மேலோங்கிய உணர்வுக்கு மேன்மை விருது

எஸ்.வெங்கடேஷ்வரன்

தம்முடைய பதினைந்தாவது வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த தாயாரை இழந்தார். 20 வயதாக இருந்தபோது தந்தையும் நோய்க் குப் பலியானார். இவ்வாறு, ஒரு பிள்ளைக்கு வாழ்க்கையில் பக்க பலமாக இருக்கக்கூடிய இரு தூண்களையும் சிறுவயதிலேயே இழந்தவர் திரு செல்வாராஜு. ஆனால், தமக்கு ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மீண்டுவந்து ஆற்றிய சமூக சேவைகளுக்காக 'ஹார்வர்ட் புக் பிரைஸ்' விருதைப் பெற்று, காலஞ்சென்ற தம் பெற்றோ ருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் இந்த இளைஞர்.

பிறர்க்கு சேவை குணத்துடன் உதவி நல்கிவரும் திரு செல்வாராஜு ஆறுமுகத்திற்கு வயது 26. இவர் எளிதில் பாதிப் படையக்கூடிய நிலையில் இருக் கும் இளையர்களுடனும் சிறப்புத் தேவைகளுள்ள குழந்தைகளு டனும் இணைந்து அவர்களுக் குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கி வரு கிறார். சிங்கப்பூரின் ஹார்வர்ட் பல் கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் 'ஹார்வர்ட் புக் பிரைஸ்' விருதைப் பெற்ற முதல் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல் லூரி மாணவர் என்ற பெருமையும் செல்வாராஜுவைச் சாரும்.

தன்னலமின்றி கருணை உள் ளத்துடன் நீண்டகாலம் சேவை ஆற்றும் இளையர்களை அங்கீ கரித்துத் தரப்படும் விருது இது. இருப்பினும் திரு செல்வாராஜு கடந்து வந்த பாதை சோகம் கலந் தது. அவருக்கு 13 வயதாக இருந்தபோது அவரின் தாயார், திருமதி மாதவி சேதுராமனுக்குக் கொடிய நீரிழிவு நோய் வந்தது. அதனால் அவரின் காலைத் துண் டிக்க வேண்டியிருந்தது. அதன் பின் சிறுநீரக செயலிழப்பாலும் மாரடைப்பாலும் திருமதி மாதவி தமது 47ஆவது வயதில் காலமானார்.

திருமணம் செய்துகொண்டு தங்கள் சொந்த வீடுகளுக்குச் சென்றுவிட்டனர் திரு செல்வாராஜு வின் இரு மூத்த சகோதரிகள். இதனால், நோயுற்ற தந்தை திரு ஆறுமுகம் முத்துதுரையைக் கவனித்துக்கொள்ளும் முக்கியப் பொறுப்பை திரு செல்வாராஜு. இளம் வயதிலேயே ஏற்க வேண்டி இருந்தது.

அவர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயின்றபோது திரு ஆறுமுகம் வயிற்றுப் புற்றுநோயால் இறந்தார். அன்றுமுதல் தனியாகவே இந்நாள்வரை வாழ்ந்து வரும் திரு செல்வாராஜுவுக்கு அவரின் சகோதரிகள் நிதியுதவியும் ஆதர வும் வழங்கி வருகின்றனர். "என் இறுதித் தேர்வுக்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்புதான் என் தந்தை இறந்தார்.

"இவ்வாறு அடுத்தடுத்து என் பெற்றோரை இழந்தது எனக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்தது. வாழ்க்கையில் ஏற்படும் சவால் களை எதிர்கொள்ளும் இளையர் களின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டானது. நிதி ஆதர வும் தேவையான ஊக்குவிப்பும் இல்லாத நிலையில், நான் இருந்து இருக்கிறேன். இதனால், அத் தகைய நிலையில் இருக்கும் இளையர்களை என்னால் எளிதில் புரிந்து கொள்ளமுடிகிறது.

"தனிமை, ஆதரவின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படும் இளையர்களுக்கு உதவி செய்ய நான் விரும்புகிறேன்," என்றார் திரு செல்வாராஜு. சமூக சேவைப் பணியை உயர்நிலைப் பள்ளி நாட்களில் தொடங்கி கடந்த 13 ஆண்டு களாகத் தொடர்ந்து வருகிறார் திரு செல்வாராஜு.

தேசிய சேவையை முடித்ததும் 2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இளையர் படையில் சேர்ந்தார் அவர். ஓர் ஆண்டு அதன் தலைமைத் துவ திட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புத் தேவைகளுள்ள குழந்தை களுக்கு நிதி தொடர்பிலான அடிப்படைக் கல்வி, கணிதம் போன்ற பாடங்களைச் சுவையான முறையில் தம் குழுவினரோடு கற்றுத் தந்தார்.

"இந்த ஓராண்டுத் திட்டத்தில் ஓர் அங்கமாக இருந்து, சிறப்புத் தேவைகளுள்ள குழந்தைகளுடன் எவ்வாறு பழகுவது என்பதைக் கற்றுக்கொண்டேன். கை சைகை கள் மூலம் உரையாடுவது, நட் பார்ந்த முறையில் பழகுவது, தொடர்புத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளைச் சமாதானப்படுத்து வதுடன், கொடுக்கப்பட்ட பணி களில் கவனம் செலுத்த வழிகாட்டு வது போன்ற அணுகுமுறைகளைக் கற்றுக்கொண்டேன்," என்று குறிப் பிட்டார் திரு செல்வாராஜு. இன்றுவரை இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்படும் பல நிகழ்ச் சிகளில் கலந்துகொண்டு தம் தொண்டூழியப் பணியை செவ் வனே ஆற்றி வருகிறார்.

தற்போது தாம் பயின்று வரும் தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் சமூக சேவை மன் றத்திலும் ஓர் உறுப்பினராகச் சமூகத் தொண்டு ஆற்றி வரு கிறார். "இன்னும் பல இளையர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும் முயற்சிகளில் ஈடுபட விரும்பு கிறேன்," என்று தம் விருப்பத்தைக் கூறிய செல்வராஜு, ஆஸ்திரேலியா விலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் தம் மேற்படிப்பை மேற்கொள்ள விரும்புவதாக தம் எதிர்கால ஆசையையும் பகிர்ந்து கொண்டார்.

பொதுநல உணர்வுக்காக தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் செல்வாராஜு ஆறுமுகம் 'ஹார்வர்ட் புக் பிரைஸ்' விருதைப் பெற்றார். படம்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!