பிரசாரத்துக்கு மத்தியில் கைக்குழந்தையை  காப்பாற்ற நடவடிக்கை எடுத்த அமைச்சர்

கொச்சி: தீவிர தேர்தல் பிரசாரத் திற்கு மத்தியிலும், பச்சிளம் குழந்தையைக் காப்பாற்ற துரித கதியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.
காசர்கோட்டைச் சேர்ந்த சானியா-மித்தா தம்பதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. குழந்தையை பரி சோதித்த போது, அதற்கு இதய கோளாறு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் குழந்தையின் உடல்நிலை மோசமானதை அடுத்து, உடனடி யாக மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து குழந்தையை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும்படி பெற்றோரிடம் அறிவித்தனர்.
இது குறித்த தகவல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் சைலஜாவுக்கு தெரி விக்கப்பட்டது. ஆனால் காசர் கோட்டில் இருந்து திருவனந்தபுரத் துக்கு ஆம்புலன்சில் செல்ல 12 மணி நேரம் ஆகும் என்பதால், சைலஜா அக்குழந்தையை கொச் சியில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சேர்க்க உத்தரவிட்டார். அதற்குரிய ஏற்பாடுகளையும் அவரே செய்தார்.
உடல்நலம் குன்றிய குழந் தைக்கு கேரள அரசின் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நிலையில், காசர்கோட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை கொச்சிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்தார்.
சுமார் 400 கிலோமீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் வர வேண்டும் என் பதால், குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்பதை மனதிற் கொண்டு பொதுமக்கள் ஆம்பு லன்சுக்கு வழிவிட வேண்டும் என சமூக ஊடகங்கள் வழி சைலஜா விடுத்த வேண்டுகோள் வேகமாகப் பரவியது.
இதையடுத்து தேசிய நெடுஞ் சாலைகளில் கூட பொதுமக்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். முக்கிய போக்குவரத்து சந்திப்பு களில் போலிசார் ஆம்புலன்ஸ் நிற்காமல் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
இத்தகைய ஏற்பாடுகளின் உதவியோடு மொத்த தூரத்தை ஐந்தரை மணி நேரத்தில் கடந்து ஆம்புலன்ஸ் வாகனம் கொச்சி வந்து சேர்ந்தது. தற்போது அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!