தமிழ் இலக்கியம், திறன்பேசி மூலம் குறும்படம் தயாரிக்க பயிலரங்கு

தமிழ் இலக்கியங்களைப் பயன் படுத்தித் திறன்பேசியின் மூலம் குறும்படத்தைத் தயாரிக்கும் உத்திகளை இளையர்களுக்குக் கற் பிக்கத் ‘திரையறை’ எனும் இரு நாள் பயிலரங்கு தேசிய நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்கலைக்கழக, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக் காக 'பிளேக்ஸ்பைஸ் மீடியா' நிறுவனம் சென்ற மாதம் 9, 16 தேதிகளில் இப்பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பயிலரங்கு நடைபெற்ற அறை யிலேயே புகைப்படங்கள் பிடித்து அவற்றைக் கதையாகக் கோத்து எழுதப் பயிற்சிகள் அளிக்கப்பட் டன. அத்துடன் தமிழ்மொழிக் கற் றலை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்களுக்கு இப்பயிலரங்கில் பல தமிழ் இலக்கியங்களும் அறி முகப்படுத்தப்பட்டன.

பயிலரங்கில் பங்கேற்றோர் குழுக்களாக பிரிக்கப்பட்டுத் தங் களுக்குக் கொடுக்கப்பட்ட தமிழ்க் கவிதைகள், புனைப்பெயர்கள், கதைகள் முதலியவற்றை மைய மாகக் கொண்டு குறும்படங்களை உருவாக்கினர். ஒவ்வோர் இளை யரின் பலம், பலவீனம் ஆகிய வற்றை அவர்களையே அடையாளம் காணச் செய்து அவர்களது திற னுக்கேற்பத் திரைப்படத் தயாரிப் பில் ஈடுபட இந்தப் பயிலரங்கு வழிவகுத்ததாக கலந்துகொண்ட இளையர்களில் பலர் ஒருமித்த கருத்தைக் கூறினர். நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவி ஆர்த்தி கிரு‌ஷ்ணமூர்த்தி, 18, "ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கப் பல சாதனங்கள் தேவைப்படும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இப்பயிலரங்கு விழிப்புணர்வை ஏற் படுத்தி ஒரு வித்தியாசமான அனு பவத்தை அளித்தது," என்றார்.

"சிறந்த நடிப்புத் திறன், ஆக் கபூர்வமாக இயக்கும் திறன் முதலியவற்றை எவ்வாறு வளர்த் துக்கொண்டு திரைப்பட ரசிகர் களின் கண்களுக்கு விருந்தளிப் பது என்பதை நான் இப்பயிலரங் கில் கற்றுக்கொண்டேன். இதில் கலந்துகொண்டதன் மூலம் திரைப்படத் துறையில் எனக்கு இருந்த பற்று மேலும் அதிகரித்து உள்ளது," என்றார் அவர்.

"திரைப்படத் துறையில் பயன் படுத்தக்கூடிய உத்திகளைக் கற் றுக்கொண்ட பிறகு அதை அன் றாட வாழ்க்கையில் செயல்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக் கப்பட்டது," என்று கூறினார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக ‘லைஃப் சயன்ஸ்’ துறை மாணவியான 23 வயது ஹலிடா தன்வீர். பயிலரங்கில் பங்கேற்ற குழுக்கள், கொடுக்கப்பட்ட ஒன் றரை மணி நேரத்தில் இரண்டு நிமிடக் குறும்படத்தைத் தயாரித் தனர். முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பயிலரங் குக்கு மிகுந்த ஆதரவு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் 'சிட்ஃபி' நிறுவனத்தின் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாள ருமான 37 வயது திரு சலீம் ஹாடி. நாடகத்துறையில் விருப்பம் உள்ளவர்களை ‘சிட்ஃபி' நிறு வனம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தி: வைதேகி ஆறுமுகம் படம்: பிளேக்ஸ்பைஸ் மீடியா

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  

03 Jun 2019

தமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு