‘மிஸ் ஏ‌ஷியா 2016’ போட்டியில் முதல் 5 நிலைகளில் இடம்பெற்ற ஸ்மி­தா­

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

எந்தச் செயலிலும் முதல் படியை எடுப்­பதே மிகக் கடினம் என்பதை பலர் கூறக் கேட்­டி­ருக்­கி­றோம். சுமார் ஈராண்­டு­களுக்கு முன் குமாரி ஸ்மி­தா­வும் அந்த நிலை­யில்­தான் இருந்தார். இந்திய திரைப்­ப­டங்களில் தோன்றும் நடிகை­கள்போல் தானும் சேலையில் பவனி வர வேண்டும் என்ற ஆசை அவ­ருக்கு இருந்தது ஆனால் இதனை­யெல்­லாம் செய்ய முடியுமா என்ற ஐயமும் அவ­ருக்­குள் மேலோங்கி இருந்தது. முயற்சி ஏதும் செய்யாவிட்­டால் தனது தரம் என்னவென் பதை அறிந்துகொள்ள ­மு­டி­யாது என்பதை உணர்ந்து, தைரி­ய­மாக ஜூரோங் கிரீன் சமூக மன்றம் நடத்­திய சேலை அழ­கு­ராணிப் போட்­டி­யில் இவர் பங்­கு­பெற்­றார். அம்முறை அவர் வெற்­றி­யா­ளர் கிரீ­டத்தை வெல்­ல­வில்லை; ஆனால் பங்­­கெ­டுத்த முதல் போட்­டி­யி­லேயே சிறந்த ஆளுமைக்கான விருதைப் பெற்றது ஸ்மி­தா­வுக்கு ஊக்கம் தந்தது.

தனது தன்­னம்­பிக்கையை மேலும் வளர்த்­துக்­கொள்ள சேலை விளம்ப­ரங்களில் இவர் இடம்பெ­றத் தொடங்­கினார். பிறகு, இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம் சிங்கப்­பூ­ரில் நடைபெற்ற ஆசிய அனைத்­து­லக சேலை அழ­கு­ரா­ணிப் போட்­டி­யில் மகுடம் சூடினார். சிங்கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தில் முழு நேரமாக தாதியர் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டு, பகுதிநேரமாக மருத்­து­வ­மனை­யி­லும் வேலை செய்துவந்த நிலையில் பல நாட்­க­ளாக ஒத்­திகை­களுக்குச் சென்று இந்தப் போட்டியில் அவர் வென்றார்.

அக்­டோ­பர் மாதம் மற்றொரு அனைத்­து­லக அழ­கு ­ராணி போட்­டி­யில் சிங்கப்­பூரைப் பிர­தி­நி­திக்க லாஸ் வேகாஸ் செல்­கிறார் ஸ்மிதா. படம்: லூமியர் இண்டர் நேஷனல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!