கம்போடியாவில் வள்ளுவர் சிலை

மோன­லிசா

கம்­போ­டியா நாட்­டின் சியாம் ரீப் பகுதியில் திரு­வள்­ளு­வர் சிலை அமைக்­கப்­பட்­டுள்­ளது. அண்­மை­யில் கம்­போ­டி­யா­வில் உலக திருக்­கு­றள் மாநாடு நடைபெற்றது.

அங்­கோர் தமிழ்ச் சங்­கம் ஏற்­பாடு செய்த இம்­மா­நாட்­டின் முதல் நாள் நிகழ்­வில் கம்போடியத் தலை­மைச் செய­ல­கத்தின் கலை, பண்­பாட்­டுத் துறை அலு­வ­லக வளா­கத்­தில் இச்­சிலை நிறு­வப்­பட்­டது.

கம்­போ­டியப் பாரம்­ப­ரிய இசை மற்­றும் கலை நிகழ்ச்­சி­க­ளு­டன் திறப்பு விழா கோலா­க­ல­மாக நடை­பெற்­றது.

விஜிபி உலக தமிழ் சங்­கத்­தலை­வர் வி.ஜி. சந்­தோ­ஷம் இச்­சி­லையை வழங்­யுள்ளார். பொது­மக்­கள் இதனை நேரில் சென்று இல­வ­ச­மாகக் காண­லாம்.

கடந்த அக்­டோ­பர் 3ஆம் தேதி நிறைவுபெற்ற ஆறு நாள் ­மா­நாட்­டிற்கு பன்­னாட்டுத் தமிழ் நடு­வம், கம்­போ­டியா-தமிழ்­நாடு தொண்டு நிறு­வ­னம், கம்­போ­டிய கலா­சா­ர, நுண்­கலை அமைச்சு உள்ளிட்டவை ஆத­ரவு அளித்­தன.

இதில், உல­களாவிய தமி­ழ் அறிஞர்­க­ள் பங்குபெற்ற ஆய்­வ­ரங்­கம், கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், பட்­டி­மன்­றம், இசை, கலை­நி­கழ்ச்­சி­கள் ஆகியவை நடை­பெற்­றன. இம்­மா­நாட்­டை­யொட்டி கம்­போ­டியர்களின் தாய்­மொ­ழி­யான கெமர் மொழி­யில் திருக்­கு­றளை மொழி­பெ­யர்க்­கும் முயற்சி­ நடை­பெற்­று­ வ­ரு­கிறது.

தமி­ழ­றி­ஞர்­க­ளின் ஆய்­வுக் கட்­டு­ரை­க­ளின் தொகுப்பு நூல் ஒன்­றும் வெளி­யி­டப்­பட்­டது. இம்­ மாநாட்­டில் 100க்­கும் மேற்­பட்ட தமிழ­றி­ஞர்­கள், எழுத்­தா­ளர்­கள், கவி­ஞர்­கள், நாட்­டி­யக் கலை­ஞர்­கள், இசைக் கலை­ஞர்­கள் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

அங்­கோர் தமிழ்ச் சங்­கத்­ தலை­வர் சீனி­வா­ச­ராவ், “திருக்­கு­ற­ளில் நன்­னெறி வாழ்­விற்குத் தேவை­யான அனைத்து வாழ்­வி­யல் கருத்துகளும் நெறி­மு­றை­களும் உள்­ளன. இதனை உல­கில் உள்ள அனைத்து மக்­க­ளுக்­கும் எடுத்­துச் செல்லவேண்­டி­யது தமி­ழர்­க­ளின் கடமை என்றே கரு­து­கி­றோம்,” எனக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!