற அமைச்சர், ஊழி­யர்­களின் நலன் பேணும் பல்­வகை முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்ள மனி­த­வள அமைச்சு, பள்ளி­களு­ட­னும் இணைய முற்­பட்டு, அதில் இளை­யர்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தை­யும் குறிப்­பிட்­டார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சார்ந்த தொண்­டூ­ழிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட, பத்­தில் எட்டு இளை­யர்­கள் ஆர்­வம் காட்­டி­யுள்­ள­தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்­த­ மு­யற்சி பற்றி கருத்து கூறிய கேட்வே ஆர்ட்­ஸின் தலைமை நிர்­வாகி ப்ரி­சில்லா கொங், இம்­மு­யற்­சிக்­கான எண்ணம், நோய்ப்­ப­ர­வல் காலத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஏற்­பட்ட பரி­தாப நிலை­யால் விளைந்­தது என்­றும் பின்­னர், இம்­மு­யற்­சிக்­கான எண்­ணம் பிறந்­த­தா­க­வும் கூறினார். இத்­தி­ரைப்­ப­டத்­தின் மின்­னி­லக்­கப் பிர­தியை பள்­ளி­கள் வாங்க­லாம். அதோடு, பள்­ளி­களின் பண்­பு­ந­லன் கல்­வித்­திட்­டத்­துக்­கான வழி­காட்­டி­யும் வழங்­கப்­படும். மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு, grace@gateway.sg மின்­னஞ்­சலை நாட­லாம்.

vishnuv@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!