உழைப்புக்குக் கிடைத்த உன்னத விருது

வில்சன் சைலஸ்

எதிர்காலம் பற்றிய தெளிவு இல்லாமல் 2010ஆம் ஆண்டு தொழில்­நுட்­பக் கல்விக்கழ­கத்தில் படிப்பைப் பாதியில் கைவிட்டு வெளியேறியவர் சரண்­நாத் தேவ­நா­தன். இப்போது சிங்கப்­பூர் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் மின்­ன­ணு­வி­யல் பொறி­யி­யல் துறையில் பயின்று வரும் இவர், தொழில்­நுட்­பக் கல்விக்கழகத்தில் விரி­வுரை­யா­ள­ராகப் பணி­யாற்ற வேண்டும் என்ற குறிக்­கோ­ளு­டன் இருக்­கிறார். தேசிய சேவை­யின்­போது கிடைத்த அனு­ப­வங்களே தமக்குள் ஏற்பட்ட மாற்றங்களுக் குக் காரணம் என்றார் சரண், 23. கடற்­படை­யில் சேவை­யாற்­றி­ய­போது 'முழுநேர ராணுவ வீர­ரா­க­லாம்' என்ற எண்ணம் கொண்­டி­ருந்த சர­ணி­டம் கல்­வியைத் தொட­ரும்ப­டி­ பலரும் ஊக்­கு­வித்­த­னர். "நல்ல வேளையாக மீண்டும் தொழில்­நுட்­பக் கல்விக்கழ­கத்­தில் சேர்ந்­தேன். வாழ்க்கை­யில் முன்னேற கல்வி எவ்­வ­ளவு முக்­கி­யம் என்பதை இப்போது உணர்ந்­துள்­ளேன்," என்றார் அவர். தொழில்­நுட்­பக் கல்விக்கழ­கத்­தில் பயின்ற­போது சிறந்த சேவை நட்­சத்­திர விருது, கல்வி சாதனை விருது, புறப்­பா­டத் தங்க விருது, துறைசார்ந்த விருது எனப் பல்வேறு விரு­து­களைக் குவித்­துள்­ளார் சரண். அப்­பட்­டி­ய­லில் இப்போது சிண்டா­வின் உன்னத விருதும் இணை­கிறது.

சிண்டாவின் உன்னத விருது பெற்ற (இடமிருந்து) கிளாரா லாவண்யா அப்­பொ­லோஸ், சரண்­நாத் தேவ­நா­தன், வள்­ளி­யம்மை மீனா. படம்: சாவ் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!