குடும்பநலம் கூடிவாழும் நாட்டுக்குப் பலம்

இளை­யோர், முதியோர், குடும்ப உறுப்­பி­னர்­கள் என்று பல­ரும் சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக் ஏற்­பாடு செய்­தி­ருந்த குடும்பதினத்­தில் பங்கேற்று மகிழ்ந்­த­னர். கடந்த 17ஆம் தேதி காலை 10 மணி­யி­லி­ருந்து மாலை 4 மணி வரை பே ஈஸ்ட் கார்­டனில் நடை­பெற்ற இந்த குடும்ப விழா­வில், ஏறக்குறைய 800 பேர் கலந்­து­கொண்­ட­னர். உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டாக்­டர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் சிறப்பு விருந்­தி­ன­ராக வருகை தந்­தி­ருந்­தார்.

சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக்­கின் 82வது ஆண்டு நிறைவு கொண்­டாட்­ட­மும் இவ்­வி­ழா­வில் இடம்­பெற்­றது. சமூ­கத்தை வலுப்படுத்­தும் விதத்­தில் இந்த நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்­த­தற்­காக ஏற்­பாட்­டுக் குழு­வி­னரை அமைச்­சர் பாராட்­டி­னார்.

‘வலு­வான குடும்­பம், வலு­வான தேசம்’ என்ற கருப்­பொ­ரு­ளில் நடந்த இந்த நிகழ்ச்­சி­யின் மூலம் குடும்­பங்­க­ளி­டையே பிணைப்பை ஏற்­ப­டுத்­து­வது ஏற்­பாட்­டா­ளர்

­க­ளின் நோக்­கம். கூட்­டுக் குடும்­பங்­கள் குறைந்து வரும் நிலை மாற­வேண்­டும், அதற்­கான வாய்ப்­பு­கள் ஏற்படுத்­தப்­ப­ட­வேண்­டும் என் றார் சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக்­கின் ஆலோ­ச­கர் திரு நசீர் கனி.

குடும்ப தினத்­தில் ஸ்ரீ நாரா­யண மிஷன், ஜாமியா இல்­லம் ஆகிய அமைப்­பு­களும் கலந்­து­கொண்டு கரம் கொடுத்­தன. இந்­திய முஸ்­லிம் பேரவை, சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம், ‘மெண் டாக்கி’ போன்ற சமூக அமைப்­பு­க­ளின் தலை­வர்­களும் நிகழ்ச்­சிக்கு வந்து சிறப்­பித்­த­னர். அழைக்­கப்­பட்ட அமைப்­பு­கள் ஆத­ரவு வழங்­கி­யது மகிழ்ச்சி அளித்­த­தாக ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வர் அமீர் ரோஷன் தெரிவித்தார். குடும்ப தினத்­தைத் திட்­ட­மிட இரண்­டி­லி­ருந்து மூன்று மாதங்­கள் ஆன­தா­க­வும் 15 பேர் கொண்ட குழு­வும் தொண்­டூ­ழி­யர்­களும் இணைந்து செயல்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது. பங்­க­ளிப்­பா­ளர்­கள், பொருளுதவி செய்­த­வர்­கள், ஆத­ர­வா­ளர்­கள் போன்­ற­வர்­க­ளின் பெரும்­பங்கும் இதிலடங்கும் என்றும் திரு அமீர் கூறி­னார்.

குடும்ப தினத்தை சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக் ஏற்­பாடு செய்­தி­ருந்­தா­லும் நிகழ்ச்­சி­யின் பின்­ன­ணி­யில் பல அமைப்­பு­கள், நிறு­வ­னங்­கள், அற­நி­று­வ­னங்­கள் போன்­ற­வற்­றின் ஆத­ரவு உண்டு என்­றும் இந்த உதவி செலவை குறைக்க உத­வி­யது என்­றும் பகிர்ந்­து­கொண்­டார் திரு கனி.

எதிர்­பார்த்­ததுபோல, நிகழ்ச்சி வெற்­றி­க­ர­மாக நடந்­தே­றி­யது என்று திரு நசீர் கனி கூறி­னார்.

அதோடு, வெளி­நாட்டுப் பய­ணம் மேற்கொள்ள இயலாதவர்க­ளுக்கு இந்த நிகழ்ச்சி உற்­சா­கம் அளித்­தது ஏற்­பாட்டு குழு­விற்கு மிகுந்த மகிழ்ச்சி என்று திரு அமீர் பகிர்ந்­து­கொண்­டார்.

மக்­க­ளைக் கவ­ரும் வண்­ணம் அமைந்­தி­ருந்த மேடை நிகழ்ச்­சி­கள், கேளிக்கை நட­வ­டிக்­கை­கள், அதிர்ஷ்ட குலுக்கு, விளை­யாட்­டு­கள் என்ற பல­த­ரப்­பட்ட அங்­கங்­களை கொண்ட இந்த நிகழ்ச்­சியை, தொலைக்­காட்சி பிர­ப­லம் திரு புர­வ­லன் தொகுத்து வழங்­கி­னார்.

பொன்மணி உதயகுமார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!