ஆதரவும் ஆறுதலும் தந்த கொண்டாட்டம்

வீடற்­றோ­ருக்கு கிறிஸ்­து­மஸ் உணர்வை ஊட்­டும் முயற்­சி­யில் ‘லைஃப் சென்­டர் சமூக சேவை­கள்’ இறங்­கி­யது.

கிறிஸ்­து­மஸ் பண்­டி­கையை முன்­னிட்டு, ஆத­ரவு தேவைப்­படும் இப்­பி­ரி­வி­ன­ருக்கு, தொண்­டூ­ழி­யர்­கள் உத­வி­யு­டன் கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

நோய்த்­தொற்­றுக் காலத்­தின்­போது, வீடற்­றோ­ருக்­கெ­னத் தங்­க­ளின் கத­வு­க­ளைத் திறந்­தது இந்த லாப நோக்­கமற்ற அமைப்பு.

அன்­றி­லி­ருந்து இன்­று­வரை இவர்­க­ளுக்கு இந்த அமைப்பு தங்­கு­மி­டம் ஏற்­ப­டுத்­தித் தந்­த­தோடு, ஒவ்­வொரு வியா­ழக்­கி­ழ­மை­யன்­றும் இவர்­க­ளுக்­குப் பல வித­மான நட­வ­டிக்­கை­களை­யும் ஏற்­பாடு செய்து வரு­கிறது.

அவ்­வாறு கிறிஸ்­து­மஸ் பண்­டியை முன்­னிட்டு, கடந்த 15ஆம் தேதி மாலை­யில், குடும்ப ஆத­ர­வின்றி தவிக்­கும் இவர்­க­ளுக்கு இல­வச இர­வு­ண­வும் பண்­டி­கைக் கால குதூ­க­ல­மும் கிடைத்­தன.

இங்கு தொண்­டூ­ழி­யம் செய்து வரும் சிலர், கிறிஸ்­து­மஸ் கீதங்­க­ளைப் பாடி­ய­தோடு, அங்கு தங்குபவர்­களை உற்­சா­கம் ஊட்­டும் வித­மாக பல விளை­யாட்­டு­க­ளி­லும் ஈடு­ப­டுத்­தி­னர். அதைத் தொடர்ந்து, இங்கு இரண்டு ஆண்டு ­க­ளாக தொண்­டாற்றி வரும் சமூக சேவை­யா­ளர் திரு சாமு­வேல் குமார், 58, கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்ட அனை­வ­ருக்­கும் திரு­வி­வி­லி­யத்­தில் இடம்­பெ­றும் இயே­சு­வின் கதை­க­ளைக் கூறி­னார்.

“இவர்­க­ளின் வாழ்க்­கைக்கு என்­னால் முடிந்­த­வரை ஒளி ஊட்டு­வேன். வாரந்­தோ­றும் நானும் என் மனை­வி­யும் இங்கு தொண்டூழி­யத்­தில் ஈடு­படுவது என் மன­திற்கு திருப்தி அளிக்­கிறது,” என்­றார் திரு சாமு­வேல்.

30 ஆண்­டு­க­ளுக்கு மேலாக சிறை­யில் இருந்த 55 வயது திரு ராபர்ட் ஜோசஃப், இத்தனை ஆண்டுகளாக கிறிஸ்­து­மஸ் பண்­டி­கை­யின்­போது, தான் சிறை­யில் இருந்­ததை நினை­வு­கூர்ந்­தார்.

சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யா­கி­யுள்ள நிலை­யில், இந்த அமைப்­பில் மூன்று வாரங்­களாக தங்கி உள்­ளார். பெற்­றோரை இழந்த இவர், தன்­னு­டைய சகோ­த­ரி­யை அன்­றா­டம் தொடர்புகொள்கிறார்.

அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இந்த கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­ட­மும் இதர நிகழ்­வு­களும் தம்­மைப் போன்­ற­வர்­க­ளுக்கு வாழ்­வில் ஒரு மாற்­றத்தை அளிப்­ப­தா­க­வும் சமு­தா­யத்­தில் தம்மை ஏற்­றுக்­கொள்ள மக்­கள் இருக்­கி­றார்­கள் என்ற நம்­பிக்­கை­யைத் தரு­வ­தா­க­வும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!