ஆய்வு: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஐம்பது லட்சம் பேர் வேலை இழந்தனர்

பெங்களுரு: பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
கடந்த 2011ஆம் ஆண்டு முதலே நாட்டில் வேலை வாய்ப் பின்மை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாக அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. பெங்க ளூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதற் கான தரவுகளை அவர்கள் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தில் இருந்து பெற்றுள்ளனர்.
“கடந்த 2011ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்தே வேலை வாய்ப்பின்மையின் அளவு சீராக அதிகரித்து வந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்த அளவீடானது 6 விழுக்காடாக அதிகரித்தது.
“2011 முதல் 2018ஆம் ஆண் டுக்குள் நாட்டில் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்திருக்கி றது,” என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வசிப்போரும் வேலை வாய்ப்பின்மையால் பாதிக் கப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு துவக்கத்தில் வேலையில் இருப்போரின் எண்ணிக்கை 78 விழுக்காடாக இருந்தது எனில், 2018இல் இந்த அளவானது 68 விழுக்காடாக குறைந்துள்ளது. 
அதே போல் நகர்ப் புறங்களிலும் வேலை செய்வோரின் எண் ணிக்கை 68 விழுக்காட்டில் இருந்து 65ஆக குறைந்துள்ளது. 
பண மதிப்பிழப்பு நடவடிக் கைக்குப் பின் வேலை வாய்ப்பில் புயல் போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார் இந்த ஆய்வறிக்கையை தயாரித்த அமித் பசோல்.
“வேலைக்காக காத்திருக்கும் இளையர்கள், படித்து முடித்து கனவுகளோடு வரும் இளையர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டிய பொதுத்துறை நிறுவனங் கள் உருக்குலைந்துள்ளன. மேலும் தனியார் நிறுவனங்களாலும் புதிய வேலைகளை உருவாக்கும் சக் தியை இழந்துவிட்டன,” என்று சுட்டிக்காட்டுகிறார் அமித் பசோல்.
தேர்தல் சமயத்தில் இப்படி யொரு ஆய்வு முடிவுகள் வெளி வந்திருப்பது மோடிக்கு பின்னடை வாக கருதப்படுகிறது.
தேசிய நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மூலம் இந்த வேலையின்மைச் சூழலைக் கையாள முடியும் என்றும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற புதிய திட்டங் களைச் செயல்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு அறிக்கையில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை குறித்து பாரதிய ஜனதா தரப்பில் இதுவரை எந்தவிதமான எதிர் வினையும் ஆற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon