இலக்கை நோக்கிய திட்டமிட்ட பயணம்

பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் தனது குடும்பம் சொந்த இல்­லத்தை இழந்த­போ­தும் தன்­னம்­பிக்கையைக் இழக்­க­வில்லை 24 வயது நிரம்­பிய நளேந்­தி­ரன் ராமசாமி. வற்றாத தன்­னம்­பிக்கை­யின் பயனா­கக் கடந்த மாதம் 30ஆம் தேதி இவ­ருக்­கு தேசிய இளையர் சாதனை­யா­ளர் தங்க விருது வழங்கப்­பட்­டது. விருதுகளை வழங்­கிய துணைப் பிர­த­மர் தர்மன் சண்­மு­க­ரத்­னம் இந்த விருதுத் திட்டம் முக்­கி­ய­மான ஒன்று என்றார். மூன்று ஆண்­டு­களுக்கு முன்னர், இவர் மேற்குப் பகு­தி­யில் அமைந்­துள்ள தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் கணினி கட்­டமைப்­புப் பாது­காப்பு தொழில்­நுட்­பப் படிப்பை மேற்­கொண்ட­போது, ஆசி­ரி­யர்­களின் மூல­மா­கத் தேசிய இளையர் சாதனை­யா­ளர் விருதைப் பற்றி அறிந்து கொண்டார்.

விருதை பெற வேண்டும் என்ற உறு­தி­யான விருப்­பம் அவ­ருக்­குள் பிறந்தது. சமூக சேவை, புதுத் திறன்களைக் கற்றல், குடி­யி­ருப்பு ஒப்­படைப்­பில் ஈடு­படு­தல், முகாம்­களில் கலந்­து­கொள்­ளு­தல் போன்ற நட­வ­டிக்கை­களில் அவர் முனைப்­பு­ட­னும் துடிப்­பு­ட­னும் ஈடுப்­பட்­டார். குடி­யி­ருப்பு ஒப்­படைப்­பிற்­காக இவர் மங்க­ளூ­ரு­வில் உள்ள ஆத­ர­வற்ற குழந்தை­கள் இல்­லத்­திற்­குச் சென்று இணையப் பக்­கங்களை உரு­வாக்­கு­வது எப்படி என்­பதைப் பற்றி மாணவர்களுக்­குக் கற்­றுக்­கொ­டுத்­தார்.

"நான் பேசும் ஆங்­கி­லத்தை அச்­சி­று­வர்­கள் எளிதில் புரிந்­து­கொள்­ள­வில்லை. எனவே அவர்­களி­டம் உரையாட சற்றுத் தயக்­க­மாக இருந்தது. இருப்­பி­னும், நான் கற்ற விஷ­யங்களை மாண­வர்­களி­டம் பகிர்ந்­து­கொண்டபோது, திருப்­தி­யாக இருந்தது," என்று தெரி­வித்­தார் நளேந்­தி­ரன். "படிப்பை­யும் சமூகப் பணி­களை­யும் சமா­ளிப்­பது சவாலாக இருந்த­போ­தும் குடும்பத்­தி­ன­ரின் ஆத­ர­வோ­டும் நண்­பர் ­களின் உறு­துணை­யோ­டும் என்னால் தடை­களைக் கடந்து வெற்றி பெற முடிந்தது. வார இறுதி நாட்­களில் பல நட­வ­டிக்கை­களில் ஈடு­பட்­ட­தால் குடும்பத்­து­டன் அதிக நேரத்தை என்னால் செல­வ­ழிக்க இய­லா­மல் போனது," என்றார் நளேந்­தி­ரன்.

சென்ற மாதம் தேசிய சேவையை முடிந்த இவர், தற்போது தீவிர­மாக வேலை தேடிக்­கொண்­டி­ருக்­கிறார். காவல் துறையில் பணி­யாற்ற விருப்­ப­ம் உள்ளதாக நளேந்திரன் தெரி­வித்­தார். 1992ஆம் ஆண்டு தொடங்கப்­பட்ட இந்த விருதுத் திட்டம் மாண­வர்­களிடையே பொறுமை, சுய­சார்பு, சமூ­கத்­துக்­குத் திருப்பி அளித்­தல் போன்ற பண்­பு­களை வளர்க்­கும் நோக்கில் உரு­வாக்­கப் ­பட்­டது. "வாழ்க்கைப் பய­ணத்­தில் கடந்­து­வ­ரும் சவால்­கள் மனி­தனை செம்மைப்படுத்த உதவும். வாழ்க்கை சுல­ப­மான ஒன்று அல்ல. ஆனால் திடமான மனப்­பான்மை இருந்தால் வாழ்க்கை சுவையாக அமையும்," என பூரிப்­பு­டன் சொன்னார் நளேந்­தி­ரன்.

இவ்வாண்டு தேசிய இளையர் சாதனையாளர் விருதுபெற்ற தொழில்நுட்ப கல்விக் கழக மாணவர்கள் 62 பேரில் ஒருவர் நளேந்திரன் ராமசாமி. படம்: நளேந்திரன் செய்தி: நித்திஷ் செந்தூர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!