புகழ்பெற்ற ஆய்வாளரின் வெற்றிப் படிப்பினைகள்

குறிக்கோள் என்பது உடனே முடிவாவது அல்ல. ஒருவர் தன் இலக்கைப் பற்றி நிதானமாகப் பரிசீலிப்பதே பின்னாளில் வெற்றியைத் தேடித் தரும் என்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானி, 57 வயது ‘சார்’ சங்கர் பாலசுப்ரமணியன்.

பிரிட்டனில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான இவர், வேதியியல் பேராசிரியர் ஆவார்.

பேராசிரியர் பாலசுப்ரமணியன் உருவாக்கிய ‘என்ஜிஎஸ்’ முறை, நோய்கள் உள்ளிட்ட உயிரியல் தோற்றப்பாடுகள் தொடர்பான மரபணுத் திரிபுகளை ஆய்வு செய்வதற்கு, ‘டிஎன்ஏ’ அல்லது ‘ஆர்என்ஏ’ நிர்ணயம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. மனித உடல் ஆரோக்கியமே இந்த ஆய்வுக்கான உந்துதல் என பேராசிரியர் பாலசுப்ரமணியன் குறிப்பிட்டார்.

பிரிட்டனிலும் அனைத்துலக அளவிலும் அங்கீகாரம் பெற்றவர் பேராசிரியர் பாலசுப்ரமணியன். அறிவியலுக்காகத் தன்னை அர்பணித்த இவர், காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் அரசியாரிடமிருந்து இளவரசர் வில்லயம் மூலமாக ஜனவரி 2017ல் ‘சார்’ பட்டத்தைப் பெற்றார்.

சென்னையில் பிறந்து இங்கிலாந்தில் வடக்குப் பகுதியில் இவர் வளர்ந்தார். தம் வயது ஒத்த சிறுவர்கள் பலரைப் போலத் தானும் காற்பந்து வீரர் ஆக ஆசைப்பட்டதாகவும் அதேநேரத்தில் படிக்கவும் பிடித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கத் தமது வேதியியல் ஆசிரியர் ஊக்குவித்தபோதும் இறுதியில் திரு சங்கர் வேதியியலையே தம் துறையாகத் தெரிவு செய்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1985 முதல் 1988 வரை இயற்கை அறிவியலை இளநிலையில் பயின்றார்.

அதன் பின்னர் அமெரிக்காவில் ஈராண்டு ஆய்வுசெய்து மறுபடியும் கேம்ப்ரிட்ஜுக்குத் திரும்பி முனைவருக்கான ஆய்வுப் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டார். ‘கோரிஸ்மெத் சிந்தேஸ்’ என்ற நொதிப்பொருளுக்கான வேதிவினை (chemical reaction) பற்றி அவர் ஆய்ந்தார். பேராசிரியர் பாலசுப்ரமணியன் தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கூடங்களை இயக்கி வருகிறார்.

தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் உலக இளம் அறிவியல் வல்லுநர்களுக்கான உச்சநிலைச் சந்திப்பில் இவ்வாண்டு பங்கேற்கும் 350க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். ஜனவரி 8ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை நடைபெற்ற இந்த மாநாட்டிற்காக உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களில் உரைகளிலும் சந்திப்புகளிலும் ஈடுபடுவர்.

தமது பயணம் சீரான நேர்பாதை அன்று எனக் குறிப்பிட்ட திரு பாலசுப்ரமணியன், ஒவ்வொரு படிநிலையும் அணுகும் முறையில்தான் உள்ளது என்று கூறினார்.

ஆய்வாளராக முதன்முதலாகத் தம் ஆய்வைத் தொடங்கியபோது தொடக்கத்தில் சொந்தமான ஆய்வுக்கூடமோ நிதியோ இல்லை.

“என்வசம் யோசனைகள் மட்டுமே இருந்தன. மற்ற வளங்களைச் சேகரிப்பதற்குக் காலம் எடுத்தது. முதல் சில ஆண்டுகளுக்கு ஆய்வாளராகத் தொடங்கும்போது இந்நிலை நிலவியது,” என்று அவர் கூறினார்.

நடக்கப்போவது என்ன என்ற உத்தரவாதமின்றியும் வருங்காலத்தின்மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற அறிவுரையை இளம் ஆய்வாளர்களுக்குப் பேராசிரியர் பாலசுப்ரமணியன் முன்வைக்க விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!