பிரெஞ்ச் டோஸ்ட் சமையல் குறிப்பு

பிரெஞ்ச் டோஸ்ட் என்பது எளிய முறையில் தயாரிக்கும் சுகமான காலை உணவு. முட்டை கலவையில் ரொட்டியை நனைத்து, தோசைக்கல்லில் சுட்டு, தேன் அல்லது சீனியைத் தூவி இந்தக் காலை உணவை ஏறத்தாழ 15 நிமிடங்களில் தயாரித்து விடலாம். உங்களுக்காக பிரெஞ்ச் டோஸ்ட் சமையல் குறிப்பு!   

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

பரிமாறல் அளவு: 3 பேர்

 

பிரெஞ்ச் டோஸ்ட்

தேவையான பொருட்கள்

ரொட்டித் துண்டுகள்: 10

முட்டை: 2

பால்: 1/2 கப்

சீனி: 4 மேசைக்கரண்டி + தேவைக்கேற்ப

வெண்ணெய் அல்லது நெய்: தேவைக்கேற்ப

 

பிரெஞ்ச் டோஸ்ட் செய்யும் முறை

1. முதலில் முட்டையுடன் பாலும் சீனியும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.

2. பின்பு தோசைக்கல்லைக் காயவைத்து நெய் இட்டு, ரொட்டித் துண்டுகளை ஒவ்வொன்றாக முட்டையில் தோய்த்து, இருபக்கமும் சுட்டெடுக்கவும். சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.

 

குறிப்பு: ஆரோக்கியமாகச் சாப்பிட கொழுப்பு குறைவான முட்டையும் முழுதானிய அல்லது பலதானிய ரொட்டியும் பயன்படுத்தலாம்.