தரவரிசையில் முன்னேறிய உள்ளூர் பல்கலைக்கழகங்கள்

உள்­ளூர்ப் பல்­கலைக்­க­ழ­கங்க­ளான சிங்கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கம், நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் ஆகிய இரண்­டும் உலகத் தர­வ­ரிசை­யில் முன்­னேற்­றம் கண்­டுள்­ளன. அண்மை­யில் வெளி­யி­டப்­பட்ட 'டைம்ஸ்' உயர்­கல்வி அனைத்­து­ல­கப் பல்­கலைக்­க­ழ­கத் தர­வ­ரிசை­யில் சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கம் 24ஆம் இடத்தை­யும் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் 54வது இடத்தை­யும் பிடித்­தன. சென்ற ஆண்டு சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கம் இந்தத் தர­வ­ரிசை­யில் 26வது இடத்தைப் பிடித்­திருந்தது. ஆசிய அளவில் சிறந்த பல்­கலைக்­க­ழ­கம் என்ற தகு­தியை­யும் சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்க­ழ­கம் இரண்டா­வது ஆண்டா­கத் தொடர்ந்து தக்­க வைத்­துள்­ளது.

'குவாக்­கு­வா­ரெல்லி சைமண்ட்ஸ்' அனைத்­து­ல­கப் பல்­கலைக்­க­ழ­கத் தர­வ­ரிசை­யில் சிங்கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கம், நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் ஆகிய இரண்­டும் சென்ற ஆண்டைப்­போ­லவே முறையே 12வது, 13வது இடங்களைத் தக்­கவைத்­துக்­ கொண்டன. உள்­ளூர்ப் பல்­கலைக்­க­ழ­கங்களில் உள்ள தரம் மிகுந்த கல்வியாளர்­கள், இங்கு மேற்­கொள்­ளப்­படும் ஆய்­வு­களின் தாக்கம் ஆகி­ய­னவே தர­வ­ரிசை­யில் அவை முன்­னே­றக் காரணம் என்று இவ்விரு பல்­கலைக்­க­ழ­கங்களின் அதி­கா­ரி­கள் குறிப்­பிட்­ட­னர்.

மேலும், இந்த இரு பல்­கலைக்­க­ழ­கங்களும் வெளி­நாட்­டுத் திறனாளர்களை வெகுவாக ஈர்ப்­ப­தாக 'டைம்ஸ்' தர­வ­ரிசை­யின் ஆசி­ரி­யர் திரு ஃபில் பேட்டி கூறி­யுள்­ளார். சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கம் வலுவான ஆய்வுச் சூழலைக் கொண்­டுள்­ள­தா­க­வும் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் அதன் ஆய்வுப் பணி­களின் தாக்­கங்க­ளால் நிறு­வ­னங்­களி­லி­ருந்து திட்­டப் ­ப­ணி­களை­யும் அதன் தொடர்­பில் நிதியை­ப் பெறு­வ­திலும் வெற்­றி பெற்றுள்ளதா­க­வும் திரு ஃபில் குறிப்­பிட்­டு­ள்ளார். மேலும், சிங்கப்­பூர் அர­சாங்கம் அதன் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 2.2% ஆய்­வுக்­கா­கப் பயன்­படுத்­து­வ­தா­க­வும் இது சீனா, பிரிட்­டனை­விட அதிகம் எனவும் அவர் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!