சீரான வாழ்வுக்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறை உன்னதம்

உடலுக்கு வலுவூட்டும் உடற்பயிற்சிகள்

பதின்ம வயதில் குறைந்த எடை கொண்டிருந்த திரு கோபிகாந்த், தமது வலுவற்ற உடலை எண்ணித் தாழ்வு மனப்பான்மை கொண்டு இருந்தார். அதைச் சரிக்கட்டத் தம் நண்பர்களுடன் சேர்ந்து உடற் பயிற்சிக் கூடத்திற்குச் செல்லத் தொடங்கிய கோபிகாந்த், பல்வேறு உடற்பயிற்சிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகின்ற கோபிகாந்த் தமது வழக்கமான உடற்பயிற்சித் திட்டத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்:

 வாரத்துக்கு 3 முறை உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று தசைகளை வலுப்படுத்த எடை தூக்கும் பயிற்சிகள் செய்தல்

 ‘கார்டியோ’ பயிற்சிகளில் ஈடுபடுதல்

 வாரம் ஒருமுறை ‘சிட்-அப்,’ ‘பு‌ஷ்-அப்’ பயிற்சிகள் செய்தல்

 ‘யூடியூப்’ காணொளிக் காட்சிகளில் கற்றுக் கொடுக்கப்படும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றி பயிற்சி செய்தல்

 ஓய்வு நாட்களில் நீண்ட தூரம் நடப்பது

இளமையிலேயே ஆரோக்கிய உணவுப்பழக்கம்

எதிர்காலத்த்துக்காக நன்கு திட்டமிட்டுச் செயல்படுவதால் பல இன்னல்களைத் தவிர்க்கலாம் என்று நம்பும் கோபிகாந்த், பழம், காய்கறிகளைத் தமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்கிறார். காலையில் ‘ஓட்ஸ்’, பகலில் குறைந்தளவு சாதம், இரவில் வேக வைத்த மீன், கோழி போன்ற உணவுகளைச் சாப்பிடுகிறார். “வேலை நேரத்தில் புத்துணர்ச்சியோடு செயல்படுவதற்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் துணைபுரியும்,” என்றார் கோபிகாந்த்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  

03 Jun 2019

தமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு