செந்தோசாவில் தீபாவளி கொண்டாட்டம்: பிரபல பாடகர் கார்த்திக் இசை விருந்து

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் மன்றம் ஏற்பாட்டில் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் பிரம்மாண்ட தீபாவளி கொண்டாட்டம்  நாளை, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. 
கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக தமிழ்--இந்திப் பாடல்களைப் பாடி வருகையாளர்களை மகிழ்விக்கவுள்ளார் பிரபல பிண்ணனிப் பாடகர் கார்த்திக். 
இரண்டு மணி நேர இசை விருந்துக்கு இசையமைக்க அவருடன் உலகத் தர இசையமைப்பாளர்கள் வரவிருக்கின்றனர். 
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் ஹார்ட் ரோக் ஹோட்டல், ‘தி கொலோசியம்’ எனும் அரங்கில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது. 
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிரும்பும் பொதுமக்கள் 6222 2855 அல்லது 6508 0146 எனும் தொலைபேசி எண் மூலமாகவோ deepavali2018@SICCI.com இணையப்பக்கம் மூலமாகவோ நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம். 
மன்றம் உறுப்பினர்களுக்கு $130 மற்றவர்களுக்கு $150 என்று நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. முழு மேசைக்கான நுழைவுச்சீட்டுகளும் விற்பனைக்கு உள்ளன. 
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் வழங்கும் சுவையான உணவு ‘புஃபே’ வகையில் வழங்கப்படும். 
கவர்ச்சிமிகு அதிர்ஷ்டக் குலுக்கள் பரிசுகளும் வழங்கப்படும்.